பேச்சு:பா. ஜம்புலிங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை நீக்கலாம், அல்லது இப்பதிப்புக்கு மீள்விக்கலாம்.--Kanags \உரையாடுக 11:59, 25 மே 2014 (UTC)[பதிலளி]

நீக்கிவிடலாம். சான்றுகளின் அடிப்படையில் தினமனியில் இருகட்டுரைகளும் [1], [2], புத்தான்டு மலரில் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். இவர் முக்கியமான எழுத்தாளராக இருக்கும்பட்சத்தில், இவரைப் பற்றிய கட்டுரை வேறு பயனர்கள் உருவாக்கலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:11, 25 மே 2014 (UTC)[பதிலளி]

நீக்கலுக்கான முக்கிய காரணி[தொகு]

சிறப்பு:Contributions/பா.ஜம்புலிங்கம்

நீக்கி விடலாம் அல்லது பயனர் பக்கத்துக்கு நகர்த்தி விடலாம்.
காரணம்: தன்னைப் பற்றித் தானே எழுதிக் கொண்ட கட்டுரையாக இருப்பது. (புகுபதிகை செய்யாமல் வெறும் ஐபி முகவரியாக இருந்ததால் எனக்கு இது பயனர் தன்னைப் பற்றித்தான் எழுதுகிறார் என்பது தெரியவில்லை. மேற்கோள்கள் தேவைப்படும் பகுப்பில் இருந்ததால் வழக்கம் போல நான் அதை சரிபடுத்த முனைந்தேன். ஆனால் தொடர்ந்து விக்கிக்கேற்றவாறு இல்லாததால் சில புதிய பகுதிகளை நீக்கிவிட்டு ஐபி முகவரி பேச்சுப் பக்கத்தில்[3] வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை.)--Booradleyp1 (பேச்சு) 15:59, 25 மே 2014 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையை நீக்காமல், இவரது பயனர் பக்கத்துக்கு நகர்த்தி விடலாம்--நந்தகுமார் (பேச்சு) 18:56, 25 மே 2014 (UTC)[பதிலளி]
புதிய பதிவராகத் தொடங்கியுள்ளார். அவருக்கும் முறையான உதவியை, வழிகாட்டலை வழங்கலாம். ஆர்வமுடன் பல்வேறு செய்திகளைப் பதிவு செய்யும் முயற்சியில் உள்ளார். நீக்கலுக்கான காரணம் குறித்தும், எங்கே தவறு என்பது குறித்தும் அவருக்கு தெளிவுபடுத்தல் பலன் விளைக்கும் என்று கருதுகிறேன்.

-- பயனர்:Princenrsama

பயனர் தன்னைப் பற்றி தானே கட்டுரை எழுதியது தான் காரணம் என்றால், இதற்கு முன் எண்ணற்ற கட்டுரைகள் இவ்வாறு எழுதப்பட்டுள்ளன. அனைத்தின் மீதும் சீரான அணுகுமுறை வேண்டும். இல்லை, எழுத்தாளராக இவரின் குறிப்பிடத்தக்கமை போதாது என்று கருதினால், இன்னும் கூட குறிப்பிடத்தக்கமை கேள்விக்குள்ளான பல எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரை இருக்கிறது. பார்க்க: பகுப்பு பேச்சு:தமிழ் எழுத்தாளர்கள்--இரவி (பேச்சு) 05:00, 26 மே 2014 (UTC)[பதிலளி]
இதற்கு முன் தவறு செய்யப்பட்டு இருப்பதால், இப்போது தவறு செய்வது சரியென்று ஆகிவிடாது என்பது தாங்கள் அறிந்ததே. அனைத்தும் மீதும் சீரான அணுகுமுறைக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. பிற எழுத்தாளர்கள் குறித்த குறிப்பிடத்தக்கத்தன்மை குறித்த விவாதத்திலும் விரைந்து என் கருத்துகளை பகிர்கிறேன். இக்கட்டுரை பல சிக்கலுக்குள்ளாகியிருப்பதே நீக்கல் வேண்டுகோளுக்குக் காரணம்.

சிக்கல்கள்:

  1. தன்னுடைய விவரத்தை தானே எழுதியது.
  2. பயனர் பக்கத்தினை உருவாக்குவதாக நினைத்து உருவாக்கியிருக்கலாம்.
  3. கட்டுரையில் அவர் கூறிய கருத்துகளுக்கு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
  4. இப்பயனர் வேறு எந்த கட்டுரையும் தொகுக்கவோ உருவாக்கவோ இல்லை.
  5. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களையும் அலசிய பிறகு இவர் தினமனி நாளிதழுக்காக மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளது தெரியவருகிறது.
  6. மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியதாக கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் தரப்படவில்லை.
  7. இக்கட்டுரை ஒரு விளம்பரம் போல், நடுநிலைமை இல்லாமல் காணப்படுகிறது.

