பரதேசி யூதர்
யூடியோசு பரதேசி | |
---|---|
தாவீது என்றிக்கசு டி காசுட்ரோ | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இசுரேல் | 700 |
இந்தியா | 52 (2001) |
மொழி(கள்) | |
தொடக்கத்தில் இலதீனம், பின்னர் யூத-மலையாளம், தமிழ், தற்போது பெரும்பாலும் எபிரேயம், ஆங்கிலம் | |
சமயங்கள் | |
மரபுவழி யூதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
எசுப்பானிய, போர்த்துக்கேய யூதர்கள் செபார்டிக்கு யூதர் கொச்சி யூதர்கள் உந்திய யூதர் தேசி யூதர் |
பரதேசி யூதர் (Paradesi Jews) எனப்படுவோர் எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து 15-ஆம், 16-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியத் துணைக்கண்டத்தில் குடியேறிய யூதர்களின் இனக்குழுவைக் குறிக்கும். பரதேசி மலையாளத்தில் வெளிநாட்டினர் எனப் பொருள்.[1] கட்டாய மதமாற்றம், துன்புறுத்தல், யூத எதிர்ப்புக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக எசுப்பானியாவில் இருந்து யூதர்களை வெளியேற்றும் அலாம்பிரா ஆணை, 1496 இல் போர்த்துக்கேய மன்னர் மானுவலின் ஆணை ஆகியவை எசுப்பானியா, போர்த்துகலில் இருந்து செபராது யூதர்களை வெளியேற்றியது. இவர்கள் சில வேளைகளில் "வெள்ளை யூதர்கள்" என்று குறிப்பிடப்படுகிறார்கள், இருப்பினும் அந்தப் பயன்பாடு பொதுவாக இழிவான அல்லது பாரபட்சமாகக் கருதப்படுகிறது, ஒப்பீட்டளவில் சமீபத்திய (15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து) யூதக் குடியேறிகளைக் குறிக்கிறது.[2]
18-ஆம், 19-ஆம் நூற்றாண்டுகளில் பரதேசி யூதர்கள் அரபு, முசுலிம் நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்தியத் துணைக்கண்டத்தில் குடியேறிய செபராதியர் ஆவர்.[3][4] கொச்சியில் குடியேறிய பரதேசி யூதர்கள் மசாலாப் பொருட்களை விற்பனை செய்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் கேரளத்தில் குடியேறிய பரந்த கொச்சி யூத சமூகத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.[2]
சென்னையின் பரதேசி யூதர்கள் கோல்கொண்டா வைரம், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் பவளங்களை விற்பனை செய்தார்கள். இவர்கள் கோல்கொண்டாவின் ஆட்சியாளர்களுடன் மிகவும் நல்ல உறவைக் கொண்டிருந்தனர், இவர்கள் சில வெளிநாடுகளுடன் (உதுமானியப் பேரரசு, ஐரோப்பா) வணிகத் தொடர்புகளைப் பேணி வந்தனர், அத்துடன் அவர்களின் மொழித் திறன் பயனுள்ளதாக இருந்தது. செபராதுகள் இலதீனோ (யூதியோ-எசுப்பானியம்) பேசினாலும், இந்தியாவில் அவர்கள் மலபார் யூதர்கள் என்றும் அழைக்கப்படும் கொச்சி யூதர்களிடமிருந்து தமிழ், கொங்கணி மொழி, யூத-மலையாளம் ஆகியவற்றைக் கற்றனர்.[5]
இந்தியா 1947 இல் விடுதலை பெற்றதும், இசுரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டதும், பெரும்பாலான கொச்சி யூதர்கள் அலியாவை உருவாக்கி 1950களின் நடுப்பகுதியில் இசுரேலுக்குக் குடி பெயர்ந்தனர். பரதேசி யூதர்கள் பலர், ஆங்கிலோ இந்தியர்களின் தேர்வுகளைப் போலவே, ஆத்திரேலியாவுக்கும், ஏனைய பொதுநலவாய நாடுகளுக்கும் குடிபெயர்ந்தனர்.[6]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lobo, Christabel. "India's Jew Town only has a few Jews left, but traditions and landmarks remain". www.timesofisrael.com.
- ↑ 2.0 2.1 Yisra'el, Muzeon (1995). Slapak, Orpa (ed.). The Jews of India: A Story of Three Communities. UPNE. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-278-179-7. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
- ↑ "VI- November 30: Commemorating the expulsion of Jews from Arab lands".
- ↑ Hoge, Warren (5 November 2007). "Group seeks justice for 'forgotten' Jews". The New York Times. https://www.nytimes.com/2007/11/04/world/americas/04iht-nations.4.8182206.html.
- ↑ Katz 2000; Koder 1973; Thomas Puthiakunnel 1973
- ↑ Weil, Shalva. From Cochin to Israel, Jerusalem: Kumu Berina, 1984. (Hebrew)