நீலம் ஆறு
நீலம் ஆறு கிசன்கங்கா ஆறு कृष्णगंगा नदी | |
River | |
பகுதி | காஷ்மீர் பள்ளத்தாக்கு |
---|---|
கிளையாறுகள் | |
- இடம் | சிந்து ஆறு, லித்தர் ஆறு |
உற்பத்தியாகும் இடம் | 34°23′23″N 75°07′19″E / 34.389629°N 75.121806°E |
- அமைவிடம் | கிசன்சர் ஏரி, சோன்மார்க், இந்தியா |
- உயர்வு | 3,710 மீ (12,172 அடி) |
கழிமுகம் | 34°21′18″N 73°28′07″E / 34.354869°N 73.468537°E |
- அமைவிடம் | ஜீலம் ஆறு, முசாஃபராபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் |
- elevation | 750 மீ (2,461 அடி) |
நீளம் | 245 கிமீ (152 மைல்) |
Discharge | |
- சராசரி | |
நீலம் ஆறு (Neelum River or Kishanganga) (இந்தி: नीलम नदी, or இந்தி: कृष्णगंगा नदी), இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கின், பந்திபோரா மாவட்டத்தின் வடக்கில் தோன்றி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் பாய்ந்து, இறுதியில் முசாஃபராபாத் நகரத்தில் ஜீலம் ஆற்றுடன் கலக்கிறது.[1]
புவியியல்
[தொகு]காஷ்மீர் பள்ளத்தாக்கின் கிசன்சர் ஏரியில் உற்பத்தியாகும்[2] நீலம் ஆறு எனப்படும் கிசன்கங்கா ஆறு, சோன்மார்க் வழியாக பாய்ந்து, வடக்கு நோக்கி திராஸ் வழியாகச் சென்று, பின்னர் மேற்கில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாய்ந்து, அங்குள்ள முசாஃபராபாத் நகரத்தில் ஜீலம் ஆற்றில் கலக்கிறது.[3][4] நீலம் ஆறு 245 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. நீலம் ஆறு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 50 கிலோ மீட்டரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மீதமுள்ள 195 கிலோ மீட்டரும் பாய்கிறது.
கிசன்கங்கா நீர் மின் திட்டம்
[தொகு]இந்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நீலம் ஆற்றை மறித்து 37 மீட்டர் உயரத்திற்கு கிசன்கங்கா நீர்த்தேக்கம் கட்டி, கிசன்கங்கா நீர் மின் திட்டத்தின் மூலம் 330 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புனல் மின்நிலையம் அமைத்துள்ளது.[5][6]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 19 மே 2018 அன்று கிசன்கங்கா நீர் மின் திட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.[7] நீலம் ஆற்றின் நீரை, மலையில் 24 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டி, கால்வாய் அமைத்து, வூலர் ஏரியில் சேமித்து பின்னர் ஜீலம் ஆற்றில் விடப்படுகிறது.
பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, 969 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புன்ல் மின்நிலையம் அமைத்துள்ளது.[5]
நீலம் ஆற்றின் குறுக்கே, இந்திய அரசு, நீர்தேக்கம் கட்டியதன் மூலம், இந்திய அரசு சிந்து ஆறு ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம்சாட்டி, அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் தீர்ப்பு பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்தது.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Banerji, Arindam (20 June 2003). "The Neelam Plan" (in English). Rediff. பார்க்கப்பட்ட நாள் 15 August 2016.
The Neelam River enters Pakistan from India in the Gurais sector of the Line of Control, and then runs west till it meets the Jhelum north of Muzzafarabad.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Majid Hussain (1998). Geography of Jammu and Kashmir. Rajesh Publications, 1998. p. 13–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185891163. பார்க்கப்பட்ட நாள் 31 July 2012.
- ↑ "The Neelam Plan". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2009-11-15.
- ↑ "Basic Facts about the Kishenganga Dam ProjectK". Kashmir Environmental Watch Association. Archived from the original on 2010-08-31. பார்க்கப்பட்ட நாள் 2009-11-15.
- ↑ 5.0 5.1 "Kishen Ganga power project to be revived". Chennai, India: தி இந்து. 22 April 2008 இம் மூலத்தில் இருந்து 2012-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106070138/http://www.hindu.com/2008/04/22/stories/2008042255671100.htm. பார்த்த நாள்: 2009-11-15.
- ↑ "Welcome to Kishenganga valley Project". NHPC Limited. பார்க்கப்பட்ட நாள் 20 December 2011.
- ↑ "Narendra Modi inaugurates Kishanganga hydropower project in Kashmir".
- ↑ Pakistan Seeks Resolution of India Water Dispute. By TOM WRIGHT in Lahore, Pakistan, and AMOL SHARMA in New Delhi. Wall Street Journal. 20 May 2010.
- ↑ "Hague Court asks India to stop Kishanganga project". The International News. 25 September 2011. Archived from the original on 25 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 20 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Neelum Valley.zoomshare
- Neelum Valley Official பரணிடப்பட்டது 2019-06-01 at the வந்தவழி இயந்திரம்