உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் தொலைக்காட்சி தொடர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தொலைக்காட்சி தொடர்கள் அல்லது இந்திய நாடகங்கள் என்பது இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், மராத்தி, ஒரிசா, குஜராத்தி போன்ற மொழிகளில் தயாரிக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆகும். பெரும்பாலான இந்தியத் தொடர்கள் குடும்ப சார்ந்த கதைக்களத்துடன் தயாரித்து ஒளிபரப்பு செய்து வருகின்றது. அதே தருணம் நகைச்சுவை, புராணம், திகில், காதல், வரலாறு போன்ற வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரு தொடர் வெற்றி அடைந்தால் வேற்று மாநில மொழிகளில் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப்ப தயாரிக்கும் வழக்கம் உண்டு. தற்காலத்தில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன.

வரலாறு

[தொகு]

இந்தியாவின் முதல் தொடர் ஹம் லாக் என்ற ஹிந்தி மொழித்தொடர் ஆகும்.[1] இந்த தொடர் 1984 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. மற்றும் 154 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது, இது இந்திய தொலைக்காட்சியின் வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஒளிபரப்பான தொடர் ஆகும். இது 60 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[2] இந்த தொடர் ஒவ்வொரு அத்தியாயமும் சுமார் 25 நிமிடங்கள் நீளமாக இருந்தது, கடைசி அத்தியாயம் சுமார் 55 நிமிடங்கள் ஆகும்.

மொழி வாரியாக தொடர்கள்

[தொகு]

தமிழ்

[தொகு]

ஹிந்தி

[தொகு]

இந்தியாவில் முதல் முதலில் ஹிந்தி மொழியில் தான் ஹம் லாக் என்ற தொடர் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து என் கணவன் என் தோழன், உறவுகள் தொடர்கதை, யே ஹாய் முஹப்படீன், போன்ற பல தொடர்கள் ஸ்டார் பிளஸ், கலர்ஸ் தொலைக்காட்சி, ஜீ தொலைக்காட்சி, போன்ற அலைவரிசைகளில் ஒளிபரப்பானது. ஹிந்தி மொழி தொடர்கள் இந்தியாவை தாண்டி பாகிஸ்தான், இலங்கை, ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளிலும் மிகவும் பிரபலமானது.

  • போர்ஸ் : என்ற தொடர் இந்தியாவில் மிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் தொடர் ஆகும்.

தெலுங்கு

[தொகு]

தெலுங்கு மொழித் தொடர்கள் ஆரம்பத்தில் தமிழ் தொடர்களை மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜீ தெலுங்கு, ஸ்டார் மா போன்ற அலைவரிசைகள் வருகைக்கு பிறகு 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெலுங்கு தொலைக்காட்ச்சி தொடர்கள் வளர்ச்சி அடைந்தது.

  • அபிஷேகம் என்ற தொடர் செப்டம்பர் 2019 நிலவரப்படி, 3,000 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்ட இந்திய தொலைக்காட்சியின் மிக நீண்ட காலம் ஒளிபரப்பான தொடர் ஆகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kohli, Vanita (14 June 2006). The Indian Media Business. SAGE Publications. pp. 1–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761934691. பார்க்கப்பட்ட நாள் 1 February 2014.
  2. Gokulsing, K. Moti (2004). Soft-soaping India: The World of Indian Televised Soap Operas. Trentham Books. pp. 32–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781858563213. பார்க்கப்பட்ட நாள் 1 February 2014.
  3. Shekhar, G. C. (6 September 2018). "More Spellbinding Soap Gathas". Outlook. https://www.outlookindia.com/magazine/story/more-spellbinding-soap-gathas/300602.