பிரம்மதேசம் (விழுப்புரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரம்மதேசம்
பிரம்மதேசம்
இருப்பிடம்: பிரம்மதேசம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°11′51″N 79°46′47″E / 12.1975°N 79.77972222222222°E / 12.1975; 79.77972222222222ஆள்கூறுகள்: 12°11′51″N 79°46′47″E / 12.1975°N 79.77972222222222°E / 12.1975; 79.77972222222222
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பிரம்மதேசம், தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்திற்கு (தாலுக்கா) உட்பட்ட கிராம பஞ்சயத்தாகும். பிரம்மதேசம் மாநில நெடுஞ்சாலை SH -134ன் மூலம் தாலுக்கா தலைமையான திண்டிவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறு நகரமான திண்டிவனம் இங்கிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் இங்கிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது.

பிரம்மதேசம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட 56 கிராம பஞ்சயத்துகளில் ஒன்றாகும்.

பிரம்மதேசத்தின் கிராம குறியீட்டெண் 10 ஆகும். இது மரக்காணம் தொகுதியின் ( தொகுதி குறியீட்டெண்:12 ) கீழ் இடம் பெறும்.[3]

இங்குள்ள பிரம்மபுரீசுவர் கோயில், பாதலீசுவரர் கோயில் ஆகிய இரண்டும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[4]

சொல்லிலக்கணம்[தொகு]

பிரம்மதேசம் என்றும் பிரம்ஹதேசம் என்றும் இந்த கிராமம் அழைக்கப்படுகின்றது. பிரம்மதேசம் என்றால் பிரம்ம தேவனின் தேசம் என்று பொருளாகும். தமிழ்நாட்டில் பிரம்மதேசம் என்ற பெயரை இந்த கிராமம் அல்லது இரு வேறு கிராமங்கள் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுள் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ளது. மற்றொன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார் வட்டத்தில் அமைந்துள்ளது.[5]

பொருளாதாரம்[தொகு]

இங்கு இருக்கும் பெறும்பாலான மக்கள் வேளாண்மையையே (பயிர்த்தொழிலையே) தங்கள் வாழ்க்கைத் தொழிலாக கொண்டுள்ளனர். நெல், நிலக்கடலை (மணிலாக் கொட்டை), கரும்பு, சவுக்கை, பருத்தி, தர்பூசணி மற்றும் சில பருப்பு வகைகளை இங்கு பயிர்செய்கின்றனர். கிழமை (வாரம்) ஒரு முறை (புதன் கிழமை) இக்கிராமத்தில் தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக உழவர் சந்தை நடைபெறுகின்றது. இச்சந்தையில் அருகில் உள்ள கிராமங்களில் விளைந்த புதிய பச்சை காய்கறிகள், கைவினை பொருள்கள் விற்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாது இச்சந்தை, சுற்றி உள்ள 10 -15 கிராமம்களுக்கு முக்கிய ஆடுமாடுகள் கொடுக்கல்வாங்கல் (வர்த்தக) மையமாக திகழ்கின்றது.[6]

பொதுமக்கள் சேவை[தொகு]

அஞ்சல் அலுவலகம்[தொகு]

இந்திய அஞ்சல் துறை இக்கிராமத்தில் தனது சார்நிலை அலுவலகத்தை இயக்குகின்றது . இந்த சார்நிலை அலுவலகம் திண்டிவனம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றது. இக்கிராமம் அஞ்சல் குறியீட்டெண் 604301 -த்தை அருகில் உள்ள 11 கிராமம்களான அடவல்லிக்குத்தன், அலங்குப்பம், கீழ்சிவிரி, கொளத்தூர், முன்னூர், நகர், ஒமிப்பேர், பெருமுக்கல், சிறுவாடி, வடநெற்குனம், வைடப்பக்கம் பகிர்ந்து கொள்கின்றது.[7]

காவல் நிலையம்[தொகு]

பிரம்மதேசதில் உள்ள காவல் நிலையம்

சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பிரம்மதேச காவல் நிலையம் சார்நிலை காவல்துறை ஆய்வாளர் கீழ் இயங்குகின்றது. நாணல்மேடு, ராஜாம்பாளையம் மற்றும் வெள்ளைகுளம் (வெள்ளகுளம்) ஆகிய கிராமங்கள் பிரம்மதேசம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[8]

