பிமல் ஜலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிமல் ஜலான்
Bimal Jalan (cropped).jpg
பிமல் ஜலான் (17 ஆகத்து 2013)
பிறப்பு17 ஆகத்து 1941 (அகவை 79)
இராஜ்கர்
படித்த இடங்கள்
பணிபொருளியலாளர்கள்
இணையத்தளம்http://www.bimaljalan.com/
கையெழுத்து
Bimal Jalan Signature-en.jpg

பிமல் ஜலான் (பிறப்பு: 17 ஆகத்து, 1941) என்பவர் பொருளியல் துறை அறிஞர் மற்றும் வங்கியாளர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர்.[1] இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.

வகித்த பதவிகள்[தொகு]

கொல்கத்தா பிரசிடென்சிக் கல்லூரியிலும், பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகங்களிலும் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயின்ற பிமல் ஜலான் 1980 களில் இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆலோசகராகவும், 1985- 89 களில் வங்கிச் செயலாளராகவும், 1991-92 இல் நிதி அமைச்சகத்தின்  நிதிதுறைச் செயலாளராகவும் இருந்தார். 1992 -1993 லும் 1998-2008லும் சார்பு பொருளியல் ஆராய்ச்சி தேசியக் குழுவின் தலைவராக இருந்தார். 1997 முதல் 2003 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார்.[2]

ஐஎம்எப் மற்றும் உலக வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களில் இந்தியா சார்பாக உறுப்பினர் மற்றும் செயலர் பதவிகளில் இருந்தார்.

எழுதிய நூல்கள்[தொகு]

பொருளியல், வங்கியியல் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார். இந்தியப் பொருளியல் சிக்கல்கள், 21 ஆம் நூற்றாண்டு ஆயத்த இந்தியப் பொருளியல் கொள்கை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமல்_ஜலான்&oldid=2734730" இருந்து மீள்விக்கப்பட்டது