நேபாள நாடாளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள கூட்டாசி நாடாளுமன்றம்

नेपालको संघीय संसद
நேபாளத்தின் இலச்சினை
வகை
வகை
அவைகள்தேசிய சபை
பிரதிநிதிகள் சபை
வரலாறு
தோற்றுவிப்பு5 மார்ச்சு 2018 (6 ஆண்டுகள் முன்னர்) (2018-03-05)
முன்புஇரண்டாம் நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
தலைமை
குடியரசுத் தலைவர்
துணை குடியரசுத் தலைவர்
நந்த கிசோர் புன், மாவோயிஸ்ட்
18 மார்ச் 2018 முதல்
தேசிய சபையின் அவைத் தலைவர்
கணேஷ் பிரசாத் திமில்சினா, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்
15 மார்ச் 2018 முதல்
பிரதிநிதிகள் சபையின் அவைத் தலைவர்
கிருஷ்ண பகதூர் மகாரா [1], மாவோயிஸ்ட்
10 மார்ச் 2018 முதல்
பிரதிநிதிகள் சபையின் துணைத் தலைவர்
சிவ மாயா தும்பஹம்பே, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்
16 மார்ச் 2018 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்334
275 பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள்
59 நேபாள தேசிய சபையின் உறுப்பினர்கள்]]
நேபாள பிரதிநிதிகள் சபை அரசியல் குழுக்கள்
ஆளும் கூட்டணி அரசு (207)

எதிர்கட்சிகள் (63)

பிறர் (5)

நேபாள தேசிய சபை அரசியல் குழுக்கள்
ஆளும் கூட்டணி அரசு (43)

எதிர்கட்சிகள் (13)

பிறர் (3)

  •   நியமன உறுப்பினர்கள் : 3
தேர்தல்கள்
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை
நேரடித் தேர்தல்
26 நவம்பர் மற்றும் 7 டிசம்பர் 2017
06 பிப்ரவரி 2018
கூடும் இடம்
பன்னாட்டு மாநாட்டு மையம், புது பானேஸ்வர், காட்மாண்டு, நேபாளம்
வலைத்தளம்
www.parliament.gov.np
அரசியலமைப்புச் சட்டம்
நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015


நேபாள கூட்டாச்சி நாடாளுமன்றம் (Federal Parliament of Nepal) கூட்டாச்சி தத்துவத்தின் படி நிறுவப்பட்ட நேபாளத்தின் உயர் அதிகாரம் படைத்த மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பாகும்.

நேபாள நாடாளுமன்றம், தேசிய சபை, (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) எனும் ஈரவைகள் கொண்டது.

நாடாளுமன்றத்தின் அமைப்பும் & பதவிக் காலமும்

2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாடாளுமன்றம் ஈரவைகள் கொண்டது.[2]

  • பிரதிநிதிகள் சபை, 275 உறுப்பினர்கள் கொண்டது. இவ்வுறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன் 275 உறுப்பினர்களில், 165 உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 110 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • நேபாள தேசிய சபை 59 உறுப்பினர்கள் கொண்டது. இவ்வுறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

இந்த 59 உறுப்பினர்களில் 3 உறுப்பினர்கள் நேபாளக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். மீதமுள்ள 56 உறுப்பினரகள் ஏழு மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மேயர் மற்றும் துணை மேயர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏழு மாநிலத்திலிருந்து எட்டு உறுப்பினர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தேடுக்கப்படும் எட்டு உறுப்பினர்களில் மூன்று பெண்களுக்கு மற்றும் ஒரு தலித் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

வரலாறு

2002ல் நேபாளத்தின் முன்னாள் நாடாளுமன்றம், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நாடளாவிய கலவரங்களை அடக்க இயலாதபடியால், நேபாள மன்னர் ஞானேந்திரா, நாடாளுமன்றத்தை 2002ல் கலைத்தார்.

2006 நேபாள ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை நேபாள மன்னர் மீண்டும் நிறுவ அனுமதித்தார். [3][[நேபாள நேபாள கட்க பிரசாத் சர்மா ஒளி நேபாளத்தின் பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

15 சனவரி 2007ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 2008ல், 330 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால இடைக்கால அரசியலமைப்பு நிர்ணயமன்றம் அமைக்கப்பட்டது.

28 மே 2008ல் நேபாள இடைக்கால் அரசியலமைப்பு நிர்ணயமன்றம், நேபாளத்தின் 238 ஆண்டு கால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, குடியாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

கெடு காலமான இரண்டு ஆண்டு காலத்தில் அரசியலமைப்பு நிர்ணய மன்றம், நேபாளத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றாத காரணத்தால், 27 மே 2012ல் கலைக்கப்பட்டது.

2013ல் நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இந்த இரண்டாவது புதிய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது.[4] இந்த அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இயற்றிய நேபாள அரசியலமைப்புச் சட்டம், 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது. நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் பதவிக்காலம் 21 சனவரி 2018ல் முடிவடைந்தது.[5] நேபாள அரசியலமைப்புச் சட்டம் 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது. இதன் மூலம் முந்தைய 2007ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக அரசியல் அமைப்பு நீக்கப்பட்டது. மேலும் நேபாள நாட்டு அரசை, நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு என பெயரிடப்பட்டு, சமயச் சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

நேபாள நாடாளுமன்றத்திற்கு நவம்பர் & டிசம்பர் 2017ல் தேர்தல் நடைபெற்றது. மக்களால் நேரடியாகவும் & விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்வு பெற்ற பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்க பிரசாத் சர்மா ஒளி நேபாளத்தின் பிரதம அமைச்சராக பிப்ரவரி, 2018ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Krishna Bahadur Mahara Elected Speaker". Nepal Republic Media (Kathmandu, Nepal). 10 March 2018 இம் மூலத்தில் இருந்து 15 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. http://www.myrepublica.com/news/37751/?categoryId=81. 
  2. http://constitution.org.np/userfiles/constitution%20of%20nepal%202072-en.pdf
  3. "Nepal's Political Development: Nepal Constituent Assembly Portal". Nepalcaportal.org. பார்க்கப்பட்ட நாள் 2010-04-10.
  4. "CA dissolved; PM proposes fresh election for Nov 22". eKantipur. 28 May 2012. https://www.ekantipur.com/2012/05/28/top-story/ca-dissolved-pm-proposes-fresh-election-for-nov-22/354644.html. பார்த்த நாள்: 22 January 2014. 
  5. "संविधानसभा प्रथम". parliament.gov.np. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_நாடாளுமன்றம்&oldid=2523303" இலிருந்து மீள்விக்கப்பட்டது