பாரதி பவார்
பாரதி பவார் Bharati Pawar | |
---|---|
இணை அமைச்சர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | மன்சுக் எல். மாண்டவியா |
முன்னையவர் | அஸ்வினி குமார் சௌபே |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
முன்னையவர் | ஹரிஷ்சந்திர தேவ்ராம் சவான் |
தொகுதி | திண்டோரி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 செப்டம்பர் 1978 நாசிக் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசியவாத காங்கிரசு கட்சி |
துணைவர் | பிரவின் அர்ஜூன் பவார் |
உறவுகள் | அர்ஜூன் துல்சிராம் பவார் (மாமனார்) |
கல்வி | இளநிலை மருத்துவம் |
முன்னாள் கல்லூரி | புனே பல்கலைக்கழகம் |
மூலம்: [1] |
பாரதி பிரவின் பவார் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய இந்திய நடுவண் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சரும் ஆவார். இவர் இப்பதவியில் 7 சூலை 2021 முதல் உள்ளார்.[1] இவர் 17ஆவது மக்களவைக்கு மகாராட்டிராவின் திண்டோரி மக்களவைத் தொகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திசம்பர் 2019-ல் சிறந்த பெண் நாடாளுமன்றவாதியாக இவருக்கு லோக்மத் ஊடக குழுவினால் விருது வழங்கப்பட்டது.[2][3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பாரதி பவார் 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி மகாராட்டிர மாநிலம் நாசிக்கின் ஆதிவாசி பகுதியில் உள்ள நருல்-கல்வானில் பிறந்தார்.[4][5] இவர் பிரவின் பவாரை மணந்தார்.
பாரதி பவார் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் துல்ஷிராம் பவாரின் மருமகள் ஆவார்.[6][7][8][9]
கல்வி
[தொகு]பவார் 2002ல் மருத்துவப் படிப்பினை[10] நாசிக்கில் உள்ள என். டி. எம். வி. பி. மருத்துவக் கல்லூரியில் முடித்துள்ளார்.[5]
அரசியல் வாழ்க்கை
[தொகு]பாரதி மாவட்டக் குழு உறுப்பினராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.[11] இவர் 2019-ல் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் இவரது கோரிக்கையைத் தேசியவாத காங்கிரசு கட்சி நிராகரித்தது. இதனால் 2019ல் பாஜகவில் பாரதி சேர்ந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[12]
பாரதியின் மாமனார் இதே பகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் மகாராட்டிரா அரசின் தேஷ்முக் அமைச்சகத்தில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.[13]
வகித்த பதவிகள்
[தொகு]- உறுப்பினர், மாவட்ட ஊராட்சி (2012 - 2019)
- பாராளுமன்ற உறுப்பினர், 17வது மக்களவை (2019 - முதல்)
- உறுப்பினர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மீதான நிலைக்குழு (2019 - முதல்)
- உறுப்பினர், மனுக்களுக்கான குழு (2019 - முதல்)
- உறுப்பினர், ஆலோசனைக் குழு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (2019 - முதல்)
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சர் (சூலை 2021 - முதல்)
பாரதி 59 ஆண்டுகளுக்குப் பிறகு நாசிக் பகுதியிலிருந்து மத்திய அமைச்சரானார். இவர் நாசிக்கைச் சேர்ந்த முதல் பெண் மத்திய அமைச்சரும் இவர்தான்.[14][15]
விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "Lokmat Parliamentary Awards 2019: Winners". Lokmat English (in ஆங்கிலம்). 2019-12-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ 3.0 3.1 "Who Is Dr Bharati Pawar? Female Leaders In Modi's Cabinet" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ "भारती पवारांमुळे नाशिकला पहिल्यांदाच दिल्लीत मानाचे पान!". www.sarkarnama.in (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ 5.0 5.1 5.2 "Members Profile". Parliament of India. Archived from the original on 6 June 2019.
- ↑ "Lok Sabha Election Results 2019: Girish Mahajan proves mettle in North Maharashtra". DNA News. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "LS polls: NCP's Bharati Pawar, Congress' Pravin Chheda join BJP". The Times of India. 22 March 2019. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ Shrutika Sukhi & Nishikant Karlikar (27 April 2019). "Dynasty dominates in candidate selection as all parties nominate kins". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ "Dr Bharati Pawar becomes 1st Union minister from Nashik". United News of India. 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "राजकीय हुशारीने पवारांनी काबीज केली दिल्ली; जाणून घ्या! डॉ. भारती पवार ते मंत्री पवार होण्याचा प्रवास". www.timesnowmarathi.com (in மராத்தி). 2021-07-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ "Lok Sabha Elections Results 2019: BJP-Sena Alliance Triumphs Over Maharashtra". India News, Breaking News | India.com (in ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ "जिल्हा परिषद सदस्या ते केंद्रीय मंत्री! डॉ. भारती पवार यांची थक्क करणारी झेप". eSakal - Marathi Newspaper (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ "8-time MLA, ex-minister A T Pawar passes away". The Times of India (in ஆங்கிலம்). May 11, 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ "Nashik gets a Union minister after 59 years". The Times of India (in ஆங்கிலம்). July 8, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ "Dr. Bharti Pawar Jeevan Parichay: भारती पवार ने मोदी कैबिनेट में बनाई जगह, डॉक्टर से नेत्री बनने तक का सफर, जानें यहां India - New Track" (in இந்தி). Archived from the original on 2021-07-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.
- ↑ "Lokmat Parliamentary Awards 2019: Winners". Lokmat English (in ஆங்கிலம்). 2019-12-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.