உள்ளடக்கத்துக்குச் செல்

கே. பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாலாஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கே. பாலாஜி
K. Balaji
பிறப்புகிருஷ்ணமாச்சாரி பாலாஜி
(1934-06-24)24 சூன் 1934
சென்னை,
(தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு2 மே 2009(2009-05-02) (அகவை 74) [1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வில்லன் பாலாஜி
கல்வி
பணி
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1951–2009
அறியப்படுவதுபில்லா (1980)
பெற்றோர்கிருஷ்ணமாச்சாரி
ஜானகி தேவி
வாழ்க்கைத்
துணை
ஆனந்தவல்லி (இற. 1996)
பிள்ளைகள்சுரேஷ் பாலாஜி
சுஜாதா
சுசித்ரா மோகன்லால்
உறவினர்கள்

கே. பாலாஜி (K. Balaji, 24 சூன் 1934 – 2 மே 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதாநாயகனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பாலாஜியின் பூர்வீகம் கேரளா. தொடக்க காலத்தில் இவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் சுடூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார்.

படத் தயாரிப்பு

[தொகு]

பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்சு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். ஜெமினி கணேசன் கதைத் தலைவனாக நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு சிவாஜி கணேசனை வைத்து தங்கை, என் தம்பி, திருடன், எங்கிருந்தோ வந்தாள், ராஜா, நீதி, என் மகன், உனக்காக நான், தீபம், தியாகம், நல்லதொரு குடும்பம் உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார்

பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மணந்து இருக்கிறார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி/குறிப்புகள்
1956 மாதர்குல மாணிக்கம் தமிழ்
1958 அன்பு எங்கே இராமு தமிழ்
1959 உத்தமி பெற்ற இரத்தினம் தமிழ்
1959 சகோதரி தமிழ்
1960 எங்கள் செல்வி தமிழ்
1960 மகாலட்சுமி தமிழ்
1960 விடிவெள்ளி தமிழ்
1960 புதிய பாதை தமிழ்
1960 பார்த்திபன் கனவு தமிழ்
1960 பாவை விளக்கு தமிழ்
1961 நாகநந்தினி தமிழ்
1961 கப்பலோட்டிய தமிழன் தமிழ்
1961 மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே தமிழ்
1961 தூய உள்ளம் தமிழ்
1962 போலீஸ்காரன் மகள் தமிழ்
1962 பலே பாண்டியா இரவி தமிழ்
1962 படித்தால் மட்டும் போதுமா இராஜூ தமிழ்
1962 எல்லோரும் வாழவேண்டும் தமிழ்
1962 சுமைதாங்கி தமிழ்
1963 ஆசை அலைகள் தமிழ்
1963 ஏழை பங்காளன் தமிழ்
1963 இருவர் உள்ளம் தமிழ்
1964 என் கடமை தமிழ்
1964 கறுப்புப் பணம் தமிழ்
1964 ஆண்டவன் கட்டளை தமிழ்
1964 ரிஷ்யசிங்கர் தமிழ்
1964 ஸ்கூல் மாஸ்டர் முரளி மலையாளம்
1964 ஆட்டம் பாம் கோச்சுராகவன் பிள்ளை மலையாளம்
1965 அன்புக்கரங்கள் தமிழ்
1965 வீர அபிமன்யு தமிழ்
1965 வாழ்க்கைப் படகு Kannabiram தமிழ்
1965 காட்டு ராணி தமிழ்
1966 அண்ணாவின் ஆசை தமிழ்
1967 பட்டணத்தில் பூதம் தமிழ்
1967 மாடிவீட்டு மாப்பிள்ளை தமிழ்
1967 தங்கை தமிழ்
1967 இருட்டின்டி ஆத்மாவு சந்தரன் மலையாளம்
1967 அதே கண்கள் மருத்துவர் தமிழ்
1968 லட்சுமி கல்யாணம் இலட்சுமியின் கணவர் தமிழ்
1968 ராகிணி மலையாளம்
1968 என் தம்பி விஸ்வம் தமிழ்
1968 தில்லானா மோகனாம்பாள் தமிழ்
1969 சாந்தி நிலையம் தமிழ்
1969 திருடன் ஜெகன்நாத் தமிழ்
1969 குருதட்சணை தமிழ்
1970 எங்க மாமா தமிழ்
1970 எங்கிருந்தோ வந்தாள் தமிழ்
1970 எதிர்காலம் தமிழ்
1970 சொர்க்கம் தமிழ்
1971 வெகுளிப் பெண் தமிழ்
1972 வசந்த மாளிகை தமிழ்
1972 கண்ணம்மா தமிழ்
1972 தாய்க்கு ஒரு பிள்ளை தமிழ்
1972 ராஜா தமிழ்
1972 நீதி தமிழ்
1974 என் மகன் ஜெகதீஷ் தமிழ்
1975 ஆயிரத்தில் ஒருத்தி கோபி தமிழ்
1975 சுவாமி ஐயப்பன் மலையாளம்
1976 வாழ்வு என் பக்கம் மூர்த்தி தமிழ்
1978 தியாகம் தமிழ்
1979 சுரக்சா' மருத்துவர் சிவா இந்தி
1979 அமர் தீப் விருந்தினர் தோற்றம் இந்தி
1980 பில்லா தமிழ்
1980 ஜானி காவல் அதிகாரி தமிழ்
1981 தீ ஜெகதீஷ் தமிழ்
1981 சவால் பாபா சேக் தமிழ்
1983 ஜஸ்டிஸ் ராஜா மலையாளம்
1983 சட்டம் தமிழ்
1986 விடுதலை தமிழ்

இறப்பு

[தொகு]

2009, மே 2 மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் பாலாஜி இறந்தார். இறக்கும் போது இவருக்கு வயது 74.

உசாத்துணை

[தொகு]
  1. "Actor-producer K Balaji passes away". சிஃபி. 3 May 2011. Archived from the original on 9 January 2014. பார்க்கப்பட்ட நாள் 22 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாலாஜி&oldid=4148154" இலிருந்து மீள்விக்கப்பட்டது