தாய் தொலைக்காட்சி நாடகம்
தாய் தொலைக்காட்சி நாடகம் அல்லது தாய் நாடகம் (ละครโทรทัศน์) என்பது தாய்லாந்து நாட்டில் தயாரித்து ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி பொழுதுபோக்கு அம்சம் ஆகும். தாய் நாடகம் பொதுவாக தாய் மக்களால் லாகார்ன் என்று அழைக்கப்படு கின்றது. இந்த தொடர்கள் பொதுவாக 20:30 மணி முதல் தாய் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.[1]
தாய் தொடர்கள் தமிழ்த் தொடர்களிலிருந்து மிகவும் வேறுபட்ட கதை அம்சங்களை கொண்டுள்ளது. இங்கு பெரும்பாலும் பள்ளி பருவம், காதல் தொடர், திகில், நகைச்சுவை மற்றும் ஓரின பாலின தொடர்பான தொடர்கள் போன்ற வகையில் தயாரித்து வருகின்றது.
தாய் தொடர்கள் சுமார் மூன்று மாதங்களுக்கு இயங்கும். இது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களை ஒளிபரப்பக்கூடும், திங்கள்-செவ்வாய், புதன்-வியாழன் அல்லது வெள்ளி-ஞாயிறு போன்ற தினங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. ஒரு அலைவரிசை ஒரே நேரத்திலும் மூன்று தொடர்களை ஒளிபரப்பு செய்யும், அந்த தொடர்களை அந்த அலைவரிசையே தயாரித்து வழங்கும். அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்க்காக சேனல் 3, 5 மற்றும் 7, சேனல் 9 போன்ற அலைவரிசைகள் பிரபலமான நட்சத்திரங்களுக்காக போட்டியிட்டு தொடர்களை தயாரிக்கின்றது.[2]
"சிறந்த" தொடர்கள் செய்திக்குப் பிறகு இரவில் ஒளிபரப்பப்படும் அதே வேளையில் சிறு தொடர்கள் மாலை 17: 00–18: 00 முதல் ஒளிபரப்பப்படும். சில சந்தர்ப்பங்களில் மிகவும் பிரபலமான பிரைம்-டைம் தொடர்கள் சில மாதங்களுக்கு பிறகு மறு ஒளிபரப்பு செய்யப்படும். ஒரு தொடர் அத்தியாயம் பொதுவாக 1 மணிநேரம் அல்லது சிறு தொடர்கள் 30 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. சர்வதேச அளவில் ஒளிபரப்பும்போது ஒளிபரப்பு நேரம் 45 நிமிடங்கள் ஆகும்.[3]
எழுத்துக்கள்[தொகு]
- முன்னணி கதாபாத்திரத்தின் குறிக்கோள் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான ஒரு சரியான முடிவை அடைவதே தொடரின் முக்கிய குறிக்கோள்.
- ஒரு தொடர் முக்கிய காதலர்கள் கதையுடன் ஆரம்பிக்கப்படுகிறது.
பரிணாமம்[தொகு]
பெரும்பாலான தாய் தொடர்கள் தாய் சமுதாயத்தின் உயர் வர்க்கத்தை சித்தரிக்கின்றன, பொதுவாக ஆண் முன்னணி வழியாக சித்தரிக்கின்றது. சில நேரங்களில் இரு ஆண் மற்றும் பெண் வழியாகவும் சித்தரிக்கப்படும். பெரும்பாலான ஆண் முன்னணி கதாபாத்திரங்கள் பணக்காரர் ஆவார். இவர்கள் தொழில் அதிபர்களாகவும், அரச குடும்பத்தை சார்ந்தவர்களாகவும், செல்வாக்கு மிகுந்த பின்புலத்தை கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றது.
அதே தருணம் நடுத்தர சமூகத்தினரை பிரதி பழிக்கும் தொடர்களின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. இது இரு வேறுபட்ட சமூகத்தினரை ஒன்று இணைக்கு முறையாகவும் கருதப்படுகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Fredrickson, Terry. "Thai Soap's Still The Viewers Favourite". http://www.bangkokpost.com/learning/learning-from-news/333345/thai-soaps-still-the-viewers-favourite. பார்த்த நாள்: 2014-08-14.
- ↑ "รวมละคร-ซีรีส์เด็ด ปี 60 ช่องใหญ่หงายไพ่หวังเรียกเรตติ้ง!!" (in Thai). Thairath. 2017-01-02 இம் மூலத்தில் இருந்து 2017-05-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170506153027/http://www.thairath.co.th/content/825389. பார்த்த நாள்: 2017-05-24.
- ↑ "ละครเย็น...ขุมทรัพย์ใหม่ "วิก3" ขึ้นค่าโฆษณาพรวด" (in Thai). Prachachat. 2012-08-24. http://www.prachachat.net/news_detail.php?newsid=1345743988. பார்த்த நாள்: 2017-05-24.[தொடர்பிழந்த இணைப்பு]