அஸ்வினி குமார் சௌபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஸ்வினி குமார் சௌபே
The Minister of State for Health & Family Welfare, Shri Ashwini Kumar Choubey addressing at the launch of the National Viral Hepatitis Control Program, on the occasion of the ‘World Hepatitis Day’, in New Delhi.JPG
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மே 2014
முன்னவர் ஜகதா நந்த் சிங்
தொகுதி புக்சர்
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்[1]
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 செப்டம்பர் 2017
பிரதமர் நரேந்திர மோதி
தனிநபர் தகவல்
பிறப்பு 2 சனவரி 1953 (1953-01-02) (அகவை 66)
பாகல்பூர், பீகார், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள் அர்ஜித் சஷ்வத் சௌபே & அவிரல் சஷ்வத் சௌபே
இருப்பிடம் பாகல்பூர், பீகார், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் பாட்னா பல்கலைக்கழகம்
தொழில் சமூக சேவகர் & அரசியல்வாதி
சமயம் இந்து

அஸ்வினி குமார் சௌபே (Ashwini Kumar Choubey, பிறப்பு: 02 சனவரி, 1953)[2] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், புக்சர் தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் தொகுதியில் போட்டியிட்டு, பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 03 செப்டம்பர் 2017 அன்று, நரேந்திர மோடியின் முதலாவது அமைச்சரவையில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.[3][4][5]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின்பு நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில், மீண்டும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினி_குமார்_சௌபே&oldid=2759718" இருந்து மீள்விக்கப்பட்டது