அரபு தொலைக்காட்சி நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரபு தொலைக்காட்சி நாடகம் (مسلسل‎) என்பது அரபு மொழிகளில் உருவாகும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி அம்சம் ஆகும். இதை முசலசல் என்று அரபு மொழியில் அழைப்பார்கள், இதன் தமிழ் அர்த்தம் சங்கிலி தொடர்ச்சி ஆகும்.[1] இந்த தொடர்கள் லத்தீன் அமெரிக்க தொடர் (டெலனோவெலா) பாணியில் ஒத்திருக்கிறது. அரேபிய தொடர்கள் பெரும்பாலும் இஸ்லாமிய பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அல்லது வர்க்க மோதல் மற்றும் சூழ்ச்சியை உள்ளடக்கிய காதல் கதைகள் பற்றிய வரலாற்று காவியங்களையே கதைக்களமாக கொண்டுள்ளது.

பெரும்பாலான புதிய தொடர்கள் ரமலான் காலத்தில் தான் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. ரமலான் மாதத்தின் மாலை வேளையில், நாள் நோன்பை முடித்துக்கொள்வதற்காக இப்தார் உணவு சாப்பிட்ட பிறகு, அரபு உலகில் உள்ள குடும்பங்கள் இந்த சிறப்பு நாடகங்களை தொலைக்காட்சியில் பார்க்கின்றன.[2][3] அரேபிய தொடர்கள் பெரும்பாலான சுமார் 30 அத்தியாயங்களை கொண்டது, ரமலான் நாட்களில் ஒவ்வொரு இரவிலும் ஒரு அத்தியாயமாக ஒளிபரப்பு செய்கின்றது. ரமலான் காலத்தில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரமலான் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகும், அதேபோல் நோன்பு பற்றிய கதைகளையும் புராணங்களையும் விவரித்த கதையாகவும் இருக்கும்.[4]

அரேபிய மொழித் தொடர்கள் பெரும்பாலும் எகிப்து, குவைத், லெபனான், சிரியா, ஜோர்டான்போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு அரேபிய உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

சர்வதேச அங்கீகாரம்[தொகு]

15 மார்ச் 2018 இல், நெற்ஃபிளிக்சு முதல் எகிப்திய தொடரான கிராண்ட் ஹோட்டலை “சீக்ரெட் ஆஃப் தி நைல்” என்ற பெயரில் முதல் இணைய தொடரை வெளியிட்டது. இதுவே முதல் அரபு தொடர் ஆகும்.[5] இந்த தொடர் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளின் வசனங்களுடன் பார்க்க முடியும்.[6] எகிப்தின் சிபிசியால் தயாரிக்கப்பட்ட இந்த தொலைக்காட்சித் தொடர் ஸ்பானிஷ் நாடக தொலைக்காட்சித் தொடரான “கிரான் ஹோட்டல்” சார்ந்த எகிப்திய மொழி தொடர் ஆகும். இது 2016 ஆம் ஆண்டு ரமலான் காலப்பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]