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:56, 26 மே 2014 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையை ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தது வேறு ஒருவர் (இவருக்குத் தெரிந்தவர்களாகவும் இருக்கலாம்) என்றே நான் நம்புகிறேன். எனவே இப்பதிப்புக்கு இக்கட்டுரையை மீள்விக்கலாம்.--Kanags \உரையாடுக 21:14, 26 மே 2014 (UTC)[பதிலளி]

பா.ஜம்புலிங்கம் மறுமொழி[தொகு]

  1. பலரிடம் தன்னைப் பற்றிய விவரமே இருப்பதில்லை. தான் எழுதிய கட்டுரைகளுக்கு அடிகுறிப்புக்கும், ஆதாரத்திற்கும் பிறரை நாடவேண்டிய நிலை உள்ளது. ஓர் ஆய்வாளர் தான் எழுதியதை முதலில் ஆவணப்படுத்துவது இன்றியமையாதது என்பது என் எண்ணம். அந்நிலையில் முடிந்தவரை நான் எழுதியுள்ளவற்றின் நகல்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.
  2. பயனர் பக்கத்தில் நுழையாமல் கட்டுரை எழுதலாம் என எண்ணி, பின்னர் சிரமப்பட்டு ஆரம்பித்தேன்.
  3. 1940க்குப் பின் (தற்போது சோழ நாட்டில் பௌத்தம் என்ற முனைவர் பட்ட ஆய்வு மூலமாக) நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களுக்கு களப்பணி மேற்கொண்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களப்பணியில் பல சமணர் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இவ்வாறான குறுகிய கால இடைவெளியில் புத்தர் சிலைகள் இதற்கு முன் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் பற்றிய செய்திகள் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கைச் செய்திகளாக வந்துள்ளபோதிலும் இடத்தின் அருமை கருதி குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. கருத்தோடு ஆதாரத்தை அன்புகூர்ந்து ஒப்புநோக்க வேண்டுகிறேன். தமிழக, பௌத்த, தொல்லியல் வரலாற்றுக்கு இந்த ஆதாரங்கள் மிகவும் முக்கியமானவையாகும். பல வரலாற்றறிஞர்கள் இதன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக்கூறி பாராட்டியுள்ளனர்.
  4. இது முதல் பதிவு. தொடர்ந்து கட்டுரை தொகுக்க உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதைக் கனிவுடன் தெரிவிக்கிறேன்.
  5. 60க்கும் மேற்பட்ட உலகளாவிய, மாநில அளவிலான கருத்தரங்களில் கலந்துகொண்டு கட்டுரை அளித்துள்ளேன். 80க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். இடத்தின் அருமை கருதி தற்போது இரு வலைப்பூக்களில் எழுதி வருகிறேன். தினமணி, தமிழ் இந்து ஆகிய இதழ்களில் மட்டுமன்றி தமிழ்ப்பொழில், அறிக அறிவியல் உள்ளிட்ட பல இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளேன். பல சிறுகதைகள் எழுதியுள்ளேன். இடத்தின் அருமை கருதி பலவற்றை சேர்க்கவில்லை.
  6. மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியதற்கான ஆதாரங்கள் தற்போது தரப்பட்டுள்ளன.
  7. வரலாற்றிற்கு முக்கியமான ஆதாரங்களைத் தேடி கண்டுபிடித்து ஓர் ஆய்வாளன் செயல்படும்போது அதே அளவிற்கு ஆவணப்படுத்துதலுக்கும் முக்கியத்துவம் தரவேண்டிய சூழல் உள்ளது. அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டு தமிழக வரலாற்றிற்கு ஒரு முக்கியமான பங்களிப்பினைச் செய்ய வேண்டிய ஆர்வம் ஒரு பொருண்மையில் ஈடுபட வைத்தது. தவிரவும் வருங்காலத் தலைமுறையினருக்கு இவை எடுததுச்செல்லப்படவேண்டும் என்ற எண்ணமும்கூட அதற்குக் காரணம். வரலாற்றிற்கான அடிப்படைத் தரவுகளாக இவை அமைவதோடு பிற்காலத்தில் அப்பொருண்மை தொடர்பான கருதுகோள்களை மாற்றவும் இவை உதவும். இங்கு விளம்பரம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதைத் தெரிவிக்க விழைகின்றேன்.

- பா.ஜம்புலிங்கம்

தங்கள் விளக்கத்துக்கு நன்றி. தங்களைப் பற்றிய முழுமையான தகவல் தங்கள் பயனர் பக்கத்தில் தொடர்ந்து இருக்கட்டும். விக்கிப்பீடியாவில் தன்வரலாற்றுக் கட்டுரைகளை வரவேற்பதில்லை என்பதால், கட்டுரைப் பக்கத்தில் தங்கள் ஆய்வை மட்டும் முன்னிலைப்படுத்திச் சுருக்கி எழுதியுள்ளேன்.--இரவி (பேச்சு) 04:26, 27 மே 2014 (UTC)[பதிலளி]
என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க, விளக்கமளித்தமைக்கு நன்றி பா.ஜம்புலிங்கம்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:01, 27 மே 2014 (UTC)[பதிலளி]

தன்வரலாற்றுக் கட்டுரைகள் தொடர்பான அணுகுமுறை[தொகு]

கட்டுரையின் மேற்கோள்களின்படி போதுமான குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட்டுள்ளது. தன்வரலாற்றுத் தன்மையைக் குறைத்து சுருக்கி எழுதியுள்ளேன். தன்வரலாற்றுக் கட்டுரைகளை எப்படி அணுகுவது என்பதற்கு இந்தக் கட்டுரையின் மீதான அணுகுமுறை ஒரு முற்காட்டாக இருக்கலாம். எனவே, இது தொடர்பாக பயனர் கருத்துகளை வரவேற்கிறேன்.--இரவி (பேச்சு) 04:26, 27 மே 2014 (UTC) 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:20, 29 மே 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பா._ஜம்புலிங்கம்&oldid=1668540" இலிருந்து மீள்விக்கப்பட்டது