தேரா இசுமாயில் கான்

ஆள்கூறுகள்: 31°49′53″N 70°54′7″E / 31.83139°N 70.90194°E / 31.83139; 70.90194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேரா இசுமாயில் கான்
ڈیره اسماعیل خان
دېره اسماعيل خان
நகரம்
Indus River
Lal Mahra Tomb
Kafir Kott
Qureshi Morr
Kalma Chowk
Kalma Chowk
Noll Bagh
மேலிருந்து கடிகார திசையில்: சிந்து ஆறு, லால் மக்ரா கல்லறைகள், குரேசி மோர், கச்சேரி சௌக்கில் கல்மா, நோல் பாக், கல்மா சௌக், காபீர் கோட் இடிபாடுகள், மாநில வாழ்க்கை கட்டிடம்
தேரா இசுமாயில் கான் is located in Khyber Pakhtunkhwa
தேரா இசுமாயில் கான்
தேரா இசுமாயில் கான்
தேரா இசுமாயில் கான் is located in பாக்கித்தான்
தேரா இசுமாயில் கான்
தேரா இசுமாயில் கான்
ஆள்கூறுகள்: 31°49′53″N 70°54′7″E / 31.83139°N 70.90194°E / 31.83139; 70.90194
நாடு பாக்கித்தான்
மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்தேரா இசுமாயில் கான்
வட்டம்தேரா இஸ்மாயில் கான்
அரசு
 • வகைநகரத் தந்தையின் குழு
 • நகரத்தந்தைஉமர் ஆமின் கந்தாபூர்[1] (பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு)
ஏற்றம்165 m (541 ft)
மக்கள்தொகை (2017)[2]
 • நகரம்217,457
 • தரவரிசைபாக்கித்தானின் 37வது பெரிய நகரம்; கைபர் பக்துன்வாவில் 5வது பெரிய நகரம்
 தேரா இஸ்மாயில் கான் நகராட்சிப் பகுதி: 211,760
தேரா இஸ்மாயில் கான் கண்டோன்ட்மென்ட் பகுதி: 5,697
நேர வலயம்பாக்கித்தான் நேர வலயம் (ஒசநே+5)
அஞ்சல் குறியீட்டு எண்29050
ஒன்றியக் குழுக்களின் எண்ணிக்கை47
இணையதளம்dikhan.kp.gov.pk

தேரா இசுமாயில் கான் ( Dera Ismail Khan ) ( டி.ஐ.கான் எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது) [3] என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வாவில் அமைந்துள்ள தேரா இசுமாயில் கான் மாவட்டத்தின் ஒரு நகரமும் மற்றும் அதன் தலைநகரமும் ஆகும். இது பாக்கித்தானின் 37வது பெரிய நகரமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஐந்தாவது பெரிய நகரமாகவும் உள்ளது. தேரா இசுமாயில் கான் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் கோமல் ஆறு சேரும் இடத்தில் அமைந்துள்ளது.

இது மாகாண தலைநகர் பெசாவருக்கு தெற்கே 300 கிலோமீட்டர்கள் (190 மைல்) தொலைவிலும், பஞ்சாபின் முல்தானிலிருந்து வடமேற்கே 230 கிலோமீட்டர்கள் (140 மை) தொலைவிலும் உள்ளது. [4]

பெயர்க்காரணம்[தொகு]

உள்ளூர் மொழியில், தேரா என்ற வார்த்தைக்கு "கூடாரம், முகாம்" என்று பொருள். மேலும் இது பொதுவாக சசிந்து சமவெளியிலுள்ள தேரா காசி கான் மற்றும் தேரா புக்தி போன்ற நகரங்களின் பெயரில் காணப்படுகிறது. இந்த நகரத்தை நிறுவிய பலூச் கூலிப்படைத் தலைவன் மாலிக் சோராப் தோதாயின் மகன் இசுமாயில் கானின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

