பயனர் பேச்சு:Surya Prakash.S.A./தொகுப்பு08

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுபதிநாத்[தொகு]

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சூர்யா. தற்போது பசுபதிநாத் கோவில் கட்டுரையை ஒரு முறை பார்த்துவிடுங்கள்--Parvathisri 06:22, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றும்பொழுது[தொகு]

அருள்கூர்ந்து தலைப்பை மாற்றும்பொழுது, உரையாடல் நடந்துகொண்டிருந்தால், அதனைக் கவனித்து அங்கு உருவாகும் கருத்துக்கு ஏற்ப மாற்றுங்கள். த்லைப்பை மாற்ற வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அண்மையில் ஃகாவ்னியம் என்னும் கட்டுரையை நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொழுதே (அதை நான் இன்னும் முடிக்கக்கூட இல்லை :) ), அதன் தலைப்புப் பற்றிய உரையாடல் நடந்துகொண்டிருக்கும்பொழுதே, மறுமொழிகள் ஏதும் தரும் முன்னரே ஏன் இத்தனை நெருக்கடியுடன் மாற்றியுள்ளீர்கள் என்று தெரியவில்லை!--செல்வா 18:49, 14 பெப்ரவரி 2012 (UTC)

எந்த பிற காரணமும் இல்லை. எனக்கு இக்கட்டுரை பார்த்தவுடன் பிடித்துப்போனது. முதற்பக்கப் படத்திற்குக் கட்டுரை தேடிக்கொண்டிருந்த வேளையில் என் கண்ணில் பட்டது. எனவே இதனையே நாளைய பரிந்துரையாக மாற்றலாம் என்று எண்ணி தேவையான சில திருத்தங்களை மட்டும் செய்தேன். (குறிப்பு: ஆஃப்னியம் என்ற சொற்பயன்பாடு ஏற்கனவே இங்கு இருந்தது. நீங்கள் அங்கு பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அங்கு ஏற்கனவே, 118 தனிமங்களுக்கும் ஏற்புடைய பெயர்களைத் தந்துள்ளேன். ஒரு முறை பார்த்துக் கொள்ளவும்) மேலும், நண்பனின் மடிக்கணினியாதலால் விரும்பிய நேரமெலாம் கிடைக்காது. எனவே, கிடைத்த நேரத்தில் முடிந்ததைச் செய்துவிடுவேன். :) நீங்கள் மறுக்கமாட்டீர் என்றோர் அசட்டு நம்பிக்கையில் அதைச் செய்தேன். :) தங்கள் விளக்கத்திற்கும் இங்கு சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி. :) நல்லிரவு. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:59, 14 பெப்ரவரி 2012 (UTC)
  • //நாளைய பரிந்துரையாக மாற்றலாம் என்று எண்ணி தேவையான சில திருத்தங்களை மட்டும் செய்தேன்// அச்சச்சோ அப்படியெல்லாம் கட்டுரை ஓரளவுக்கு முடியும் முன் எதுவும் செய்யவேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்
  • உங்கள் "குறிப்பு" சுவையாக இருந்தது. குறிப்பாக நீங்கள் சொல்லும் "சொற்பயன்பாடு ஏற்கனவே இருந்தது", ஒருகால் அதை நீங்களேதான் உருவாக்கினீர்கள் என்பது உங்களுக்கு மறந்து போயிருக்கலாம்?!! பல இடங்களில் பல பெயர்கள் "எற்கனவே" இருந்தன!! (பார்க்கவும், எடுத்துக்காட்டாக- எண்வாரியாக தனிமங்களின் பட்டியல், பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல், தனிமங்களின் எண் பட்டியல் அவற்றுள் முரண்பாடுகளும் உள்ளன - அவற்றைக் களைந்து சீராக்க வேண்டும்) எனவே உங்கள் காரணம் "ஏற்கனவே இருந்தது" என்பது சரியானதாக எனக்குப் படவில்லை; அதுமட்டும் அல்ல