பாக்கித்தானிய தொலைக்காட்சி நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தான் நாடகங்கள் அல்லது பாக்கித்தான் தொடர்கள் என்பது பாக்கித்தானில் தயாரிக்கப்படும் ஒரு பொழுது போக்கு தொலைக்காட்சி அம்சம் ஆகும். பெரும்பாலான தொடர்கள் உருது மொழியில் தயாரிக்கப்பட்டாலும்,[1] அவற்றில் அதிக எண்ணிக்கையிலான தொடர்கள் சிந்தி, பஞ்சாபி மற்றும் பலூச்சி போன்ற பிற பாக்கித்தான் மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றது. பாக்கித்தானின் பழமையான தொலைக்காட்சி நாடகங்களில் ஒன்று குடா கி பஸ்தி என்ற உருது மொழித் தொடர் ஆகும். இந்த தொடர் 1969 இல் ஒளிபரப்பானது. பாக்கித்தான் நாடகங்கள் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பை கருதி எடுக்கப்படுகின்றது. ஃபாரூக் சுலேரியா கருத்துப்படி 1970 கள் மற்றும் 1980 களில் எடுக்கப்பட்ட தொடர்கள் பாகிஸ்தான் தொடர்களில் பொற்காலம் என கருதப்படுகின்றது.[2][3]

இந்த தொடர்கள் இந்தியாவில் பார்க்கப்படுகின்றன மற்றும் ஆப்கானிஸ்தான்,[4] பங்களாதேஷ்[5] மற்றும் நேபாளம்[6] உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளில் பிரபலமாக உள்ளது.

தோற்றம்[தொகு]

பல பாக்கித்தான் நாடகங்கள் உருது நாவல்களை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் 1969 க்குப் பின்னர் எழுத்தாளர்கள் உமேரா அகமது மற்றும் ஃபர்ஹத் இஷ்டியாக் ஆகியோர் தொலைக்காட்சி எழுத்தாளர்களாக மாறினர். இருவரும் குறிப்பிட்ட அளவான தொடர்கள் தொடர்களை எழுதியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் வெளியாகும் பாக்கிஸ்தானிய நாடகங்கள் ஒரு காலத்தில் தடைகளாகக் கருதப்படும் சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து பல தொடர்கள் தயாரிக்கப்படுகின்றது.[7][8]

மேற்கோள்கள்[தொகு]