உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி

ஆள்கூறுகள்: 39°57′12″N 75°11′53″W / 39.953232°N 75.197993°W / 39.953232; -75.197993
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி
Logo of the Wharton School
வகைதனியார் மேலாண்மைப் பள்ளி
உருவாக்கம்1881
நிதிக் கொடை$800 மில்லியன்[1]
துறைத்தலைவர்தாமசு இராபர்ட்சன்
கல்வி பணியாளர்
304
பட்ட மாணவர்கள்2,306
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1,671
அமைவிடம், ,
39°57′12″N 75°11′53″W / 39.953232°N 75.197993°W / 39.953232; -75.197993
முன்னாள் மாணவர்88,000
சேர்ப்புபென்சில்வேனியா பல்கலைக்கழகம்
இணையதளம்www.wharton.upenn.edu

வார்ட்டன் பள்ளி (Wharton School) ஐக்கிய அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்திலுள்ள தனியார் ஐவி லீக் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளி ஆகும். அமெரிக்காவின் மிகத் தொன்மையானதாகவும், ஓர் உயர்நிலைக் கல்வி நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட உலகின் முதல் மேலாண்மைப் பள்ளியாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. இந்தப் பள்ளி யோசஃப் வார்ட்டன் என்பாரின் கொடையளிப்புக் கொண்டு 1881ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[2] இதன் தாய்க் கல்வி நிறுவனமான பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பெஞ்சமின் பிராங்கிளினால் நிறுவப்பட்ட அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகம் ஆகும்.[3]

வார்ட்டன் உலகின் மிகச் சிறந்த வணிக மேலாண்மைப் பள்ளியாக பரவலாக கருதப்படுகிறது. இதனை உலகின் மிக உயர்ந்த வர்த்தக கல்வி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து பிசினசு வீக்கும் பைனான்சியல் டைம்சும் தங்கள் தரவரிசையில் மதிப்பிட்டுள்ளன.[4] இங்கு வழங்கப்படும் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் உலகில் முதலானதாக 2000 முதல் 2009 வரை பைனான்சியல் டைம்சு மதிப்பிட்டுள்ளது; மீண்டும் 2011இல் இலண்டன் வணிகப் பள்ளியுடன் இணைந்து முதலாவதாக வந்தது.[5] தவிரவும் கல்வியாளர்களும் பணியமர்த்துபவர்களும் வார்ட்டனுக்கு உயரிய மதிப்பு அளித்து வருகின்றனர்.[6]

தனியாகவும் பல்கலைக்கழகத்தின் பிற பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்தும் வார்ட்டன் இளங்கலை, முதுகலை வணிக மேலாண்மை பட்டங்களையும் முனைவர் கல்வித் திட்டங்களையும்[7] வழங்குவதுடன் பல பட்டய கல்வித் திட்டங்களையும் புரவல் செய்கிறது. எந்தவொரு வணிகப் பள்ளிக்கும் மேலாக விருப்பத் தேர்வுகளை வழங்கும் இந்தப் பள்ளியில்[8] கணக்குப் பதிவு, வணிக மற்றும் பொதுக் கொள்கைகள், தொழில்முனைவு மேலாண்மை, சூழலியல் மேலாண்மை, நிதி, நலவாழ்வு அமைப்புக்கள், மனிவள மற்றும் நிறுவன மேலாண்மை, காப்பீடும் தீவாய்ப்பு மேலாண்மையும், சட்டம், வணிக நற்பண்புகள், மேலாண்மை, சந்தைப்படுத்தல், பன்னாட்டு மேலாண்மை, இயக்கம் மற்றும் தகவல் மேலாண்மை, நிலச்சொத்துக்கள், சில்லறை வணிகம், புள்ளியியல், வணிக யுக்தி மேலாண்மை என பலதரப்பட்ட துறைகளில் கல்வி வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Byrne, John. "Poets&Quants' Top 100 MBA Programs in the U.S." பார்க்கப்பட்ட நாள் 2011-03-11.
  2. "Wharton History | The Wharton School of the University of Pennsylvania". Wharton.upenn.edu. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.
  3. Faculty and Research பரணிடப்பட்டது 2008-05-21 at the வந்தவழி இயந்திரம்; The Wharton School; 2008-06-23
  4. Business school rankings; Business Week, 2000-10-16
  5. Business school rankings பரணிடப்பட்டது 2011-12-08 at the வந்தவழி இயந்திரம், Financial Times, 2007-01-22
  6. Best Graduate Schools, U.S.News & World Report, 2006-04-27
  7. The school does not grant Ph.D. degrees. These are granted exclusively by the Graduate Division of the School of Arts and Sciences at the university. see: http://www.wharton.upenn.edu/doctoral-inside/facts-dates.cfm
  8. Elective information பரணிடப்பட்டது 2009-07-21 at the வந்தவழி இயந்திரம்; "The Wharton School", 2008-06-23

உசாத்துணை

[தொகு]
  • Nicole Ridgway, The Running of the Bulls: Inside the Cutthroat Race from Wharton to Wall Street, Gotham, 2005.
  • Steven A. Sass, Pragmatic Imagination: A History of the Wharton School, University of Pennsylvania Press,1983.
  • Emory Richard Johnson, The Wharton school: Its fifty years, University of Pennsylvania Press, 1931.

வெளியிணைப்புகள்

[தொகு]