பண்டையகால தொண்டை மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொண்டை மண்டலம் என்ற தொண்டைநாடு, தமிழ்நாட்டின் வடக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்று பகுதி ஆகும்.[1] இப்பகுதியிலுள்ள மாவட்டங்கள் பாரம்பரிய பல்லவ இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். தொண்டை மண்டலத்தின் எல்லைகள் தெளிவற்றது – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தொண்டை மண்டலத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப்பகுதி, விழுப்புரம் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள சில குழுக்கள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் நடு நாடு எனக் கூறப்படும் கடலூர் மாவட்டத்திலுள்ள தனி பகுதி, சிலர் வேலூர் மாவட்டம் மற்றும் நடு நாடு என அழைக்கப்படுவதையும் இதனுடன் இணைக்கிறார்கள். மிகப்பெரிய தொண்டை மண்டலம் இவற்றை எல்லாம் உள்ளடக்கியது மற்றும் தொண்டை மண்டலத்தை விரிவுபடுத்தினால், ஆந்திராவிலுள்ள சித்தூர் மற்றும் நெல்லூர் பகுதிகளும் இணையும்.[2]

வரலாறு[தொகு]

இருளர் அல்லது அரவர் எனப்படும் பழங்குடி தலைவர்களால் இப்பகுதி ஆரம்ப காலத்தில் ஆட்சி செய்யப்பட்டது. முதல் நூற்றாண்டில் இப்பகுதி சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். மூன்றாம் நூற்றாண்டில் தொண்டை நாடு இளந்திரையனால் ஆட்சி செய்யப்பட்டது. தொண்டைமான் என்ற பெயர் பெற்ற முதல் அரசரான இவரை, பி. டி. சீனிவாச ஐயங்கார், இளவரசனுடன் அடையாளப்படுத்துகிறார். ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை நான்கிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்கால பல்லவர்களின் தலைநகரம் பண்டைய காஞ்சிபுரம் ஆகும். பண்டயகால அரசர் அதோண்டை தொண்டை நாட்டைக் கைப்பற்றி, திருசைலத்திலிருந்து வெள்ளாளர்களை கொண்டு வந்தார்.

பாலாறு ஆற்றின் பெருநிலத்தைச் சுற்றியும் மற்றும் வட காவேரி ஆற்றின் பெருநிலப்பகுதியும் தான் தொண்டை நாடு ஆகும். இரண்டாம் சோழ அரசரான ஆதித்யாவால் இது கைப்பற்றப்பட்டது. காஞ்சிபுரத்தின் பல்லவ அரசர்களை தோற்கடித்து, அனைத்து தொண்டை மண்டலத்தையும் சோழ எல்லைக்குள் கொண்டுவந்தார். தொண்டை நாடு என்பது ஆந்திராவின் சித்தூர் மற்றும் நெல்லூர் பகுதிகளை உள்ளடக்கியது.[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tondaimandalam Flesh Out History". The Times of India. Archived from the original on 1 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "south to Tondaimandalam in the north". The britannica. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
  3. "Restoring past glory". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.