உள்ளடக்கத்துக்குச் செல்

நீலகிரி சோலைக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலகிரி சோலைக்கிளி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சோலிகோலா
இனம்:
ச. மேஜர்
இருசொற் பெயரீடு
ச மேஜர்
(செர்டோன், 1844)
வேறு பெயர்கள்

பேனிகூரா மேஜர்
போனிகூரா மேஜர்
பிராக்கியாப்டெரிக்சு மேஜர்
கெலென்னீ ரூபிவெந்திரிசு
மையோமெலா மேஜர்

நீலகிரி சோலைக்கிளி[2] [Nilgiri blue robin (Sholicola major)] அல்லது வடக்கத்தி சோலைசிட்டு[3] என்பது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அருகிய இனம் [EN] என்று செம்பட்டியலில் இடப்பட்ட ஒரு அகணிய உயிரி ஆகும். சில வருடங்கள் முன்பு வரை Sholicola albiventris உடன் வேறுபடுத்தப்படாமல் ஓரினமாகவே கருதப்பட்டு வந்தது.

உடலமைப்பும் கள அடையாளங்களும்

[தொகு]
  • நன்கு வளர்ந்த சிட்டு, தூக்கணாங்குருவியை விட சற்று சிறியது, அதாவது 14 cm இருக்கும்.
  • குண்டான உருவமும் நீளமான கால்களும் குட்டையான இறக்கையும் கொண்டது.
  • அடர்நீல உடலும் வெள்ளை அடியும் அடர்காவி நிறத்தில் விலாப்பகுதியும் இருக்கும். கால்கள் இளஞ்சிவப்பு நிறம்.
  • கருப்பு அலகு, கண்-அலகு இடைப்பகுதி கருமையாக இருக்கும்.

பெண்: சற்று வெளிரிய நிறத்துடன் காணப்படும்.

பரவல்

[தொகு]

நீலமலையில் பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கேயுள்ள தென் கருநாடக, தென்மேற்குத் தமிழக சோலைக்காடுகளில்[4] மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வி.

வாழ்விடம்

[தொகு]

சோலைக்காடுகளில் மரங்களின் கீழ்ப்பகுதிகள்; 900–2100 m உயரம் வரை இவற்றைக் காணலாம்[5].

உணவும் உணவு தேடும் முறையும்

[தொகு]

உணவு பற்றி இன்னும் தெளிவாக அறியப்படவில்லை (பூச்சிகளாக இருக்கலாம்); தரையில் கிடக்கும் மரங்களுக்கு இடையில் உணவு தேடும்[5].

ஒரு நீலகிரி சோலைக்கிளி, குன்னூர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Myiomela major". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. பாலச்சந்திரன் & பலர் (2019).  தமிழ்நாடு வனத்துறை. தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு. பக். 164:356
  3. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அகணிய பறவைகளின் பட்டியல். indiabiodiversity.org
  4. "ebird - இன வரைபடம் - Nilgiri Sholakili". பார்க்கப்பட்ட நாள் 20 மே 2021.
  5. 5.0 5.1 "birdsoftheworld -- distribution and habitat -- Nilgiri Sholakili". பார்க்கப்பட்ட நாள் 20 மே 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_சோலைக்கிளி&oldid=3756911" இலிருந்து மீள்விக்கப்பட்டது