இரெக்மான் தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெக்மான் தேரி
رحمان ڈھیری
இரெக்மான் தேரி is located in பாக்கித்தான்
இரெக்மான் தேரி
Shown within Pakistan
இருப்பிடம்பாக்கித்தான்
பகுதிகைபர் பக்துன்வா மாகாணம்
ஆயத்தொலைகள்31°56′45″N 70°53′06″E / 31.945870°N 70.885090°E / 31.945870; 70.885090

இரெக்மான் தேரி ( Rehman Dheri ) அல்லது சில சமயங்களில் இரக்மான் தேரி ( Rahman Dheri ) எனவும் அறியப்படும் இது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தேரா இசுமாயில் கான் அருகே அமைந்துள்ள சிந்துவெளி நாகரிகத்துக்கு முந்தைய தொல்லியல் தளமாகும். தெற்கு ஆசியாவில் இன்றுவரை காணப்படும் பழமையான நகரமயமாக்கப்பட்ட மையங்களில் இதுவும் ஒன்று.[1] கி.மு. 3300 - 1900 தேதியிட்ட இந்தத் தளம் தேரா இசுமாயில் கானுக்கு வடக்கே 22 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது பாக்கித்தானில் எதிர்கால உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் உள்ளது.[2] மேலும், பாக்கித்தானின் கும்லாவின் தளம் அருகில் அமைந்துள்ளது. இராமாயணத்தில் கோமல் ஆற்றை கோமதி ஆறு என்றும், அயோத்தியை ராம் தேரி (இரெக்மான் தேரி என மறுபெயரிடப்பட்டது) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

இரெக்மான் தேரியில் படிகளால் ஆன கிணறு

இந்த தளம் சிந்து ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான கோமல் ஆற்றுச் சமவெளியில் அமைந்துள்ளது. இது சோப் ஆறு கோமல் ஆற்றில் கலக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. ஆரம்பகால ஆக்கிரமிப்பிலிருந்து, தெற்கில் நகரத்திற்கு வெளியே நீட்டிக்கப்பட்டதைத் தவிர, முழு குடியிருப்புப் பகுதியும் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்டுள்ளது, இது களிமண் அடுக்குகளால் கட்டப்பட்டது. தாழ்வான செவ்வக மேடு சுமார் 22 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும், சுற்றியுள்ள வயல்வெளியில் இருந்து 4.5 மீ உயரத்தில் உள்ளது.

இரெக்மான் தேரிக்கு அருகில், கிசாம் தேரியின் தோண்டப்படாத ஹரப்பா தளம் உள்ளது. சில பிராந்தியங்களில், கோட் டிஜியன் (இக்மான் தேரி போன்றவை) மற்றும் ஹரப்பா சமூகங்கள் அருகருகே இணைந்து வாழ்ந்ததை இது குறிக்கிறது. [3]

இரெக்மான் தேரியின் தொல்பொருள் தளத்தில் உள்ள மட்பாண்டங்கள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெக்மான்_தேரி&oldid=3864785" இலிருந்து மீள்விக்கப்பட்டது