பசுங்கொட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிஸ்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Pistacia vera
Pistacia vera Kerman fruits ripening
Salted roasted pistachio nut with shell
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. vera
இருசொற் பெயரீடு
Pistacia vera
L.

பசுங்கொட்டை அல்லது பசும்பருப்பு (பிசுத்தாப் பருப்பு) அல்லது இன்பசுங்கொட்டை என்பது விரும்பி உண்ணப்படும் கொட்டையையும், அது பெறப்படும் மரத்தையும் குறிக்கிறது.[1]. இது முந்திரிப்பருப்புச் செடியின் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமரம். நடுகிழக்கு நாடுகளான ஈரான், துருக்கி, ஆப்கானிசுத்தான், துருக்மேனியா ஆகிய நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க, அசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும் இது தற்போது பயிரப்படுகிறது. 2019 இல் உலகின் மொத்த விளைவிப்பில் 74% பங்கு ஈரானிலும் அமெரிக்காவிலும். இது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் Pistachio எனப்படுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

உலகில் பல மொழிகளில் பிசுத்தாசியொ (Pistachio) என்றழைக்க்ப்படும் இச்சொல்லின் வரலாறு ஆங்கிலத்தில் பிஸ்தேசி ( "pistace") என்னும் இடைக்கால ஆங்கில மொழியிலிருந்து பெறப்பட்டது. அதுவும் பழைய பிரான்சிய மொழியில் இருந்தும் இலத்தீன மொழியில் இருந்தும் பெறப்பட்டது. பழம் கிரேக்க மொழியில் πιστάκιον "pistákion" என்றும் இடைக்கால பாரசீக மொழியில் "*pistak" என்றும் தற்கால பாரசீக மொழியில் پسته "pista" என்றும் அழைக்கப்பெறுகின்றது.[2]

வரலாறு[தொகு]

பிசுத்தாப்பருப்பு மரம் நடு ஆசியாவில் ஈரான் ஆப்கானித்தான் ஆகிய நாட்டுப்பகுதிகளில் இயல்பாக விளைகின்றது.[3][4][5][6]. தொல்பொருளாய்வில் பிசுத்தாப் பருப்பு கி.மு 6750 ஆம் காலப்பகுதியிலேயே பொதுவாக உண்ணப்பட்டு வந்துள்ளது என்று கண்டறிந்துள்ளார்கள்.[7] தற்கால பிசுத்தாப்பருப்பு (P. vera) முதலில் வெண்கலக் காலப்பகுதியில் (Bronze Age) நடு ஆசியாவில் பயிரடப்பட்டது. அதன் மிக முன்னதான சான்று தற்கால உசுபெக்கித்தானில் சார்க்குத்தான் (Djarkutan) என்னும் இடத்தில் இருந்து என்று கருதப்படுகின்றது.[8][9] ==விளைச்சல்--

பிசுத்தா விளைச்சல், 2019
நாடு விளைவிப்பு
(தொன்)
 ஈரான் 337,815
 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 335,660
 சீனா 106,155
 துருக்கி 85,000
 சிரியா 31,813
உலகம் 911,829
Source: FAOSTAT of the United Nations[10]

2019 இல், உலகளாவிய பிசுத்தா விளைப்பு ஏறத்தாழ 0.9 மில்லியன் தொன், இதில் ஈரானும் அமெரிக்காவும் மட்டும் சேர்ந்து முதன்மை விளைவிப்பாளராக 74%. இரண்டாவதாக சீனா, துருக்கி, சிரியா உள்ளன.[10]

சத்துகள்[தொகு]

Pistachio nuts, raw
உணவாற்றல்2351 கிசூ (562 கலோரி)
27.51 g
சீனி7.66 g
நார்ப்பொருள்10.3 g
45.39 g
நிறைவுற்றது5.556 g
ஒற்றைநிறைவுறாதது23.820 g
பல்நிறைவுறாதது13.744 g
20.27 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
1205 மைகி
தயமின் (B1)
(76%)
0.87 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(13%)
0.160 மிகி
நியாசின் (B3)
(9%)
1.300 மிகி
(10%)
0.52 மிகி
உயிர்ச்சத்து பி6
(131%)
1.700 மிகி
இலைக்காடி (B9)
(13%)
51 மைகி
உயிர்ச்சத்து சி
(7%)
5.6 மிகி
உயிர்ச்சத்து டி
(0%)
0 மைகி
உயிர்ச்சத்து ஈ
(15%)
2.3 மிகி
உயிர்ச்சத்து கே
(13%)
13.2 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(11%)
105 மிகி
இரும்பு
(30%)
3.92 மிகி
மக்னீசியம்
(34%)
121 மிகி
மாங்கனீசு
(57%)
1.2 மிகி
பாசுபரசு
(70%)
490 மிகி
பொட்டாசியம்
(22%)
1025 மிகி
துத்தநாகம்
(23%)
2.2 மிகி
நீர்4 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. பால்சு இணைய அகராதி
  2. "Pistachio".. 
  3. Marks, Gil (17 November 2010). Encyclopedia of Jewish Food (in ஆங்கிலம்). HMH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-544-18631-6. These pale green nuts covered with a papery skin grow on a small deciduous tree native to Persia, the area that still produces the best pistachios.
  4. "Pistacia vera L. | Plants of the World Online | Kew Science". Plants of the World Online. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  5. "Pistachio | Description, Uses, & Nutrition". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 May 2019. The pistachio tree is believed to be indigenous to Iran.
  6. V. Tavallali and M. Rahemi (2007). "Effects of Rootstock on Nutrient Acquisition by Leaf, Kernel and Quality of Pistachio (Pistacia vera L.)". American-Eurasian J. Agric. & Environ. Sci., 2 (3): 240–246, 2007: 240. http://pdfs.semanticscholar.org/53e4/b0db43473510e6cbadb0b076bb77791f498a.pdf. "Native P. vera forests are located in north eastern part of Iran particularly in Sarakhs region. This native P. vera is the origin of cultivated pistachio trees in Iran [1]. P. mutica is a wild species indigenous to Iran, growing with almond, oak and other forest trees common to most Alpine regions.". 
  7. "History and Agriculture of the Pistachio Nut". IRECO. Archived from the original on 8 July 2006. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
  8. D. T. Potts (21 May 2012). A Companion to the Archaeology of the Ancient Near East, Volume 1. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405189880.
  9. Harlan Walker (1996). Cooks and Other People. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780907325727.
  10. 10.0 10.1 "Pistachio production in 2018, Crops/Regions/World list/Production Quantity (pick lists)". UN Food and Agriculture Organization, Corporate Statistical Database (FAOSTAT). 2019. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுங்கொட்டை&oldid=3697152" இலிருந்து மீள்விக்கப்பட்டது