கொத்தப்பள்ளி சுப்பாராயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்தப்பள்ளி சுப்பாராயுடு
At JAC
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2012–2014
முன்னையவர்மதுநூரி பிரசாத் ராஜு
பின்னவர்பந்தரு மாதவ நாயுடு
தொகுதிநரசாபுரம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1994-1996
முன்னையவர்பூபதிராஜு விஜயகுமார் ராஜு
பின்னவர்கனுமூரி பாபி ராஜு
தொகுதிநரசாபுரம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 ஆகத்து 1959 (1959-08-24) (அகவை 64)
நரசாபுரம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்இந்திரா பிரியதர்சினி
மூலம்: [1]

கொத்தப்பள்ளி சுப்பா ராயுடு (Kothapalli Subbarayudu) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராவார். [1] ஆந்திரப் பிரதேச அரசின் அமைச்சராக இருமுறை பணியாற்றினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

ராயுடு, 1959 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரத்தில் பிறந்தார். நரசாபுரத்திலுள்ள ஒய்.என்.என். கல்லூரியில் கல்வி பயின்றார். 1981ல் இந்திரா பிரியதசினி என்பவரை மணந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சுப்பா ராயுடு, ஊராட்சி மன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். என். டி. ராமராவ் அவர்களால் ஈர்க்கப்பட்டு அரசியலில் இறங்கினார்.

தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் 1989, 1994, 1999 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நரசாபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

1996 இல், நரசாபுரம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சிரஞ்சீவியுடனான நெருங்கிய தொடர்பு காரணமாக இவர் பிரசா ராச்சியம் கட்சியில் சேர்ந்தார். 2012 இல் இந்திய தேசிய காங்கிரசுடன் பிரசா ராச்சியம் கட்சி இணைந்தபோது, இடைத்தேர்தலில், இவர் நரசாபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 5 வது முறையாக வெற்றி பெற்றார்.

பின்னர் இவர் தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். தற்போது இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார். [2] [3] [4] [5]

என். டி. ராமராவால் ஈர்க்கப்பட்ட சுப்பா ராயுடு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். தெலுங்கு தேசம் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இவர் என். டி. ராமராவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார். 1994ல் இல் என். டி. ராமராவ் முதல்வராக பதவியேற்ற போது இவரும் 9வது அமைச்சராக பதவியேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rayudu Biodara".
  2. "Kothapalli Subbarayudu takes charge as chief of Kapu Corporation". The New Indian Express. 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  3. "N Chandrababu Naidu lures Kapu leader to strengthen Telugu Desam". Deccan Chronicle. 12 May 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  4. Andhra Pradesh Acts and Ordinances. Government of Andhra Pradesh, Law Department. https://books.google.com/books?id=QpB_OknQcP0C. பார்த்த நாள்: 6 January 2021. 
  5. "Rayudu join YCP".

வெளி இணைப்புகள்[தொகு]