பூபதிராஜு விஜயகுமார் ராஜு
பூபதிராஜு விஜயகுமார் ராஜு
భూపతిరాజు విజయకుమార్ రాజు | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1984-89, 1989-91, 1991-94 | |
முன்னையவர் | சுபாசு சந்திர போசு அல்லூரி |
பின்னவர் | கொத்தப்பள்ளி சுப்பாராயுடு |
தொகுதி | நரசாபுரம் |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1967 -72, 1972 - 77 | |
முன்னையவர் | நாச்சு வெங்கட ராமையா |
பின்னவர் | கலிதிண்டி விஜயகுமார் ராஜு |
தொகுதி | பீமவரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் | 17 செப்டம்பர் 1936
இறப்பு | 20 நவம்பர் 1994 | (அகவை 58)
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | காந்தா கமலா கஸ்தூரி (தி. 1954) |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | சிறீ ராமாபுரம், பிமவரம் |
As of Apr, 2014 |
பூபதிராஜு விஜயகுமார் ராஜு ( Bhupathiraju Vijayakumar Raju) (பிறப்பு 17 செப்டம்பர் 1936) ஓர் அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள வேந்திரா என்ற கிராமத்தில் 1975 இல் நிறுவப்பட்ட டெல்டா காகித ஆலையை நிறுனினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]விஜயகுமார் ராஜு 1967-72ல் பீமவரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகவும், 1972-77 இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராகவும் இருந்தார்.
இவர் இந்தியாவின் எட்டாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை மற்றும் பத்தாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து 3 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [தெலுங்கு தேசம் கட்சி|தெலுங்கு தேசம் கட்சியின்]] உறுப்பினரான இவர் ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
இவரும் இவரது சக கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி 1992 ல் சிறுபான்மை காங்கிரசு அரசாங்கத்தை காப்பாற்ற பி.வி.நரசிம்மராவுக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக என். டி. ராமாராவின் கோபத்திற்கு ஆளாகினர்.[2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Partywise Comparison http://eci.nic.in/eci_main/electionanalysis/GE/PartyCompWinner/S01/partycomp10.htm
- ↑ Upendra and five other MPs out of TDP was the trust vote in favour of the then Prime Minister Narasimha Rao http://zeenews.india.com/news/nation/former-union-minister-p-upendra-passes-away_579530.html
- ↑ "Members Bioprofile - BHUPATHIRAJU, SHRI VIJAYA KUMAR RAJU". loksabha. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.