பட்டாணி நீலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாணி நீலன்
லேம்பிடெசு போயிடிகசு. மேற்புறம்
லேம்பிடெசு போயிடிகசு. ஆண், அடிப்பகுதி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
லேம்பிடெசு
இனம்:
லே. போயிடிகசு
இருசொற் பெயரீடு
லேம்பிடெசு போயிடிகசு
(லின்னேயஸ், 1767)

பட்டாணி நீலன் (Lampides boeticus-லேம்பிடெசு போயிடிகசு)[1][2] அல்லது நீண்ட வால் நீலன்[2] என்பது சிறிய பட்டாம்பூச்சி ஆகும். இது லைசீனிட்சு அல்லது சிலந்தி நூல்-சிறகுகள் கொண்ட பட்டாம்பூச்சிகள் குடும்பத்தைச் சேர்ந்தது.[3]

சொற்பிறப்பியல்[தொகு]

இலத்தீன் சிற்றினப்பெயரான போயிடிகசு என்பது ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள உரோமானியப் பேரரசின் மாகாணமான பேடிகாவைக் குறிக்கிறது. இதன் பொதுவான பெயர், பின் இறக்கைகளில் நீளமான செதில்கள், ஆணின் பிரகாசமான மாறுபட்ட நீல நிறம் மற்றும் பட்டாம்பூச்சியின் பொதுவான புரவலன் தாவரமான பட்டாணி ஆகியவற்றைக் குறிக்கிறது.

பரவல்[தொகு]

இந்த சிற்றினத்தை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தெற்கு [1] மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆத்திரேலியாவில் காணலாம்.[2] ஹவாய் தீவுகளிலும் காணப்படுகிறது.

வாழ்விடம்[தொகு]

இந்த சிற்றினம் கடல் மட்டத்திற்கு மேல் 2,700 மீட்டர்கள் (8,900 அடி) உயரத்தில் காடுகள், மலை புல்வெளிகள் மற்றும் பூக்கள் நிறைந்த இடங்களில் வாழ்கிறது.[4][5][6]

விளக்கம்[தொகு]

சப்பானின் டோக்கியோவில்.

ஆண்களில் இறக்கை நீட்டம் 24-32 மி.மீட்டரும் பெண் பூச்சிகளில் 24-34 மி.மீட்டரும் ஆகும்.[5] இந்த சிறிய பட்டாம்பூச்சிகளில் (இவற்றின் குடும்பத்திற்கு வழக்கத்திற்கு மாறாக பெரியதாக இருந்தாலும்) ஆண்களுக்குப் பழுப்பு நிற விளிம்புகளுடன் இறக்கை நீல நிறத்திலிருக்கும். அதே சமயம் பெண் பூச்சியின் இறக்கைகளின் மையத்தில் ஒரு சிறிய அளவு நீல நிறம் மட்டுமே கொண்டுள்ளன. (பால் ஈருருமை).[7][8] இரு பாலினருக்கும் பின் இறக்கைகளில் மெல்லிய, நீண்ட வால் மற்றும் குத கோணத்தில் இரண்டு கருப்பு புள்ளிகள் உள்ளன. இறக்கைகளின் அடிப்பகுதி காவி மற்றும் வெள்ளை அடையாளங்கள் மற்றும் பெரிய வெள்ளை ஓரங்களின் உட்புறம் காணப்படும் கோடுகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.[6]

பின் இறக்கையின் அடிப்பகுதியில் வால் பக்கத்தில் ஒரு இணை சிறிய கருப்பு கண் போன்ற புள்ளிகளைக் கொண்டுள்ளன. குத கோணத்தில் ஆரஞ்சு விளிம்பு புள்ளிகள் உள்ளன.[7] இந்த சிற்றினம் லெப்டோட்சு பிரித்தசு ஒத்துள்ளது. மேலும் இது கேசிரியசு மார்செல்லி சிற்றினத்துடன் குழப்பமடையலாம். இருப்பினும் பட்டாணி-நீலம் இரண்டு சிற்றினங்களையும் விட பெரியதாக உள்ளது.

