பக்ரிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்ரிடே
புதைப்படிவ காலம்:56–0 Ma
இயோசின் முதல்[1]
கெமிபகுரசு பிளானிசெப்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பக்ரிடே
பேரினம்
  • வாழுன் பேரினங்கள்

பக்ரிச்திசு
பேக்ராய்ட்சு
பாக்ரசு
படேசியோ
சந்திரமரா
கோரியோபேக்ரசு
கெமிபாக்ரசு
கெமிலியோகாசிசு
கோராபாக்ரசு
கோலோபாக்ரசு
லியோகாசிசு
மிசுடசு
நானோபேக்ரசு
ஒளிரா
பெல்டியோபேக்ரசு
சூடோபேக்ரசு
சூடோமிசுடசு
இராம
ரீட்டா
இசுபெராட்டா
சுண்டோலிரா[2]
தச்சிசுரசு

  • அழிந்துபோன பேரினங்கள்

ஈமோக்ரோனசு 
கோபிபாக்ரசு 
நைஜீரியம் 
கொண்டோபக்ரசு 

பக்ரிடே (Bagridae) என்பது கெளிறு மீன் குடும்பமாகும். இவை ஆப்பிரிக்கா (பாக்ரசு) மற்றும் ஆசியா (மற்ற அனைத்து பேரினங்கள்) சப்பானிலிருந்து போர்னியோ வரை காணப்படுகின்றன.[3] இக்குடும்பத்தில் சுமார் 245 சிற்றினங்கள் அடங்கும். இந்த மீன்கள் பொதுவாக வெற்றுடல் கெளிறு மீன் அல்லது பக்ரிட் கெளிறு மீன் என்று அழைக்கப்படுகின்றன.

இக்குடும்ப மீன்கள் உணவாகப் பயன்படுகின்றன. சில சிற்றினங்கள் அலங்கார மீன்களாகவும் வளர்க்கப்படுகின்றன.[3]

பண்புகள்[தொகு]

முதுகுத் துடுப்புக்கு முன்னால் ஒரு முள்ளெலும்பு உள்ளது. கொழுப்பு துடுப்பு உள்ளது. சில சிற்றினங்களில் ஒப்பீட்டளவில் நீண்ட அடித்தளத்தைக் கொண்டிருக்கலாம். மார்புத் துடுப்பு முதுகு தண்டுவடமாக இருக்கலாம். உடல் முற்றிலும் செதில்களற்றுக் காணப்படும். இந்த வகை மீன்களின் அதிகபட்ச நீளம் சுமார் 1.5 m (4.9 அடி) ஆகும். பாக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன்கள் சுவை மொட்டு -செறிவூட்டப்பட்ட புறவணியிழைய அடுக்குடன் நன்கு வளர்ச்சியடைந்த நான்கு இணை உணர் இழைகளைக் கொண்டுள்ளன.[4]

வகைப்பாட்டியல்[தொகு]

இந்த குடும்பத்தின் வகைப்பாட்டியல் மறுவரையறுக்கப்பட்டது. நெல்சனால் 1994-ல் வகைப்படுத்திய இக்குடும்பம் 2006-ல் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. கிளாரொடெயிடே மற்றும் ஆசுட்ரோகிளானிடே ஆகியவை முன்பு பாக்ரிட்களாக இருந்த சிற்றினங்களைக் கொண்டுள்ளன. ஆசெனோகிளானிடிடே என்பது சில ஆதாரங்களின் அடிப்படையில் கிளரோட்டிடேயின் துணைக் குடும்பமாகவும், மற்றவை கெப்டாப்டெரிடேயின் சகோதர குழுவாகவும், இதன் சொந்த குடும்பமாகவும் கருதப்படுகிறது. சில வகைப்பாட்டியலாளர்கள் கோராபாக்ரசு பேரினத்தை கோராபக்ரிடே[5] குடும்பத்தில் இரண்டு வகைகளுடன் சேர்த்து தற்போது ஷில்பீடேயில் இருப்பதாகக் கருதுகின்றனர்.[6]

இக்குடும்பம் ஒற்றை உயிரலகு தொகுதிக் குடும்பமா இல்லையா என்பது தெளிவாக இல்லை. மற்ற கெளுத்தி மீன்களுடன் இதன் உறவு என்னவாக இருக்கும் என்பதிலும் தெளிவில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ferraris, C.J.Jr. (2007). "Checklist of catfishes, recent and fossil (Osteichthyes: Siluriformes), and catalogue of siluriform primary types". Zootaxa 1418: 1–628. doi:10.11646/zootaxa.1418.1.1. http://silurus.acnatsci.org/ACSI/library/biblios/2007_Ferraris_Catfish_Checklist.pdf. 
  2. Ng H.H.; Hadiaty R.K.; Lundberg J.G.; Luckenbill K.R. (2015). "A new genus and species of bagrid catfish from northern Sumatra (Siluriformes: Bagridae)". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia 164 (1): 149–157. doi:10.1635/053.164.0112. 
  3. 3.0 3.1 3.2 Nelson, J.S. (2006). Fishes of the World. John Wiley & Sons, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-25031-7.
  4. Zhang, G.-H.; Deng, S.-P.; Zhang, H.-Y.; Li, H.-T.; Li, L.-L. (2006). "Distribution of different taste buds and expression of a-gustducin in the barbells of yellow catfish (Pelteobagrus fulvidraco)". Fish Physiology and Biochemistry 32 (1): 55–62. doi:10.1007/s10695-006-6937-z. பப்மெட்:20035479. 
  5. Hofreiter, Michael; Wang, Jing; Lu, Bin; Zan, Ruiguang; Chai, Jing; Ma, Wei; Jin, Wei; Duan, Rongyao et al. (2016). "Phylogenetic relationships of five Asian schilbid genera including Clupisoma (Siluriformes: Schilbeidae)". PLOS ONE 11 (1): e0145675. doi:10.1371/journal.pone.0145675. பப்மெட்:26751688. Bibcode: 2016PLoSO..1145675W. 
  6. "Catalogue of Fishes". California Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்ரிடே&oldid=3846293" இலிருந்து மீள்விக்கப்பட்டது