உள்ளடக்க நிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்ளடக்க நிதியம் (Financial inclusion, inclusive financing) என்பது பிற்படுத்தப்பட்டோருக்கும், குறைந்த வருவாய் உடையோருக்கும் போதிய பொருளாதார வசதிகளை, குறைந்த செலவில் ஏற்படுத்தித் தரும் முறையாகும். இந்தக் கொள்கை பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிதிச் சேவைகளை வழங்க வலியுறுத்துகிறது.

குறிக்கோள்கள்[தொகு]

இதன் குறிக்கோள்களாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுவது பின்வருமாறு:[1] of financial inclusion as follows:

  • அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த செலவில், நிதிச் சேவைகளை வழங்குதல். நிதிச் சேவை என்பது பணத்தை சேமித்தல், எடுத்தல், காப்பிடுதல் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • தொழில் முறையாக தரப்பாடுகளை பின்பற்றும் நிறுவனங்களாக வளர்ச்சியடைதல்
  • தொடர்ச்சியான முதலீடுகளை ஈர்க்க பொருளாதாரத்தில் நிலைத் தன்மை கொண்டிருக்கும் நிறுவனங்களாக வளர்ச்சியடைதல்

ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு[தொகு]

உழவுக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியுடன் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து, பிற்படுத்தப்பட்டோருக்கு நிதிச் சேவைகளை குறைந்த செலவில் அளிக்கின்றது. பெண்களிடம் நிதித் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.[2]

இந்தியா[தொகு]

பிற்படுத்தப்பட்டோருக்கும் நிதிச் சேவைகளை வழங்க முடிவெடுத்த இந்திய அரசு, பிரதமரின் ஜன் தன் திட்டத்தை 2014ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகப்படுத்தியது.[3] இந்தத் திட்டத்தின் மூலம் 2015 ஜனவரிக்குள் 7.5 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.[4] இந்த வங்கிக் கணக்குகளில் ஐந்தாயிரம் ரூபாயும், ஒரு லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. தொடக்க நாளிலேயே 1.5 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.[5]

சான்றுகள்[தொகு]

  1. "Financial Services for the Poor - Aid", Australian Agency for International Development (AusAID), March 2010.
  2. "Financial Inclusion (2009-2012) | UNDP in India"
  3. "Dhan Yojna". Economic Times (October 2014).
  4. MIX, MARKET. "India Financial Inclusion Workbook". FINclusion Lab.
  5. ET Bureau (28 August 2014). "PM 'Jan Dhan' Yojana launched; aims to open 1.5 crore bank accounts on first day". The Economic Times. பார்த்த நாள் 28 August 2014.

Chakrabarty, Dr. K.C.. "Financial Inclusion | A road India needs to travel". இந்திய ரிசர்வ் வங்கி. பார்த்த நாள் 12 Oct 2011.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளடக்க_நிதி&oldid=1804010" இருந்து மீள்விக்கப்பட்டது