பஞ்சாபி சந்து அல்வா கராச்சிவாலா
பஞ்சாபி சந்து அல்வா கராச்சிவாலா (Punjabi Chandu Halwai Karachiwala) என்பது மகாராட்டிர மாநிலம் மும்பை மாநகராட்சியில் உள்ள ஒரு அல்வா கடை ஆகும். முதன் முதலில் 1896ஆம் ஆண்டு பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில்[1] பஞ்சாபி காத்ரியைச் சேர்ந்த சந்துலால் பாக்லால் என்பவரால் நிறுவப்பட்டது. [2]
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இக்கடையின் உரிமையாளர்கள் மும்பை நகரத்திற்கு சென்றனர். [3] பாம்பே அல்வா என்றும் அழைக்கப்படும் இந்த கராச்சி அல்வா, கராச்சி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த அல்வாகாரர்களினால் பிரபலமானது.
இவர்கள் பல தயாரிப்புகள் பாரம்பரியமாக தயார்செய்த போதிலும் எப்போதாவது புதிய இனிப்புகளை உருவாக்குகின்றனர்.[4]
அகதிகளுக்கு உணவளித்தல்
[தொகு]பாக்கித்தானுக்கான முதல் உயர் ஆணையர் சிறீபிரகாசா, பிரிவினையின் போது 1947ஆம் ஆண்டு கராச்சியில் அகதிகளுக்கு உணவளிப்பதில் பிரச்சினையை எதிர்கொண்டபோது இந்த உணவகத்தினர் உணவுக்கான கட்டணத்தை பெற்றுக்கொள்ள மறுத்ததை நினைவு கூர்ந்தார்.[5]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ramananda Chatterjee (1938). The Modern Review (Prabasi Press Private, Limited) 64: 91.
- ↑ Sweet dreams are made of this, Meher Marfatia, Mid-Day, 17 July,2022
- ↑ Pakistan: Birth and Early Days, Sri Prakāśa, Hindustan times, Meenakshi Prakashan, 1965, p. 67, 68
- ↑ Mugdha Variyar (23 September 2012). "Modaks with a twist flavour of this year's Ganeshotsav". Hindustan Times (Mumbai) இம் மூலத்தில் இருந்து 13 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140313022755/http://www.hindustantimes.com/india-news/mumbai/modaks-with-a-twist-flavour-of-this-year-s-ganeshotsav/article1-934289.aspx. பார்த்த நாள்: 16 February 2014.
- ↑ मौत को बुलावा था हिन्दू पोशाक पहनना http://panchjanya.com/arch/2000/2/6/File19.htm