ஆண்: மேற்புறம் ஊதா-நீலம், முடி போன்ற வெண்மையான செதில்கள் இரண்டு இறக்கைகளின் முழு மேற்பரப்பிலும் சிதறி காணப்படுகின்றன. விளிம்பு மற்றும் வெளிப்புற விளிம்பு பழுப்பு நிற கோடு கொண்ட முன் இறக்கை, பிந்தியது பெரும்பாலும் சிறிது உள்நோக்கிப் பழுப்பு நிற பரவலுடனும், பின் இறக்கை இதே விளிம்பு கோட்டுடன், பெரிய வட்டமான கருப்பு இடைவெளி 2 இல் முடிவிற்கு முன் புள்ளிகளுடன், இன்டர்ஸ்பேஸ் 1 இல் ஒரு சிறிய இடம், ஒவ்வொரு இடமும் வளையம், சில சமயங்களில் வெளிர் நீலம், சில சமயங்களில் வெளிர் ஆரஞ்சு-ஓக்ரியஸ். சிலியா வெள்ளை, பழுப்பு நிற அடித்தள பட்டையுடன்; வால் கருப்பு, நுனி வெள்ளை. லேசான காவி நிறத்துடன் சாம்பல் நிறத்தின் அடிப்பகுதி, பழுப்பு நிற அடையாளங்கள் பெண்: மேற்புறம் சிறிது பழுப்பு நிறமாகக் காணப்படும். இரண்டு இறக்கைகளின் அடிப்பகுதியிலும், முன் இறக்கையின் உட்புறத்திலும் பளபளக்கும் நீல செதில்கள் காணப்படும். பின் இறக்கையில் ஆணில் உள்ளதைக் காணப்படும் இரண்டு புள்ளிகளுக்கிடையே இடைவெளிகள் காணப்படும். மேலும் சில வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகள் இறக்கையின் மேல் இருக்கும். இவை அனைத்தும் வெளிப்புறமாக நேர்த்தியான வெள்ளை இறகின் ஓரத்திற்கு முன்னர் விளிம்பு கோடு காணப்படும். தட்டு முழுவதும் இரத்த நாளங்களால் பிரிக்கப்பட்ட குறுகிய வெள்ளை பட்டை ஆணில் உள்ளதைப் போலக் கீழ்ப்புறம் காணப்படும். உணர்கொம்பு கருப்பு நிறத்தில் வெள்ளை வளையத்துடனும் தலையும் உடலும் கருப்பு-பழுப்பு நிறத்திலும், நீல நிறத்து இளம்பருவத்தில் கீழே வெள்ளை நிறத்துடன் காணப்படும்

—சுவைன்கோ, லெப்பிடாப்பிடிரா இண்டிகா. தொகுதி VIII[3]
லாம்பைட்சு போடிகசு, பெண்

சூழலியல்[தொகு]

இந்த சிற்றினம் ஆண்டுக்கு மூன்று தலைமுறைகளைக் கொண்டிருக்கலாம். முதிர்ச்சியடைந்த பூச்சிகள், பிப்ரவரி முதல் நவம்பர் தொடக்கத்தில் பறக்கின்றன.[5][6] முட்டைகள் வெள்ளை நிறத்தில் பச்சை நிறத்துடன், வட்டு வடிவ வடிவத்தைக் கொண்டிருக்கும். இவை 0.5 மி.மீ. விட்டம் இருக்கலாம். இவை புரவலன் தாவரங்களின் பூ மொட்டுகளில் தனித்தனியாக இடப்படுகின்றன.[7]

பழைய கம்பளிப்பூச்சிகள் பச்சை அல்லது சிவப்பு-பழுப்பு, இருண்ட முதுகு பட்டையுடன் இருக்கும். இவை 14-15 மி.மீ. வரை வளர்கின்றன. கூட்டுப்புழு 9-10 மி.மீ. நீளம் வரை வளரலாம். இவை வெளிர் சாம்பல்-பழுப்பு நிறத்தில் நடுத்தர அளவிலான கரும்புள்ளிகள் மற்றும் இருண்ட முதுகுப் பட்டையுடன் காணப்படும்.[4]

இளம் உயிரிகள், மெடிகாகோ, குரோடலேரியா, பாலிகலா, சதர்லேண்டியா, டோலிச்சோசு, சைட்டிசசு, இசுபார்டியம் மற்றும் லதைரசு சிற்றின தாவரங்கள் உட்படப் பல பபேசியே சிற்றினங்களின் பூக்கள், விதைகள் மற்றும் காய்களை உண்ணும்.[2] இது குரோடோலாரியா பாலிடாவிலும் காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.[9]

ஆத்திரேலியாவில், இளம் உயிரிகள் எப்போதாவது பிராகோடெல்லா, இரிடொமைர்மெக்சு அல்லது கேம்போனோடசு பேரினங்களில் உள்ள எறும்புகளால் கவரப்படுகின்றன.

வாழ்க்கை சுழற்சி
இனம்சேரும் துணை
கம்பளிப்பூச்சி

நூல் பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 R.K., Varshney; Smetacek, Peter (2015). A Synoptic Catalogue of the Butterflies of India. New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi. பக். 133–134. doi:10.13140/RG.2.1.3966.2164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-929826-4-9. https://www.researchgate.net/publication/287980260. 
  2. 2.0 2.1 2.2 2.3 Funet
  3. 3.0 3.1 இந்தக் கட்டுரை இப்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள ஒரு பிரசுரத்தின் உரையை உள்ளடக்கியது: Charles Swinhoe (1910–1911). Lepidoptera Indica. Vol. VIII. London: Lovell Reeve and Co.. பக். 45–46. https://www.biodiversitylibrary.org/item/104151#page/59/mode/1up. 
  4. 4.0 4.1 Lepidoptera Caucasi
  5. 5.0 5.1 5.2 Simon Coombes Captain's European Butterfly Guide பரணிடப்பட்டது 2017-03-16 at the வந்தவழி இயந்திரம்
  6. 6.0 6.1 6.2 Euro Butterflies by Matt Rowlings
  7. 7.0 7.1 7.2 "Lepidoptera Butterfly House". Archived from the original on 2017-02-19. பார்க்கப்பட்ட நாள் 2017-02-18.
  8. New Zealand Butterflies
  9. Kunte, K. 2006. Additions to the known larval host plants of Indian butterflies. Journal of the Bombay Natural History Society 103(1):119-121

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாணி_நீலன்&oldid=3794404" இலிருந்து மீள்விக்கப்பட்டது