ஜப்பானியத் தொலைக்காட்சி நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜப்பானியத் தொலைக்காட்சி நாடகம் (テレビドラマ) என்பது ஜப்பானிய நாட்டு தொலைக்காட்சியின் தினமும் ஒளிபரப்பப்படும் பிரதானமான தொலைக்காட்சி நிகழ்ச்சி வகை ஆகும். ஜப்பானில் உள்ள அனைத்து முக்கிய தொலைக்காட்சி வலைப்பின்னல்களும் காதல், நகைச்சுவை, துப்பறியும் கதைகள், திகில், மற்றும் பரபரப்பூட்டும் போன்ற பல நாடகத் தொடர்களை உருவாக்குகின்றன..[1]

ஜப்பானியத் தொடர்கள் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒற்றை அத்தியாயம் அல்லது வாரத்தில் ஒரு நாள் வழக்கமாக இரண்டு மணி நேரம் நீளமுள்ள தொடர்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஜப்பானிய நாடகத் தொடர்கள் மூன்று மாத பருவங்களில் ஒளிபரப்பப்படுகின்றன: குளிர்காலம் (ஜனவரி-மார்ச்), வசந்த காலம் (ஏப்ரல்-ஜூன்), கோடை (ஜூலை-செப்டம்பர்), மற்றும் இலையுதிர் காலம் அல்லது இலையுதிர் காலம் (அக்டோபர்-டிசம்பர்) போன்ற காலப்பிரிவில் ஒளிபரப்படுகின்றது. அல்லது சில தொடர்கள் மற்றொரு மாதத்தில் தொடங்கலாம், இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட பருவத்தின் தொடராகக் கருதப்படலாம். பெரும்பாலான நாடகங்கள் வார நாட்களில் இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றன. பகல்நேர நாடகங்கள் பொதுவாக தினமும் ஒளிபரப்பப்படுகின்றன. மாலை நேர நாடகங்கள் வாரந்தோறும் ஒளிபரப்பப்படுகின்றன, பொதுவாக அவை பத்து முதல் பதினான்கு மணிநேர அத்தியாயங்களில் ஒளிபரப்பு செய்கின்றது.

ஜப்பானிய நாடகங்கள் பெரும்பாலும் குறுந்தொடர்கள் வடிவில்தான் தயாரிக்கப்படுகின்றது. சில நேரங்களில் ஒரு கதை அத்தியாயம் வடிவிலும் தயாரிக்கப்படுகின்றது. இது திரைப்படத்திற்கு இணையாக கருதப்படுகின்றது. ஜப்பானிய நாடகத்தின் ஒரு சிறப்பியல்பு என்னவென்றால், ஒவ்வொரு அத்தியாயமும் பொதுவாக ஒளிபரப்பப்படுவதற்கு சில (இரண்டு முதல் மூன்று) வாரங்களுக்கு முன்புதான் படமாக்கப்படுகிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதால் பல ரசிகர்கள் தொடரின் கதாபாத்திர நடிகர்களை பார்வையிட முடியும். இந்த தொடர்கள் மிகவும் புகழ் பெற்றதாகவும் மற்றும் உலகளாவிய ரீதியாக இளையோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்பொழுது நாடகங்கள் பியூஜி தொலைக்காட்சி, நிப்பான் தொலைக்காட்சி மற்றும் டோக்கியோ ஒளிபரப்பு அமைப்பு போன்ற அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]