லோகன் நீலக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாசிங்டன் டி. சி. யில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள லோகன் நீலக்கல் அணியூசி

லோகன் நீலக்கல் (Logan Sapphire), இலங்கையில் எடுக்கப்பட்ட குறைகள் இல்லாத தலையணை வெட்டு நீலக்கல் ஆகும். கடும் நீல நிறம் கொண்ட இக்கல் உலகில் அறியப்பட்ட நீலக்கற்களுள் இரண்டாவது பெரியது. இது 422.99 கரட் (84.6 கி) அளவு கொண்டது. இது உலகின் மிகப்பெரியனவும், மிகவும் பெயர் பெற்றனவுமான நீலக்கற்களுள் ஒன்று. இது ஏறத்தாழ ஒரு கோழி முட்டையின் அளவு கொண்டது. திருமதி பொலி லோகன் என்பவர் 1960ல் இந்தக் கல்லை சிமித்சோனிய நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கினார்..[1] அவர் பெயரிலேயே இக்கல் "லோகன் நீலக்கல்" என அழைக்கப்படுகிறது.

ஆடையூசி (brooch) ஒன்றில் பதிக்கப்பட்டுள்ள லோகன் நீலக்கல்லைச் சுற்றி இருபது வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரக்கற்கள் மொத்தமாக 16 கரட் (3.2 கி) அளவுள்ளவை. இது தற்போது வாசிங்டன் டி. சி. யிலுள்ள சிமித்சோனிய நிறுவனத்தின் இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நிலவியல், இரத்தினக்கல், கனிமங்கள் ஆகியவற்றுக்கான ஜனட் அனன்பேர்க் ஊக்கர் மண்டபத்தில், ஹால் நீலக்கல் வைர அட்டிகைக்கும் பிசுமார்க் நீலக்கல் அட்டிகைக்கும் அருகில் இந்தக் கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Logan Sapphire [G3703]". Smithsonian National Museum of Natural History. பார்த்த நாள் 20 July 2016.
  2. The Logan Sapphire Brooch
  3. Corundum (variety: Sapphire)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகன்_நீலக்கல்&oldid=2168571" இருந்து மீள்விக்கப்பட்டது