தேரா இசுமாயில் கானைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கு அருகிலுள்ள இரெக்மான் தேரி தளம் - சிந்துவெளி நாகரிகத்துக்கு முந்தைய தொல்பொருள் தளம் கிமு 3300 க்கு முந்தையது. [5] ஏழாம் நூற்றாண்டில், இந்த நகரத்தில் பிராமணர்கள் மற்றும் பௌத்தர்கள் அதிக அளவில் இருந்தனர். [6]

வரலாறு[தொகு]

இது, 15 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேராசாத் பகுதியில் அமைந்துள்ளது. முல்தானின் இலங்கா சுல்தானகத்தின் சா உசேன் என்பவரின் அழைப்பின் பேரில் பலூச் மக்கள் இப்பகுதியில் குடியேறினர்.

சா உசேன் தனது இந்தப் பிராந்தியத்தில் தான் கைப்பற்றியப் பகுதிகளை தக்கவைக்க முடியாமல் போனதால், தேரா இசுமாயில் கானைச் சுற்றியுள்ள பகுதியை 1469 அல்லது 1471 இல் தென்மேற்கு பலுச்சிசுத்தானம் மாகாணத்தின் மக்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த பலூச் இனத் தலைவர் சர்தார் மாலிக் சோராப் கான் தோடாய் என்பவரிடம் ஒப்படைத்து அவரை சாகிராக நியமித்தார். அவரது வெற்றி மற்ற மக்ரானி பழங்குடியினரின் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது - அவர்களில் ஒருவரான காசி கான், தேரா காசி கான் நகரத்தை நிறுவினார். சுமாயில் கான் நகரத்தை நிறுவியதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது, இருப்பினும் பேரரசர் பாபுர் 1506 இல் இப்பகுதியைக் கடந்து செல்லும்போது நகரத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. [7]

பலூச் குடியேற்றவாசிகள் பஷ்தூன் குடியேற்றத்தின் பின்னர் அலைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டனர். இருப்பினும் வண்டல் சமவெளிகளில் உள்ள கிராமவாசிகள் பொதுவாக பலோச் அல்லது ஜாட் ஆக இருக்கின்றனர்.[8]

தேரா இசுமாயில் கான் பகுதி முகலாயப் பேரரசின் முல்தான் சுபாவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த நகரம் முக்கிய முல்தான் - காந்தகார் வணிகப் பாதையில் இருந்தது. இருப்பினும் தேரா இசுமாயில் கான், பவிந்தா நாடோடிகளின் வர்த்தக மையமாக வளமாக வளர்ந்தது.

இந்நகரம் இசுமாயில் கானிடமிருந்து நேரடியாக வந்த ஒன்பது தலைமுறை பலூச் தலைவர்களால் ஆளப்பட்டது. 1750 ஆம் ஆண்டில் அகமது சா துரானியால் நகரம் கைப்பற்றப்பட்டது. 1794 இல், சசாதா கம்ரான் துரானி என்பவரால் இந்த நகரம் நவாப் முகமது கான் சதோசாய்க்கு வழங்கப்பட்டது. [9]

நகரின் மறுசீரமைப்பு[தொகு]

1823 இல் சிந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அசல் நகரம் அடித்துச் செல்லப்பட்டது. தற்போதைய நகரம் 1825 இல் சதோசாய் குலத்தைச் சேர்ந்த நவாப் சேர் முகமது கான் என்பவரால் இப்போது ஆற்றின் நிரந்தர கால்வாயிலிருந்து நான்கு மைல் (6  கிமீ) தொலைவில் ஒரு சிறிய பீடபூமியின் மேல் நிறுவப்பட்டது.[10] பஞ்சாபிலிருந்து கட்டிடக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நகர மையத்திற்கு தெற்கே இந்துக்களும் அதற்கு வடக்கே முஸ்லிம்களும் வாழும் ஒரு நகரத்தை வடிவமைத்தார். [10] ஒவ்வொரு திசைகளிலும் நான்கு சந்தைகள் அமைக்கப்பட்டன. நான்கு சந்தைகளும் நகரத்தின் மத்தியப் பகுதியில் ஒன்றிணைகின்றன. [10] புனரமைக்கப்பட்ட நகரத்தில் ஆப்கானிய வர்த்தகர்களுக்கான ஒரு பெரிய வணிக மையம் இருந்தது. மேலும் நகரம் கோமல் கணவாய் வழியாக வர்த்தகத்தில் முன்னேறியது. [11] நகரத்தைச் சுற்றி ஒன்பது வாயில்கள் கொண்ட எட்டு அடி மண் சுவர் கட்டப்பட்டது, [10] அவற்றில் சில இன்று வரை உள்ளன. தற்போதுள்ள அனைத்து கட்டிடங்களும் 19 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையவை. [4]