வங்கி[தொகு]

இந்தியாவின் நீண்ட கால வங்கியான இந்தியன் வங்கி தனது கிளை அலுவலகத்தை இங்குள்ள அ.வ.ச.வ மண்டபத்தில் இயக்குகின்றது.[9]

கல்வி[தொகு]

பிரம்மதேசம் மற்றும் அருகில் உள்ள கிராமம்களான ராஜாம்பாலயம், வன்னிபேர், ஏந்தூர் போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள் கல்வி கற்கப்பதற்காக தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை நிறுவியுள்ளது. [10][11] அரசு பள்ளிகள் அல்லது சில தனியார் பள்ளிகள் இயக்குகின்றன.

போக்குவரத்து[தொகு]

மாநில நெடுஞ்சாலையான SH -134 திண்டிவனம்-மரக்காணம் மையப்பகுதியில் பிரம்மதேசம் அமைந்துள்ளதால் அருகில் உள்ள முக்கிய நகரங்களான புதுவை (சுமார் 30 கி.மீ) மற்றும் சென்னை (சுமார் 150 கி.மீ)உடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்து துறையால் இயக்கப்படும் பின்வருமாறு:

பேருந்து எண் புறப்படும் இடம் சேரும் இடம்
1 திண்டிவனம் [12] ராயநல்லூர்
5 திண்டிவனம் வண்டிபாலயம்
15 திண்டிவனம் நல்லூர்
22 திண்டிவனம் முன்னூர்
26 திண்டிவனம் அடவல்லிக்குத்தன்
30 திண்டிவனம் கிளாப்பக்கம்
189 மரக்காணம் [13] சென்னை
227 மரக்காணம் திண்டிவனம்

இப்பகுதியில் அரசுப் பேருந்துகள் தவிர சில தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருகில் உள்ள முக்கிய இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (தமிழ் நாடு அரசு). "மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சயத்துக்களை காண்பிக்கும் தமிழக அரசின் தரவுத்தளம்". மூல முகவரியிலிருந்து 26 டிசம்பர் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 July 2010.
 4. List of Ancient Monuments - Tamil Nadu, Chennai circle
 5. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB). "திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யூர் வட்டத்தில் உள்ள பிரம்மதேசம் என்ற பெயர் உடைய மற்றொரு கிராமம்". மூல முகவரியிலிருந்து 21 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 July 2010.
 6. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (தமிழ்நாடு அரசு). "பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெறும் உழவர் சந்தை". பார்த்த நாள் 15 July 2010.
 7. இந்திய அஞ்சல் துறையின் (இந்திய அரசு) இணைய தளம். "பிரம்மதேசம் கிராமத்தின் அஞ்சல் குறியீட்டெண்". பார்த்த நாள் 15 July 2010.
 8. தமிழ்நாடு காவல் துறை. "பிரம்மதேச கிராமத்தின் காவல் துறை". பார்த்த நாள் 15 July 2010.
 9. இந்தியன் வங்கி. "பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை வங்கி". மூல முகவரியிலிருந்து 21 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 July 2010.
 10. பள்ளி கல்வி துறை (தமிழ்நாடு அரசு). "பிரம்மதேசத்தில் உள்ள நடுநிலை பள்ளியை காண்பிக்கும் பள்ளி கல்வி துறையின் இணைய தளம்". பார்த்த நாள் 15 July 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. ஊரக வளர்ச்சி அமைச்சகம் (இந்திய அரசு). "மரக்காணம் தொகுதியில் உள்ள மொத்த பள்ளிகளில் விபரம்". மூல முகவரியிலிருந்து 21 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 July 2010.
 12. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,போக்குவரத்து துறை (தமிழ்நாடு அரசு). "திண்டிவனத்தில் இருந்து பிரம்மதேசம் வழியாக இயங்கும் அரசு பேருந்துகள்". பார்த்த நாள் 15 July 2010.
 13. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,போக்குவரத்து துறை (தமிழ்நாடு அரசு). "மரக்காணத்தில் இருந்து பிரம்மதேசம் வழியாக இயங்கும் அரசு பேருந்துகள்". பார்த்த நாள் 15 July 2010.