பயனர் பேச்சு:Vaijayanthvj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Vaijayanthvj, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:19, 14 சூன் 2013 (UTC)

வவுனியா[தொகு]

வணக்கம், வவுனியா கட்டுரையில் நீங்கள் செய்தித்தளம் ஒன்றுக்கான இணைப்பைச் சேர்த்திருந்தீர்கள். வவுனியா நகரசபை, அல்லது செயலகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இருந்தால் அதனை மட்டுமே கட்டுரையின் வலப்பக்கத்தில் உள்ள தகவல்சட்டத்தில் இணைக்கலாம். தனியார் ஊடகங்களை கட்டுரையின் இறுதியில் வெளியிணைப்பாக இணைக்கலாம். குறிப்பிட்ட செய்தியூடகம் ஏற்கனவே கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 13:34, 14 சூன் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Vaijayanthvj!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:44, 3 சூலை 2013 (UTC)

நிற அடர்த்தி[தொகு]

வணக்கம். தமிழ் விக்கியில் இணைந்து பங்களிக்கத் தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள். நிற அடர்த்தி கட்டுரையில் நீங்கள் வெளி இணைப்பில் கொடுத்துள்ள வலைப்பக்க கட்டுரையில் உள்ளவற்றை அப்படியே தந்துள்ளீர்கள். அது விக்கிக் கொள்கைக்குப் புறம்பானது. அங்கு தரப்பட்டுள்ள கருத்துக்களை எடுத்துக் கையாளலாம் . ஆனால் அப்படியே படியெடுத்த மாதிரி எழுத வேண்டாம். அது வரம்பு மீறலாகும். கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு உங்கள் சொந்த வாக்கியங்களில் கட்டுரையை அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கட்டுரைகளை உருவாக்குவதில் உதவி தேவைப்படின் தயங்காமல் உங்கள் பேச்சுப் பக்கத்திலேயே கேட்கலாம். பலரும் உதவ முன்வருவர். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:57, 3 சூலை 2013 (UTC)

வணக்கம், உங்கள் பதில் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி! நிற அடர்த்தி என்ற கட்டுரை வலைப்பக்கத்தில் இருந்து copy செய்யவில்லை. அது என்னுடைய Blog ஆகும் (dailypcnews.blosgspot.com). விக்கியில் கட்டுரை எழுதிய கட்டுரையையே copy செய்து எனது வலைப்பூவில் பதிவுசெய்தேன். (பதிவு செய்த நேரத்தை கவனிக்கவும்: 7:54 PM). நன்றி.

விளக்கத்திற்கு நன்றி வைஜயந்த். உரையாடல் பக்கங்களில் உங்கள் கையொப்பத்தை இடுவதற்கு ~~~~ எனத் தடச்சிடுங்கள். அல்லது அதற்கான இணைப்பு இப்பெட்டியின் மேற்பக்கத்தில் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 21:08, 4 சூலை 2013 (UTC)
நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை [Wikipedia:Text of Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License கிரியேட்டிவ் காமன்சு] உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.

--Anton (பேச்சு) 01:01, 5 சூலை 2013 (UTC)

கனக்ஸ், அண்டன், நிற அடர்த்திக் கட்டுரையை தமிழ் விக்கியில் உருவாக்கிய பின்னர் (ஆ. வி: கட்டுரை+ படங்கள் உதவியுடன்) அவரது Blog இல் அதனை எழுதியுள்ளதால் உரிமப் பிரச்சனை இக்கட்டுரைக்கு இல்லை என நினைக்கிறேன். எனினும் பயனரின் வலைப்பக்கம் கட்டுரையில் வெளி இணைப்பாக உள்ளது. அது சரியா இல்லை நீக்கிவிட வேண்டுமா?--Booradleyp1 (பேச்சு) 03:44, 5 சூலை 2013 (UTC)

விக்கிப்பீடியாவில் எழுதிய ஒன்றை வலைப்பதிவில் இட்டு அதனை வெளியிணைப்பாக தருவது பொருத்தமற்றது. ஆனால், தன்னுடைய விக்கிப்பீடியா உழைப்பு வலைப்பதிவிலும் பயன்படுமே என்று நினைத்தால், முதலில் வலைப்பதிவில் இட்டு, அன்டன் வழிகாட்டிய படி உரிய உரிமத்தில் அளிக்க வேண்டும். அதன் பிறகு, அதனை எடுத்து விக்கிப்பீடியாவில் இட்டு உசாத்துணையாகவும் குறிப்பிடலாம்.--இரவி (பேச்சு) 04:06, 5 சூலை 2013 (UTC)
தனிப்பட்ட வலைப்பதிவு இங்கு வெளியிணைப்பு இங்கு தருவது வழக்கமல்ல. அதனை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:56, 5 சூலை 2013 (UTC)

வார்ப்புரு[தொகு]

வணக்கம், கட்டுரைகளில் பொதுவாக வலப்பக்கத்தில் அத்தலைப்புப் பற்றிய சில முக்கிய தரவுகள் தகவற்சட்டம் (infobox) என்ற பெயரில் தரப்படும். இத்தகவற்சட்டத்தை குறிப்பிட்ட கட்டுரையில் மட்டுமன்றி அதைப்போன்ற ஏனைய கட்டுரைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக பொதுவான தகவல்களைக் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகவற்சட்டம் விக்கி நிரலில் வார்ப்புரு (template) ஒன்றின் மூலம் அமைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு நபர் பற்றிய கட்டுரையில் அந்நபர் பற்றிய தரவுகள் வார்ப்புரு:Infobox person என்ற சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தைத் திறந்து பார்த்தீர்கள் என்றால் வார்ப்புருக்கள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என அறியலாம். இவை பொதுவாக ஆங்கில விக்கியில் இருந்து நேரே படி எடுத்து தேவையான சில சொற்களை மட்டும் தமிழ்ப்படுத்துவோம். ஐஇஇஇ 1394 கட்டுரையிலும் இவ்வாறே Infobox connector என்ற வார்ப்புருவைப் படி எடுத்து இங்கு ஒட்டினேன். அவ்வார்ப்புருவில் சில சொற்களைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இத்தமிழாக்கத்தில் தவறிருக்கலாம். அல்லது வேறு பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் மாற்றலாம். இவ்வார்ப்புருவில் நீங்கள் செய்யும் மாற்றம் இவ்வார்ப்புரு இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வரும். மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:18, 11 சூலை 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vaijayanthvj&oldid=1455000" இருந்து மீள்விக்கப்பட்டது