மேயர்-குழு அரசாங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேயர்-குழு அரசாங்கம் என்பது பெரிய நகரங்களின் உள்ளாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைமை நிர்வாகியான நகர மேயரை, வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்றக் குழுவின் வார்டு உறுப்பினர்கள் வார்டுகள் வாரியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது போன்ற உள்ளாட்சி அமைப்பு முறைகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரேசில், கனடா, இத்தாலி, துருக்கி, நியூசிலாந்து, போலந்து, இசுரேல் நாடுகளில் உள்ளது. பொதுவாக மேயர்-குழு ஆட்சி அமைப்பில், மேயருக்கு துறைத் தலைவர்களை நியமிப்பதற்கும், பணிநீக்கம் செய்யும் அதிகாரத்துடன், மொத்த உள்ளாட்சி நிர்வாக அதிகாரம் வழங்கப்படுகிறது. இத்தகைய அமைப்பில், மேயரின் நிர்வாகப் பணியாளர்கள் நகர வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கின்றனர். இருப்பினும் அந்த வரவுசெலவுத் திட்டம் நகர் மன்றக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.[1]மேலும் நகர்மன்றக் குழுவின் தீர்மானங்களை ரத்து செய்யும் அதிகாரம் மேயருக்கு உண்டு.

நடுத்தர மற்றும் சிறிய நகரங்களின் உள்ளாட்சி நிர்வாகத்தை நகர்மன்றக் குழு-மேலாளர் அமைப்பில் உள்ளது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kathy Hayes; Semoon Chang (July 1990). "The Relative Efficiency of City Manager and Mayor–Council Forms of Government". Southern Economic Journal 57 (1): 167–177. doi:10.2307/1060487. https://archive.org/details/sim_southern-economic-journal_1990-07_57_1/page/167. 
  2. George C. Edwards III; Robert L. Lineberry; Martin P. Wattenberg (2006). Government in America. Pearson Education. பக். 677–678. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-321-29236-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேயர்-குழு_அரசாங்கம்&oldid=3852398" இலிருந்து மீள்விக்கப்பட்டது