உள்ளடக்கத்துக்குச் செல்

நசிகேத் மோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசிகேத் மோர்
பிறப்புயவத்மாள், மகாராட்டிரம், இந்தியா
பணிதேசிய இயக்குநர், பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை - இந்தியா
அறியப்படுவதுகிராமங்களுக்கு வங்கிச் சேவையை வழங்குவதற்கான நிதி சாதனங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவின் உள்ளடக்க நிதி சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் பங்களிப்பு.[1][2]
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
கேர் இந்தியா, வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி

நசிகேத் மோர் (Nachiket Mor) ஒரு இந்திய வங்கியாளர் ஆவார். இதற்கு முன்பு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தேசிய இயக்குநராக இருந்தார். கிராமங்களுக்கு வங்கி சேவையை வழங்குவதற்கான நிதி சாதனங்களை கண்டுபிடித்ததற்காகவும், இந்தியாவின் நிதி உள்ளடக்க சிக்கலைத் தீர்க்க முயற்சித்ததற்காகவும் நசிகேத் அறியப்படுகிறார்.[1][3]

கேர் இந்தியாவின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

நசிகேத் மோர் மகாராட்டிராவின் யவத்மாள் நகரத்தில் ஓர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[5] மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பின்னர் அகமதாபாதின் இந்திய மேலாண்மைக் கழகத்தில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கு இவர் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜனின் வகுப்புத் தோழராக இருந்தார்.[5] நசிகேத் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வார்டன் பள்ளியில் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.

தொழில்[தொகு]

படிப்பிற்குப் பிறகு பிரதான் என்ற அரசு சாரா நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் காளான் விவசாயிகளுடன் பணியாற்றினார். [1] பின்னர் 1987 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் கு. வா. காமத்பணியமர்த்தப்பட்டார். 1990 களின் நடுப்பகுதியில், நசிகேத் வார்டன் பள்ளியில் தனது முனைவர் பட்டம் பெற இந்தப் பணியிலிருந்து விலகி மீண்டும் வங்கிப்பணிக்குத் திரும்பினார்.[6]

2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நசிகேத் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து வெளியேறி, கிராமப்புற வளர்ச்சிக்கான உள்ளடக்கிய வளர்ச்சிக்காக புதிதாக நிறுவப்பட்ட ஐசிஐசிஐ அறக்கட்டளைக்குத் தலைமை தாங்கினார்.[6]{மே 2009 இல், நிதி மென்பொருளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமெரிக்க பன்னாட்டு வணிக மென்பொருள் நிறுவனமான இன்ட்யூட் தனது இந்திய ஆலோசனைக் குழுவில் இவரை நியமித்தது.[7] செப்டம்பர் 2010 இல், கிராமங்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்காக செயல்படும் சுகவாழ்வு (மகிழ்ச்சியான வாழ்க்கை ) என்ற அமைப்பில் இணைந்து பணியாற்ற அறக்கட்டளையை விட்டு வெளியேறினார்.[3]

மே 2013 இல், நசிகேத் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்திலும் கிழக்குப் பகுதியில் உள்ள அதன் உள்ளூர் வாரியத்திலும் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[8] செப்டம்பர் 2013 இல், சிறு வணிகங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான விரிவான நிதிச் சேவைகளுக்கான குழு உருவாக்கப்பட்டது. இது நச்சிகேத் மோர் தலைமையில் அமைக்கப்பட்டது.[9] [10] அக்டோபர் 2013 இல், புதிய வங்கி உரிமங்களுக்கான விண்ணப்பங்களை ஆராயும் பிமல் ஜலான் தலைமையிலான 4 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ரிசர்வ் வங்கியின் இவர் சேர்க்கப்பட்டார்.[11]

மார்ச் 2016 இல், நசிகேத் பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் இந்திய நாட்டின் அலுவலகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.[12] மார்ச் 2019 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Lunch With BS: Nachiket Mor". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 16 December 2008. http://www.business-standard.com/article/opinion/lunch-with-bs-nachiket-mor-108121601063_1.html. பார்த்த நாள்: 28 July 2014. 
  2. "Ex-banker Nachiket Mor set to reconfigure rural PHCs". தி எகனாமிக் டைம்ஸ். 18 March 2011. http://economictimes.indiatimes.com/opinion/india-emerging/ex-banker-nachiket-mor-set-to-reconfigure-rural-phcs/articleshow/7731319.cms. பார்த்த நாள்: 28 July 2014. 
  3. 3.0 3.1 "Ex-banker Nachiket Mor set to reconfigure rural PHCs". தி எகனாமிக் டைம்ஸ். 18 March 2011. http://economictimes.indiatimes.com/opinion/india-emerging/ex-banker-nachiket-mor-set-to-reconfigure-rural-phcs/articleshow/7731319.cms. பார்த்த நாள்: 28 July 2014. 
  4. "Meet the Board". CARE India. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.
  5. 5.0 5.1 "Nachiket Mor: The return of the prodigy". http://articles.economictimes.indiatimes.com/2013-10-09/news/42864290_1_nachiket-mor-raghuram-rajan-icici-bank. பார்த்த நாள்: 28 July 2014. 
  6. 6.0 6.1 "CEO of inconclusive India – Nachiket Mor". Business Today. 13 January 2008. http://businesstoday.intoday.in/story/ceo-of-inconclusive-india--nachiket-mor/1/1193.html. பார்த்த நாள்: 28 July 2014. 
  7. "Nachiket Mor, Kiran Karnik appointed to Intuit Inc.". மின்ட். 13 May 2009. http://www.livemint.com/Companies/OmzfcBiAzXY4PgI2lu6o1O/Nachiket-Mor-Kiran-Karnik-appointed-to-Intuit-Inc.html. பார்த்த நாள்: 26 July 2014. 
  8. "Govt nominates Nachiket Mor as director on RBI board". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 22 May 2013. http://www.business-standard.com/article/current-affairs/govt-nominates-nachiket-mor-as-director-on-rbi-board-113052200893_1.html. பார்த்த நாள்: 28 July 2014. 
  9. "RBI may have more role for Nachiket". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 4 November 2013. http://www.business-standard.com/article/finance/rbi-may-have-more-role-for-nachiket-113110300206_1.html. பார்த்த நாள்: 28 July 2014. 
  10. "Why the Nachiket Mor committee report on financial inclusion disappoints". மின்ட். 10 January 2014. http://www.livemint.com/Opinion/rSlVyk6J9fqPMzj0H4yuxL/Why-the-Nachiket-Mor-committee-report-on-financial-inclusion.html. பார்த்த நாள்: 26 July 2014. 
  11. "Bimal Jalan to head 3-member panel on new bank licences: RBI". Business Today. 4 October 2013. http://businesstoday.intoday.in/story/bimal-jalan-to-head-3-member-panel-on-new-bank-licences-rbi/1/199200.html. பார்த்த நாள்: 28 July 2014. 
  12. "Nachiket Mor to head Gates Foundation in India". http://www.livemint.com/Politics/vWtSV7xOisi3aIjvNQfRHP/Nachiket-Mor-to-head-Gates-Foundation-in-India.html. பார்த்த நாள்: 3 May 2016. 

Nachiket Mor quits Gates Foundation India

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசிகேத்_மோர்&oldid=3967740" இலிருந்து மீள்விக்கப்பட்டது