தனிம அட்டவணையையும் மயூரநாதன் 2004 இலேயே உருவாக்கி இருந்தார்), நீங்கள் சுட்டும் இன்னொரு சுவையான கருத்து "ஏற்கனவே, 118 தனிமங்களுக்கும் ஏற்புடைய பெயர்களைத் தந்துள்ளேன்" - உங்கள் முயற்சியைப் பாராட்டுகின்றேன், ஆனால் "ஏற்புடைய" என்று நீங்களே கூறுவதில் பலவும் "ஏற்பு" இல்லாதனவாகவோ, மாற்றம் வேண்டுவனவாகவோ இருக்கலாம் அல்லவா? ஏற்பு என்பதை நாம் கூடித்தானே முடிவு செய்வோம், அல்லவா? எடுத்துக்காட்டாக நீங்கள் Rf என்பதை "ரூதெர்ஃபோர்டியம்" என்று குறித்திருக்கின்றீர்கள், அது ரதர்ஃபோர்டியம் (ஆங்கிலவழக்கு, வேறுபல வழக்குகளையும் கருத்தில் கொண்டால்), Fr என்பதற்கு ஃப்ரான்சியம் என்று பெயரிட்டிருக்கின்றீர்கள், அதனை ஃபிரான்சீயம் என்றாவது இட்டிருக்கலாம் (/ˈfrænsiəm/ fran-see-əm), பிரான்சீயம் என்று எளிமையாகவும் கூறலாமே. இன்னும் பலவும் சொல்லலாம், ஆனால் என்னைப் பார்த்து "ஒரு முறை பார்த்துக்கொள்ளவும்" என்று பரிந்துரைக்கும் நீங்கள் பல இடங்களில் பல பெயர்கள் உள்ளதையும் பார்த்திருக்கலாம்! --செல்வா 20:59, 14 பெப்ரவரி 2012 (UTC)
"ஏற்புடைய" என்ற சொல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நூல்களில் பயன்படுத்தியிருந்த பெயர்களைக் கொடுத்ததால் பயன்படுத்தப்பட்டது. //ஏற்பு என்பதை நாம் கூடித்தானே முடிவு செய்வோம், அல்லவா?// ஆம். அதன் விளைவுகள் ஒரு சில வேளைகளில் வேறு சில சிக்கல்களில் கொண்டுபோய் விடலாம். :) எனவேதான் அப்படிக்கூறினேன். பிற எந்த நாடுகளில் தமிழ் நூல்களில் என்னென்ன பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று இந்த சிறுவனுக்குத் தெரியாது. நான் படித்த நான் கற்றதை எனக்குத் தெரிந்த மொழியில் தருகிறேன். அவ்வளவுதான். அதைப் பல விவாதங்களில் ஈடுபட்டுத் தவறு என்று நிறுவவதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. ஒரு குட்டி செய்தி: ஃப்ரான்சு நாட்டின் பெயரைத் தழுவி அத்தனிமத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதால் ஃப்ரான்சியம் எனலாம். அதைவிடுத்து சீயம் என்றெல்லாம் நெடித்துக் கூறுவது தேவையற்றது. :) //என்னைப் பார்த்து "ஒரு முறை பார்த்துக்கொள்ளவும்" என்று பரிந்துரைக்கும் நீங்கள் பல இடங்களில் பல பெயர்கள் உள்ளதையும் பார்த்திருக்கலாம்! // மன்னிக்கவும்.
கடைசி: //அச்சச்சோ அப்படியெல்லாம் கட்டுரை ஓரளவுக்கு முடியும் முன் எதுவும் செய்யவேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்// முதற்பக்க இற்றைக்குப் போதிய ஆள்பலமின்மையே இந்த நிலைக்குக் காரணம் எனலாம். :( -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:20, 17 பெப்ரவரி 2012 (UTC)

//எனவே, கிடைத்த நேரத்தில் முடிந்ததைச் செய்துவிடுவேன். :)//

//நீங்கள் மறுக்கமாட்டீர் என்றோர் அசட்டு நம்பிக்கையில் அதைச் செய்தேன். :)//

//ஒரு முறை பார்த்துக் கொள்ளவும்//

//அதைப் பல விவாதங்களில் ஈடுபட்டுத் தவறு என்று நிறுவவதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை//