1947 சுதந்திரத்திற்குப் பிறகு[தொகு]

1979இல் நடந்த சோவியத்- ஆப்கான் போரைத் தொடர்ந்து ஏற்ப்பட்ட அகதிகளின் வருகையினால், நகரத்தின் மக்கள் தொகை மூன்று மடங்காக அதிகரித்தது.[12]

தீவிரவாதம்[தொகு]

பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் குழுவினரால் வடமேற்கு பாக்கித்தான் முழுவதும் சியாக்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் நகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.[13][14][15] [16]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PTI's Umar Amin Gandapur wins Dera Ismail Khan mayor seat". Business Recorder (newspaper). 19 February 2022. https://www.brecorder.com/news/40154342. 
  2. "POPULATION AND HOUSEHOLD DETAIL FROM BLOCK TO DISTRICT LEVEL: KHYBER PAKHTUNKHWA (DERA ISMAIL KHAN DISTRICT)" (PDF). Pakistan BUreau of Statistics. 2018-01-03. Archived from the original (PDF) on 2019-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-04-24.
  3. Tehsils & Unions in the District of D.I. Khan – Government of Pakistan பரணிடப்பட்டது பெப்பிரவரி 9, 2012 at the வந்தவழி இயந்திரம்.
  4. 4.0 4.1 Dera Ismail Khān Town – Imperial Gazetteer of India, v. 11, p. 269.
  5. Saira Naseem, Zakirullah Jan (2016), The Emerging Tochi-Gomal Cultural Phase in the Gomal Plain, Northwest Pakistan.
  6. Meister, Michael W. (26 July 2010) (in en). Temples of the Indus: Studies in the Hindu Architecture of Ancient Pakistan. BRILL. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-19011-5. https://books.google.com/books?id=1N95DwAAQBAJ&pg=PA12. 
  7. Aminullah Khan Gandpar, Tarikh-i-Sar Zamin-i-Gomal, National Book Foundation Islamabad, page 45.
  8. Tolbort, T (1871). The District of Dera Ismail Khan, Trans-Indus. https://books.google.com/books?id=RVQOAAAAQAAJ&q=dera+ismail+khan. பார்த்த நாள்: 12 December 2017. Tolbort, T (1871).
  9. Tolbort, T (1871). The District of Dera Ismail Khan, Trans-Indus. https://books.google.com/books?id=RVQOAAAAQAAJ&q=dera+ismail+khan. பார்த்த நாள்: 12 December 2017. 
  10. 10.0 10.1 10.2 10.3 "Dera Ismail Khan - An Overview of History and Indigenous People". பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
  11. "Dera Ismail Khan Cantonment". பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
  12. "Dera Ismail Khan Cantonment". Global Security. பார்க்கப்பட்ட நாள் 12 December 2017."Dera Ismail Khan Cantonment".
  13. "'Three killed' in Pakistan blast". BBC News. 29 January 2007. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6309965.stm. 
  14. Govt talks tough as inaction against hate-mongers is assailed in NA – Dawn Pakistan.
  15. "30 killed in DI Khan suicide attack". August 20, 2008. http://www.dailytimes.com.pk/default.asp?page=2008\story_20-8-2008_pg1_9. 
  16. "Military offensive displaces 300,000 in north-west Pakistan". August 23, 2008. http://www.wsws.org/articles/2008/aug2008/paki-a23.shtml. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரா_இசுமாயில்_கான்&oldid=3863355" இலிருந்து மீள்விக்கப்பட்டது