நகர் மன்றக்குழு-மேலாளர் அரசாங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகர் மன்றக்குழு-மேலாளர் அரசாங்கம் என்பது நடுத்தர மற்றும் சிறிய நகரங்களை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்பாகும்.. பெரிய நகரங்களை மேயர்-குழு அரசாங்கம் நிர்வகிக்கும்.

நகராட்சிகள், கவுண்டிக் குழுக்கள் அல்லது பிற சமமான பிராந்தியங்களுக்குப் பயன்படுத்தப்படும் உள்ளூர் அரசாங்கத்தின் ஒரு வடிவமாகும். இது மேயர்-கவுன்சில் உள்ளாட்சி அமைப்புடன் அமெரிக்காவில் உள்ள உள்ளூர் அரசாங்கத்தின் இரண்டு பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். மேலும் இது அயர்லாந்தில் பொதுவானது.[1] கவுன்சில்-மேலாளர் உள்ளாட்சி அமைப்பு முறை நியூசிலாந்தில் பிராந்திய நகரமன்றக்களுக்கும், கனடா மற்றும் பல நாடுகளில் நகர மற்றும் கவுண்டிக் குழுக்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.[2][3] கண்ணோட்டம்

நகர மேலாளர்-கவுன்சில் வடிவம் பொது வர்த்தக நிறுவனத்தைப் போன்றது.[4] நகர்மன்றத்தின் வார்டு உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேயர் வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகிறார். நகர்மன்றத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், அதன் கொள்கைகளை செயல்படுத்தவும், அதற்கு ஆலோசனை வழங்கவும் நகர்மன்றக் குழு ஒரு நகர மேலாளரை நியமிக்கிறது. மேலாளர் பதவியானது, ஒரு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் நியமிக்கப்படும் தலைமை நிர்வாக அதிகாரியின் நிலையைப் போன்றது..

நகர்மன்ற மேலாளருக்கு ஒதுக்கப்படும் சில நிர்வாக அல்லது நிர்வாகக் கடமைகளைத் தவிர, அனைத்து அரசாங்க அதிகாரமும் நகர்மன்றக் குழுவிடம் இருக்கும். இருப்பினும், மேலாளர் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் விருப்பத்திற்கேற்ப பணியமர்த்தப்படுகிறார். மேலாளரின் செயல்பாடுகள் நகர துணை-விதிகள் அல்லது பிற சட்டத்தால் குறியிடப்பட்ட வடிவத்தில் ஒதுக்கப்படுகிறது. மேலாளரை நகரமன்றக்குழு மூலம் மட்டுமே நீக்கப்பட முடியும்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Svara, James H. (21 October 2008). "Strengthening Local Government Leadership and Performance: Reexamining and Updating the Winter Commission Goals". Public Administration Review 68: S37–S49. doi:10.1111/j.1540-6210.2008.00977.x. 
  2. "Cities 101 — Forms of Municipal Government".
  3. "Council-manager government".
  4. Local Government Management, ICMA[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Svara & Nelson 2008, ப. 8.

ஆதார நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]