நீலம் (இரத்தினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீலம்
Logan Sapphire SI.jpg
பொதுவானாவை
பகுப்பு கனிமம் Variety
வேதி வாய்பாடு அலுமினியம் ஆக்சைடு, Al2O3
இனங்காணல்
நிறம் Every color except red (which is மாணிக்கம்) or pinkish-orange (padparadscha)
படிக இயல்பு massive and granular
படிக அமைப்பு Trigonal (Hexagonal Scalenohedral) Symbol (-3 2/m) Space Group: R-3c
பிளப்பு None
முறிவு Conchoidal, splintery
மோவின் அளவுகோல் வலிமை 9.0
மிளிர்வு Vitreous
கீற்றுவண்ணம் White
ஒப்படர்த்தி 3.95–4.03
ஒளியியல் பண்புகள் Abbe number 72.2
ஒளிவிலகல் எண் nω=1.768 - 1.772 nε=1.760 - 1.763, Birefringence 0.008
பலதிசை வண்ணப்படிகமை Strong
உருகுநிலை 2030–2050 °C
உருகுதன்மை infusible
கரைதிறன் Insoluble
பிற சிறப்பியல்புகள் CTE 5e−6 to 6.6e−6/K
Major varieties
குருந்தம் Any color except red
மாணிக்கம் Red
Emery Granular
நீலக்கல்லின் படிக அமைப்பு

நீலம் அல்லது நீலக்கல் (sapphire) நவரத்தினங்களுள் ஒன்று. நீலக்கல் என்பது குருந்ததால் ஆன இரத்தினக் கல்லைக் குறிக்கும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும். இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பதுபராசம் அல்லது பதுபராகம் என அழைக்கப்படுகிறது. சிவப்பு நிறமான இரத்தினக்கல் சிவப்புக்கல் அல்லது மாணிக்கம் என அழைக்கக்கப்படும்.

இக்கல் நகைகளில் இட்டுப் பயன்படுத்தப்படுகிறது. நீலக்கல் இயற்கையாக மண்படிவுகளில் கிடைக்கப்பெறுகின்றது. செயற்கையாக செய்யப்பட்ட நீலக்கற்களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. உயர் வண்மையைக் கொண்டுள்ளபபடியால் இலத்திரனியல் கருவிகளில் அகச்சிவப்பு ஒளியில் கூறுகளிலும் நீண்ட நாள் பயன்படும் சாளரங்கள், கடிகாரப் பளிங்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கை நீலக்கற்கள்[தொகு]

நீலக்கல் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும்.

நீலம் இலங்கை, மடகாசுகர், பர்மா, கென்யா, அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிசுத்தான் போன்ற பல நாடுகளில் கிடைக்கிறது. 1987 வரை ஆஸ்திரேலியாவிலும் தற்போது மடகாசுகரிலும் அதிக அளவில் நீலம் கிடைக்கிறது.

நீலத்தின் மதிப்பு அதன் நிறம், தூய்மை, அளவு, பட்டை மற்றும் அது தோண்டப்பட்ட இடத்தின் மூலத்தைப் பொறுத்து மாறுபடும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_(இரத்தினம்)&oldid=1910409" இருந்து மீள்விக்கப்பட்டது