பிராமிடே
Appearance
வவ்வால் | |
---|---|
பிராமா பிராமா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பேர்கோடீயை
|
குடும்பம்: | பிராமிடே
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
வவ்வால் மீன் (=பிராமிடே)(Pomfret), என்பது பேர்சிபார்மிசு வரிசையினைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல் பகுதிகள் மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.[1] குடும்பத்தில் தற்போது ஏழு இனங்களில் 20 சிற்றினங்கள் உள்ளன.[2] இக்குடும்பத்தின் மிகப்பெரிய இனமான பிராமா பிராமா சிற்றின மீன்கள் ஒரு மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. தமிழில் இவை ஆகோலி மீன்கள் என்றழைக்கப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் இக்குடும்ப மீன்கள் உணவுக்காகப் பயன்படுகின்றன. சிறப்பாக ஆகோலி இன மீன்களை தெற்காசியப் பகுதி மக்கள் விரும்பி உண்கின்றனர்.
பேரினங்கள்
[தொகு]பின்வரும் பேரினங்கள் பிராமிடே குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:[2][3]
- பிராமா பிளாச் & சினீடர், 1801
- யூமெஜிசுடசு ஜோர்டான் & ஜோர்டான், 1922
- தெராகிலிசு குரோனோவ், 1772
- தெரிகோம்பசு பிரைசு, 1837
- தேராக்டெசு லோவ், 1843
- தாராக்டிச்திசு மீட் & மால், 1958
- சீனோபிரமா யாட்சு & நக்கமுரா, 1989
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ G. W. Mead (1972). "Bramidae". Dana Report 81: 1–166.
- ↑ 2.0 2.1 "FAMILY Details for Bramidae - Pomfrets". fishbase.mnhn.fr. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
- ↑ "Shorefishes - The Fishes - Taxa". biogeodb.stri.si.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)