சூரியா, ஒரு நிருவாகி என்ற முறையில் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுகிறேன். உங்களுக்கு நேரம் இல்லை, கணினி இல்லை என்பதால் நீங்கள் சரி என்று நினைப்பவற்றை உடனுக்குடன் செய்து விட வேண்டாம். சில விக்கி நடைமுறைகளுக்கு உட்பட்டு பொறுமை காக்கவே வேண்டும். முழுமை பெறாத, உரையாடல் ஓடிக் கொண்டிருக்கும் கட்டுரைகளை முதற்பக்கத்தில் காட்டுவதைத் தவிர்க்கலாம். நன்றி--இரவி 08:46, 17 பெப்ரவரி 2012 (UTC)

என் பொறுப்பற்ற (சில) கருத்துகளுக்கு மன்னிக்கவும். இனி இதுபோன்ற சொல்லாடல்களைக் கையாள மாட்டேன். @செல்வா & @இரவி: பல தனிமக் குறுங்கட்டுரைகளை விடவும் இதில் தேவையான அளவு உள்ளடக்கம் இருந்ததாலேயே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த முயன்றேன். சுட்டிக்காட்டித் திருத்தியமைக்கு இருவருக்கும் நன்றி. :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:09, 19 பெப்ரவரி 2012 (UTC)
சூர்யா, நீங்கள் கூறுகின்றீர்கள்: //ஒரு குட்டி செய்தி: ஃப்ரான்சு நாட்டின் பெயரைத் தழுவி அத்தனிமத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதால் ஃப்ரான்சியம் எனலாம். அதைவிடுத்து சீயம் என்றெல்லாம் நெடித்துக் கூறுவது தேவையற்றது. :)// உங்கள் விருப்பம் ஐயா. ஆனால் அந்தத் தனிமத்தின் பெயர் /ˈfrænsiəm/ fran-see-əm/ (ஃப்ரான்சீயம்) என்று நீட்டி ஒலிப்பதுதான். நான் நீட்டவில்லை! தமிழில் பிரான்சிய மொழியைப் பிரான்சியம் என்று(/ம்) அழைப்பதால். தனிமத்தின் பெயர் ஆங்கிலத்தில் வழங்குவது போலவே பிரான்சீயம் (அல்லது ஃபிரான்சீயம்) என்று நீட்டி வழங்குவது பொருந்தும் என்றேன். --செல்வா 05:40, 19 பெப்ரவரி 2012 (UTC)
சரி. :) தவறாகக் கூறிவிட்டேன். பிழைக்கு மன்னிக்கவும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:45, 19 பெப்ரவரி 2012 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம் சூர்யா.. விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/2012/பிப்ரவரி இதைப் பார்க்கவும்.. --shanmugam (பேச்சு) 16:52, 2 மார்ச் 2012 (UTC)

சுட்டியமைக்கு நன்றி. தாராளமாக பிழைகளை நீங்களே திருத்தலாம். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:55, 2 மார்ச் 2012 (UTC)
சிறிது சந்தேகமாக இருந்தது.. அதானால்தான் திருத்தவில்லை. :)--shanmugam (பேச்சு) 16:59, 2 மார்ச் 2012 (UTC)

வணக்கம் சூர்யா..விக்கிப்பீடியா பேச்சு:தொடுப்பிணைப்பி இதை கொஞ்சம் பாருங்களேன்.. எனக்கு மட்டும் வேலை செய்யவில்லையா?.. அல்லது அனைவருக்குமா?....--shanmugam (பேச்சு) 09:53, 21 மார்ச் 2012 (UTC)

பிறந்த நாள் வாழ்த்துக்கள்[தொகு]

பிறந்தநாள் வாழ்த்துக்கள் , Surya Prakash.S.A./தொகுப்பு08 அவர்களே! விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் தங்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறது!

--சோடாபாட்டில்உரையாடுக 03:45, 23 மார்ச் 2012 (UTC)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா :) --shanmugam (பேச்சு) 05:04, 23 மார்ச் 2012 (UTC)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 09:37, 23 மார்ச் 2012 (UTC)
வணக்கம் Surya Prakash.S.A./தொகுப்பு08 அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--மதனாஹரன் (பேச்சு) 09:38, 23 மார்ச் 2012 (UTC)

Berlin hackathon invitation[தொகு]

I am sorry, but I only speak English.

