பிரம்மதேசம், திண்டிவனம்
பிரம்மதேசம் Brammadesam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 12°11′51″N 79°46′47″E / 12.19750°N 79.77972°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | விழுப்புரம் மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,700 |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 604301 |
வாகனப் பதிவு | TN-16 |
அருகிலுள்ள நகரம் | புதுச்சேரி (30 கி.மீ), சென்னை (150 கி.மீ) |
பிரம்மதேசம் (Brahmadesam) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்தியக் கிராம ஊராட்சி ஆகும். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட 56 கிராம ஊராட்சிகளில் இதுவும் ஒன்று.[1] பிரம்மதேசத்திற்கான கிராமக் குறியீடு 10. இது மரக்காணம் பகுதியின் கீழ் வருகிறது (பகுதி குறியீடு.12).[2]
சொற்பிறப்பியல்
[தொகு]பிரம்மதேசம் (பிரம்மாதேசம் என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்ற சொல்லுக்குத் தமிழில் " பிரம்மாவின் நாடு" என்று பொருள். தமிழ்நாட்டில் குறைந்தது ஐந்து கிராமங்கள் இந்தப் பெயரில் உள்ளன. இவை "பிரம்மதேசம்" என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த கிராமங்களில் ஒன்று இதே மாவட்டத்தில் உள்ளது. ஆனால் விழுப்புரம் வட்டத்தில் உள்ளது. மற்ற நான்கும் முறையே திருநெல்வேலி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அமைந்துள்ளன.[3][4]
மக்கள்தொகை
[தொகு]2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பிரம்மதேசத்தின் மக்கள் தொகை 3254 ஆகும். இதில் ஆண்கள் 1636, பெண்கள் 1618 ஆவர். பாலின விகிதம் 989. இங்கு மொத்தம் 591 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கல்வியறிவு விகிதம் 69.82% ஆகும்.[5]
பொருளாதாரம்
[தொகு]பிரம்மதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் விளையும் பயிர்களில் நெல், கரும்பு, சவுக்கு, நிலக்கடலை, பருத்தி மற்றும் சில பயறு வகைகள் அடங்கும். இக்கிராமத்தில் உழவர் சந்தை ஒன்றும் உள்ளது. இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இப்பகுதியில் விளையும் காய்கறிகள், கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கால்நடை வணிகத்திற்கான முக்கிய மையமாகவும் இந்த சந்தை உள்ளது. இது அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களிலிருந்து கால்நடை வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஈர்க்கிறது.[6]
கல்வி
[தொகு]கிராமப்புற மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் அமைத்துள்ளன.[7] அரசுப் பள்ளிகளைத் தவிர, தனியார் பள்ளிகள் - கார்னர்ஸ்டோன் மழலையர் பள்ளி & தொடக்கப் பள்ளி, மற்றும் சில தனியார்ப் பள்ளிகளும் கிராமத்தில் இயங்கி வருகின்றன.
தபால் அலுவலகம்
[தொகு]பிரம்மதேசம் கிராமத்தில் திண்டிவனம் (தலைமை அலுவலகம்) கீழ் செயல்படும் துணைஅஞ்சல் அலுவலகம் உள்ளது. இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தின் ஆடவல்லிகுத்தான், ஆலங்குப்பம், கில்சிரிவி, கொளத்தூர், முன்னூர், நகர், ஓமிப்பர், பெருமுக்கல், சிறுவாடி வடநெற்குணம், வாடிப்பாக்கம் ஆகிய 11 கிளை அலுவலகங்களுடன் "604301" என்ற அஞ்சல் குறியீட்டைப் பகிர்ந்து கொள்கிறது.
காவல் நிலையம்
[தொகு]விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் அமைந்துள்ள பிரம்மதேசம் கிராம ஊராட்சி காவல் நிலையம் செயல்படுகிறது.
அரசு மருத்துவமனை
[தொகு]பிரம்மதேசம் கிராமம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளைக் கவனிப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர், வட்டார விரிவாக்கக் கல்வியாளர், ஒரு பெண் சுகாதார உதவியாளர், ஒரு கூட்டுப்பணியாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.[9]
போக்குவரத்து
[தொகு]பிரம்மதேசம் மாநில நெடுஞ்சாலையில் (மாநெ-134) அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரமான திண்டிவனத்துடன் (16 கி.மீ. தூரம்) நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை விழுப்புரம் கோட்டம் மூலம் பிரம்மதேசம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பின்வருமாறு
பேருந்து எண் | ஆரம்ப இடம் | செல்லும் இடம் |
---|---|---|
1 | திண்டிவனம் | ராயநல்லூர் |
5 | திண்டிவனம் | வண்டிப்பாளையம் |
15 | திண்டிவனம் | நல்லூர் |
22 | திண்டிவனம் | முன்னூர் |
26 | திண்டிவனம் | ஆடவல்லிகுத்தன் |
30 | திண்டிவனம் | கிளாப்பாக்கம் |
189 | மரக்காணம் | சென்னை |
140 | மரக்காணம் | திண்டிவனம் |
227 | மரக்காணம் | திண்டிவனம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Maps (Government of Tamil Nadu). "Government of Tamil Nadu Map indicating village panchayats of MarakkanamBlock". Archived from the original on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 15 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Rural Development & Panchayat Raj Department (Government of Tamil Nadu). "Government of Tamil Nadu Database indicating village panchayats of Marakkanam Block" (PDF). Archived from the original (PDF) on 26 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Indian Overseas Bank (IOB). "Village with similar name in Tiruvannamalai District of Tamil Nadu". பார்க்கப்பட்ட நாள் 15 July 2010.
- ↑ "Perambalur district - list of villages" (PDF). Archived from the original (PDF) on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 30 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://www.census2011.co.in/data/village/632657-bramaddesam-tamil-nadu.html.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ AgriTech Portal, Tamil Nadu Agricultural University (Government of Tamil Nadu). "Tamil Naduu Agricultural University portal indicating Farmers Market (Shandy) at Brammadesam village". பார்க்கப்பட்ட நாள் 15 July 2010.
- ↑ Department of Drinking Water and Sanitation, Ministry of Rural Development (Government of India). "Details Of Total Schools in Marakkanam Block of Villupuram District". பார்க்கப்பட்ட நாள் 15 July 2010.
- ↑ Tamil Nadu Police Department. "Tamil Nadu Police Web portal indicating Police station at Brahmadesam village". பார்க்கப்பட்ட நாள் 15 July 2010.
- ↑ Villupuram District Government Website. "Villupuram District Web portal indicating Primary Health Center at Brahmadesam village". Archived from the original on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 15 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)