உள்ளடக்கத்துக்குச் செல்

சுவை அரும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவை அரும்பு- கட்டமைப்புப் படம்

சுவை அரும்பு என்பது சுவைப் புலனங்கம் எனப்படும் சுவை வாங்கு கலங்களைக் கொண்ட கட்டமைப்பு ஆகும்.[1] சுவை வாங்கு கலங்கள் நாக்கின் மேற்பரப்பு, மென் அண்ணம், கன்னம், களத்தின் மேற்பகுதி மற்றும் மூச்சுக் குழல்வாய் மூடி முதாலானவற்றில் காணப்படும் அரும்பு முளைகளைச் சுற்றிக் காணப்படுகின்றன.இந்தக் கட்டமைப்பு சுவை உணர்வு தொடர்பான ஐந்து சுவைக் கூறுகளான உவர்ப்பு, புளிப்பு,கசப்பு, இனிப்பு, முதலானவற்றை இனங்காண உதவுகின்றன. இந்த ஒவ்வொரு சுவைக்கும் சிறப்பான பாகங்கள் பிரிக்கப்பட்டுக் காணப்படுகின்ற போதிலும், நாக்குநாக்கின் மேற்பரபிலுள்ள எந்தப்பகுதியின் மூலமும் எல்லாச் சுவைகளும் உணரக்கூடியது என்பதை அண்மைய ஆய்வுகள் காடுகின்றன. உமிழ்நீரில் கரைந்த நிலையில் உணவுக் கூறுகள் சுவைக் கலங்களை அடைந்து அதிலுள்ள நுண் துளையூடாக அங்கிருந்து சுவை நரம்புகளை அடைகின்றன.[1] இவை நாக்கிலுள்ள சுவை அரும்புகளைக் கொண்டுள்ள சுவை வாங்கு கலங்களில் காணப்படும். இந்த சுவை வாங்கு கலங்கள் சுவை தொடர்பான தகவல்களை மூளையிலுள்ள சுவைப்புலன் பிரதேசத்திற்குக் கடத்தும். இவை 7ஆம், 9ஆம் 10ஆம் மண்டையோட்டு நரம்புகளுடன் தொடர்புறும்.

சராசரியாக மனிதரின் நாக்கில் சுமார் 2,000 முதல் 8,000 வரையான சுவை அரும்புகள் காணப்படும்.[2]

சுவைக் காம்புகளின் வகைகள்[தொகு]

சுவை அரும்புகள் அமைந்திருக்கும் நாக்கின் மேற்பரப்பில் காணப்படும் புடைப்பு போன்ற உயர்ந்து காணப்படும் அமைப்பு சுவைக்காம்புகள் எனப்படும். மனிதரின் நாக்கில் மூன்று வகையிலான சுவை அரும்புகளைக் கொண்ட சுவைக் காம்புகள் காணப்படுகின்றன:

 • பூஞ்சை வடிவ சுவைக்காம்பு - பெயரில் குறிப்பிடப்படுவது போல அதனது நெடுக்கு வெட்டுமுகத் தோற்றத்தில் காளானின் வடிவத்தை குண்டாந்தடி வடிவிலானதாகவும் சிவப்புநிறத்திலும் இவை காணப்படும். ஏறக்குறைய ஒத்ததாக இது காணப்படும். இது பெரும்பாலும் நாக்கின் முதுகுப்புறம் மற்றும் நாவின் நுனி மற்றும் பக்கங்களிலுமான பகுதிகளில் அதிகளவில் இவை காணப்படும். இவை முகநரம்புடனும் அதாவது ஏழாவது மண்டையோட்டு நரம்புடன் இணைக்கப்பட்டுக் காணப்படும்.
  பூஞ்சை வடிவ சுவைக் காம்பு உருப் பெருப்பிக்கப்பட்ட வரைபடப் பகுதி.
 • பரந்தமைந்த சுவைக்காம்பு - இந்த சுவைக் காம்புகள் வரம்பு மற்றும் சால் போன்ற அமைப்புகளைக் கொண்டிருக்கும். தாவது இலை ஒன்றின் தவாளிப்பு மற்றும் உயர்ந்த பகுதி போலக் காணப்படும். நாக்கின் பக்கவாட்டு எல்லைகளில் அமைந்திருக்கும். இதன் முன்பகுதி முக நரம்புடனும், பின் பகுதி நாவுரு தொண்டைக்குரிய நரம்புடனும் இணைந்து காணப்படும்.
  முயலின் பரந்தமைந்த சுவைக் காம்பின் நெடுக்கு வெட்டு முகம்
  .
 • கோட்டைச்சுவர் போன்ற சுவைக்காம்பு -இத்தகைய 10-14 சுவைக்காம்புகள் மனிதரில் காணப்படுகின்றன. இவை நாக்கின் வாய்ப்பகுதியின் கீழாகக் காணப்படும். நாக்கின் அடிப்பகுதியில் ஒரு வளையம் போல் அடுக்கப்பட்டுக் காணப்படும். இது நாவுரு தொண்டைக்குரிய நரம்புடன் அதாவது ஒன்பதாவது மண்டையோட்டு நரம்புடன் இணைக்கப்படும்.
  கோட்டைச் சுவர் வடிவிலான சுவைக் காம்பு சுவை அரும்புகளும் நரம்புகளும்

