பகுப்பு பேச்சு:தமிழ் எழுத்தாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் எழுத்தாளர்கள் தொடர்பான குறிப்பிடத்தக்கமை வரையறை பரிந்துரைகளை வரவேற்கிறேன். ராஜ்சிவா, ஏகாந்தன், ஜே. இசட். ஏ. நமாஸ் கட்டுரைகள் தற்போது குறிப்பிடத்தக்கமை சிக்கலை எதிர்கொண்டுள்ளன. தெளிவான வரையறை இருந்தால் இன்னும் பல கட்டுரைகளை இதன் அடிப்படையில் மதிப்பிட்டுத் துப்புரவுப் பணியில் ஈடுபட முடியும். தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை, பல தன்வரலாற்றுக் கட்டுரைகளை எழுதுபவர்கள் என்று ஐயத்தைக் கிளப்புபவர்கள் தமிழ் எழுத்தாளர்களாகவே இருப்பதும் கவனிக்கத்தக்கது. --இரவி (பேச்சு) 19:02, 11 மே 2014 (UTC)[பதிலளி]

இங்குள்ள கொள்கை தெளிவாக உள்ளது. அதன் கருத்துக்களை உள்வாங்கி இங்கு கொள்கை வகுப்பது சிறப்பாக இருக்கும். த.வியில் கொள்கை இல்லாததால் கட்டுரைகள் தன்போக்கில் ஆதாரமற்று எழுதப்பட்டுள்ளன. கொள்கையில்படி இல்லாத கட்டுரைகள் நீக்கப்படுவதோடு, இனி எழுதப்படும் கட்டுரைகளுக்கும் அது அளவுகோளாக இருக்கும். --AntonTalk 06:16, 17 மே 2014 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பான இணக்க முடிவை எட்டுவதற்கான உரையாடல் நிகழும் சூழல் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை என்பதால் தற்காலிகமாக இந்தக் குறிப்பிடத்தக்கமை வரையறையை எட்டுவதற்கான முயற்சியைக் கை விடுகிறேன். தகுந்த இடங்களில் https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28people%29 வரையறையை முன்வைத்து உரையாடுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:40, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]