Hi! I invite you to the yearly Berlin hackathon, 1-3 June. Registration is now open. If you need financial assistance or help with visa or hotel, then please register by May 1st and mention it in the registration form.

This is the premier event for the MediaWiki and Wikimedia technical community. We'll be hacking, designing, teaching, and socialising, primarily talking about ResourceLoader and Gadgets (extending functionality with JavaScript), the switch to Lua for templates, Wikidata, and Wikimedia Labs.

We want to bring 100-150 people together, including lots of people who have not attended such events before. User scripts, gadgets, API use, Toolserver, Wikimedia Labs, mobile, structured data, templates -- if you are into any of these things, we want you to come!

I also thought you might want to know about other upcoming events where you can learn more about MediaWiki customization and development, how to best use the web API for bots, and various upcoming features and changes. We'd love to have power users, bot maintainers and writers, and template makers at these events so we can all learn from each other and chat about what needs doing.

Check out the the developers' days preceding Wikimania in July in Washington, DC and our other events.

Best wishes! - Sumana Harihareswara, Wikimedia Foundation's Volunteer Development Coordinator. Please reply on my talk page at mediawiki.org. Sumanah (பேச்சு) 22:22, 5 ஏப்ரல் 2012 (UTC)

நன்றி[தொகு]

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:29, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி சூர்யா--சண்முகம் (பேச்சு) 11:51, 26 மே 2012 (UTC) +1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:25, 30 மே 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் பெயரில் இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:04, 8 சூன் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது[பதிலளி]

நன்றி தென்காசி. :) more coming... -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:04, 8 சூன் 2012 (UTC)[பதிலளி]

தங்களது "Pneumothorax தமிழில் என்ன பெயர்?" என்பதற்கான எனது பதிலை இங்கே இட்டுள்ளேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:14, 25 சூன் 2012 (UTC)[பதிலளி]

வருக[தொகு]

வருக, சூரியா. அரசின் திட்டம் பயனளிப்பது கண்டு மகிழ்ச்சி. கன்னியாக்குமரியில் நடந்த விக்கி பயிற்சிப் பட்டறையில், உங்கள் பேராசிரியர் உங்களால் தான் ஒரு விக்கிப்பீடியராக ஆனதாக குறிப்பிட்டது பெருமிதமாக இருந்தது. தொடர்க உங்கள் பரப்புரை :)--இரவி (பேச்சு) 16:39, 28 பெப்ரவரி 2013 (UTC)


நன்றி. அவர் தொடங்கி எழுதிய கட்டுரைதான் இது இயங்கமைவு -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:11, 28 பெப்ரவரி 2013 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம் சூர்யா அவர்களே, அரவிந்த் மாயாராம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை நீக்கி உள்ளீர்கள். இந்த கட்டுரைக்கு தலைப்பு சரியில்லை என்றால் தலைப்பை மாற்றி இருக்கலாமே.

கோபிகுமார், இக்கட்டுரையின் தலைப்பு மட்டுமல்ல, கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவலும் விக்கிப்பீடியாவில் இடம்பெறத் தகுதியுள்ளதாக (notability) இருக்கவில்லை.--Kanags \உரையாடுக 12:10, 15 மார்ச் 2013 (UTC)
+1-- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:46, 15 மார்ச் 2013 (UTC)

தமிழ் பிராமி தட்டச்சு பலகையை நிறுவிட முடியுமா?[தொகு]

http://www.virtualvinodh.com/aksaramukha இத்தளத்திலுள்ள பிராமி தட்டச்சு பலகையை தமிழ் விக்கியில் நிறுவிட முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:45, 17 மார்ச் 2013 (UTC)

மூல நிரல் கிடைத்தால் செய்யலாம். நான் வினோத்திடம் கேட்டுப்பார்க்கிறேன். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:59, 17 மார்ச் 2013 (UTC)
பிராமி ஒருங்குறியில் இருக்கிறதா? இருந்தால் mapping மட்டும் செய்து பக்சில்லாவில் வழு போட்டு செய்துவிடலாம். இல்லையெனில் இங்கும் நிறுவ இயலாது--சோடாபாட்டில்உரையாடுக 17:34, 17 மார்ச் 2013 (UTC)