துருக்கிய தொலைக்காட்சி நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துருக்கிய தொலைக்காட்சி நாடகம் என்பது துருக்கி நாட்டில் தயாரித்து ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி அம்சம் ஆகும். குடும்பம், நகைச்சுவை, திகில், காதல், வரலாறு, அதிரடி புனைகதை போன்ற பல வித்தியாசமான கதைக்களத்துடன் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. பெரும்பாலான நாடகங்கள் துருக்கிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன மற்றும் நாட்டின் மிகவும் பிரபலமான பொருளாதார மற்றும் கலாச்சார ஏற்றுமதிகள் இதுவும் உதவுகின்றது.[1][2]

துருக்கி உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொலைக்காட்சி தொடர் ஏற்றுமதியாளராக உள்ளது, தற்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த தொலைக்காட்சி தொடர் ஏற்றுமதியாளரான மெக்சிகோ மற்றும் பிரேசில் தொடர்களை பின் தள்ளி இரண்டாவது இடத்தில் துருக்கி தொலைக்காட்சி தொடர் உள்ளது.[3] இந்த தொலைக்காட்சி நாடகங்கள் உலகின் மிக நீளமான ஒரு அத்தியாயத்திற்கு 120 முதல் 150 நிமிடங்கள் வரை கொண்டது. ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் துருக்கியின் புகழை அதிகரிப்பதில் தொலைக்காட்சித் துறை முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[4][5]

துருக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எப்போதுமே பல மொழிகளில் கிடைக்கின்றன, அவை ஒரு நாட்டு மொழிக்கு ஏற்றவாறு மொழி மாற்றம் அல்லது வசன வரிகள் செய்யப்பட்டு வழக்கப்படுகின்றது. துருக்கிய தொலைக்காட்சித் தொடரின் வெற்றி சுற்றுலாவையும் உயர்த்தியுள்ளது, ஏனெனில் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் இடங்களைக் காண ஆர்வமாக உள்ளனர்.[6]

இந்ததொடர்கள் பெரும்பாலும் இசுதான்புல்லில் தயாரிக்கப்படுகின்றன. டிஆர்டி, கனல் டி, ஷோ, ஸ்டார், ஏடிவி, ஃபாக்ஸ், டிவி 8 மற்றும் கனல் 7 போன்ற அலைவரிசைகளில் தொடர்கள் ஒளிபரப்பு செய்கின்றது.[7]

உற்பத்தி[தொகு]

இன்று சராசரியாக துருக்கிய நாடகத்தின் ஒரு பருவம் சுமார் 35-40 அத்தியாயங்கள் ஆகும்.[8] புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு வாரமும் 6 நாட்களில் படமாக்கப்படுகின்றன, மேலும் தேவைப்படும் உற்பத்தி அட்டவணையைத் தொடர குழுவினர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை வேலை செய்யலாம்.[9]

இன்று ஒரு பிரபலமான துருக்கிய நாடகத்தின் அத்தியாயங்கள் வழக்கமாக 120 முதல் 150 நிமிடங்கள் வரை இருக்கும் (விளம்பரங்களைத் தவிர), இது ஒரு அமெரிக்க அல்லது மேற்கு ஐரோப்பிய தொடரின் வழக்கமான அத்தியாயத்தை விட மிக நீளமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jenna Krajeski. "Turkey: Soap Operas and Politics". Pulitzer Center. மூல முகவரியிலிருந்து 2013-01-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-15.
  2. Moore, Robbie. "Soap Opera Diplomacy: Turkish TV in Greece". The International. மூல முகவரியிலிருந்து 15 February 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 February 2013.
  3. "Turkey has a star role in more than just TV drama". The National (2012-02-08). மூல முகவரியிலிருந்து 2015-09-27 அன்று பரணிடப்பட்டது.
  4. "Television series enhances Turkey's popularity in Arab world". Xinhua (2011-04-09). மூல முகவரியிலிருந்து 2011-04-12 அன்று பரணிடப்பட்டது.
  5. "The success story of Turkish TV series in Latin America". மூல முகவரியிலிருந்து 2016-05-05 அன்று பரணிடப்பட்டது.
  6. "Fast Track - Desperate soap star for a day". BBC News (2012-12-21). மூல முகவரியிலிருந்து 2013-01-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-15.
  7. "Turkish ‘TV series spring’ continues". Hürriyet Daily News (2012-10-17). மூல முகவரியிலிருந்து 2015-09-24 அன்று பரணிடப்பட்டது.
  8. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2016-03-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-09-02.
  9. "Turkish dramas conquer the world". மூல முகவரியிலிருந்து 2016-04-17 அன்று பரணிடப்பட்டது.