நான்காவது வகை சுவைக் காம்பான சாட்டை அமைப்பு சுவைக் காம்பு ஒரு சில எண்ணிக்கையிலேயே காணப்படும். இவை சுவை அரும்புகள் எதனையும் கொண்டிருக்காது.[3][4] இவை அதிக அளவில் கரட்டின் கொண்டமைக்கப்படிருப்பதுடன் அதிக பொறிமுறை சிராய்ப்புகளுக்கு உட்படுபவையாகக் காணப்படும்.

உவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு(உமாமி) ஆகிய சுவைகள் சுவைக் கலங்களில் ஒரு வகை முனைவாக்கங்களை ஏற்படுத்தும். ஆயினும் இதில் பல்வேறு நுட்பங்கள் பயன் படுத்தப்படும்.

கசப்புச் சுவை Ca2+,அயன்களை உள்ளக வெளியிடாக வெளியிடும். இதற்கு வெளியிலிருந்து Ca2+ தேவைப்படாது.

அரும்புகள் இரண்டு வகையான கலங்களால் ஆக்கப்பட்டிருக்கும். ஒன்று உதவு கலங்கள். மற்றையது சுவைப் புலன் கலங்கள்.

உதவு கலங்கள் அல்லது ஆதாரக் கலங்கள் எனப்படுபவை பொறிமுறை ஆதாரத்தை வழங்கும் கலங்கள் ஆகும். இவை பீப்பாக்களின் தடுப்புக்கள் போல அடுக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் அரும்பின் ஒரு மூடும் எல்லையை அமைத்திருக்கும். சில உதவு கலங்கள் சுவைக் கலங்களுக்கு இடையில் காணப்படுவதும் உண்டு.

சுவைக் கலங்கள் ஒரு வேதியியல் உணரியாக தொழிற்படும். இவை சுவை அரும்புகளின் நடுப்பகுதியில் காணப்படும். இவை சுழலியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு கலத்தின் நடுப்பகுதியிலும் கோள வடிவிலான பெரிய கரு காணப்படும்.

இந்தக் கலத்தின் சுற்றயல் எல்லை சுவைத் துளை எனப்படும் துளையில் முடிவடையும். இது பிசிர்களாலான சிறிய மயிர்களைக் கொண்ட பகுதியில் அமைந்திருக்கும். இந்த மயிர்கள் சுவை மயிர்கள் எனப்படும்.

இதன் மையச் செயன்முறை சுவை அரும்பின் ஆழமான உச்சப் பகுதியை நோக்கியதாக இருக்கும். இச் செயன்முறை தனியான அல்லது இரண்டாகப் பிளந்த சுருள் சிரைகளில் முடிவடையும்.

நரம்பு நுண்ணிழைகள் தமது குமிழ உறைகளை இழந்த பின்னர் சுவை அரும்புகளில் இணையும். அவை சுவைக் கலங்களுக்கு இடையிலான நுன்ணிய உச்சப் பகுதியில் முடிவடையும். ஏனைய நரம்பு நுண்ணிழைகள் உதவு கலங்களுக்கு இடையில் கிளை போன்று பகுதியாகப் பிரிந்து உச்சப் பகுதியில் முடிவடையும். ஆயினும் இவை சுவை நரம்புகள் அல்லாத சாதாரண உணர்ச்சி நரம்பு நார்கள் என நம்பப்படுகின்றது.

சுவை அரும்புகளின் சாதாரண ஆயுள் காலம் 10 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Shier, David (2016). Hole's Human Anatomy and Physiology. New York: McGraw-Hill Education. pp. 454–455. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-802429-0.
 2. Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online.
 3. Spacing patterns on tongue surface-gustatory papilla. (2004) Jung HS, Akita K, Kim JY. Int J Dev Biol. 48(2-3):157-61. PubMed
 4. mcq in anatomy by prof deepthi nanayakkara and prof malkanthi chandrasiri volume 1 head and neck 99th mcq
 5. Hamamichi, R.; Asano-Miyoshi, M.; Emori, Y. (15 September 2006). "Taste bud contains both short-lived and long-lived cell populations". Neuroscience 141 (4): 2129–2138. doi:10.1016/j.neuroscience.2006.05.061. பப்மெட்:16843606. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவை_அரும்பு&oldid=3583550" இலிருந்து மீள்விக்கப்பட்டது