துருவ இரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோர்வே நாட்டில் 78° வடக்கில் அமைந்துள்ள சுவல்பார்டு என்ற இடத்திலுள்ள லாங்யியர்பியனில் எடுக்கப்பட்ட நீல நிற மெல்லொளி உள்ள துருவ இரவு.
தென் துருவத்திலுள்ள அந்தாட்டிக்காவில் ஒரு துருவ இரவு.
உருசியாவிலுள்ள நரியன்-மாரில் டிசம்பர் 23, 2014, 11:27 (நண்பகல்) எடுக்கப்பட்ட துருவ இரவு

துருவ இரவு (polar night) என்பது புவியின் தென் துருவம் மற்றும் வட துருவப் பகுதிகளில் 24 மணி நேரத்தையும் தாண்டி இரவு நீடிப்பதை குறிப்பதாகும். இது துருவ வட்டங்களில் மட்டுமே நிகழும் ஒரு நிகழ்வாகும்.[1] இதற்கு எதிரான செயலாக துருவப்பகல் அல்லது நள்ளிரவுச் சூரியன் கருதப்படுகிறது. இது ஞாயிறு தொடுவானத்திற்கு மேலே 24 மணி நேரமும் இருப்பதால் நிகழ்கிறது. இரவு என்பது சூரியன் தொடுவானத்திற்குக் கீழே செல்லும் போது நிகழ்கிறது. புவியின் வளி மண்டலம் சூரியக் கதிர்களை ஒளி விலகல் அடையச் செய்வதால் துருவப்பகல் என்பது துருவ இரவை விட அதிகமாக இருக்கும். துருவ இரவு ஏற்படும் பகுதி துருவப்பகல் ஏற்படும் பகுதியை விட குறைவாகவே இருக்கும். 66.5 டிகிரி அட்சரேகை வரை துருவ வட்டம் பரவியிருக்கும். சுவீடன் நாட்டிலுள்ள கிருனா நகரே (67°51' வடக்கு) துருவ வட்டத்தின் வட முனையாகும். துருவ இரவு என்பது 28 மணி நேரம் வரை நீடிக்கும். ஆனால் நள்ளிரவுச் சூரியன் 50 மணி நேரம் வரை நீடித்திருக்கும். ஆர்க்டிக் பகுதியில் இரவாக இருக்கும் போது, அந்தாட்டிக்கா பகுதியில் பகலாக இருக்கும்.

நட்சத்திரத்தைச் சுற்றி வரும் எந்ததொரு கோள் அல்லது துணைக்கோள் ஆகியவற்றின் அச்சுச் சாய்வு மற்றும் சுழற்சிக் காலம் அதன் சுற்றுக்காலத்தை விட அதிகமாக இருக்கும் போது, இவ்வகை இரவு பகல் மாற்றங்கள் அனைத்து இடங்களிலும் நிகழும்.

விளக்கம்[தொகு]

துருவங்களில் குறைந்த பகல் நாள் என்பது துருவ வட்டத்தைச் சுற்றி முழுவதும் இருளாக இருப்பதில்லை. நிலா தொடுவானத்திற்குக் கீழேயிருக்கும் போது, துருவங்களிலிருந்து 5.5° அட்ச ரேகை வரை முழுவதும் இருளாக இருக்கும். துருவ வட்டத்தின் உள் எல்லையிலுள்ள பகுதிகள் இருளுக்குப் பதிலாக மெல்லொளியைப் பெறுகிறது. வெப்ப வலயப் பகுதிகளை விட துருவப்பகுதிகள் ஆண்டு முழுவதும் மெல்லொளி உணரப்படுகிறது. புவியின் சுற்றுப் பாதை நீள் வட்டமாக இருப்பதால் வட துருவத்தை விட தென் துருவத்தில் சூரியன் தொடுவானத்திற்கு கீழே அதிகமிருப்பதால், தென் துருவத்தில் துருவ இரவு ஒரு வாரம் வட துருவத்தை விட அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

துருவ இரவின் வகைகள்[தொகு]

நோர்வே நாட்டில் டிரம்சாவில் ஒரு துருவ இரவின் மதிய வேளை.
ஐரோப்பாவின் வடமுனை தீபகற்பமும், நோர்வே நாட்டிலுள்ள நார்டுகின் பகுதியில் துருவ இரவு.

மெல்லொளிகளில் பல வகைகள் உள்ளது போல் துருவ இரவுகளிலும் பல வகை உண்டு. ஓவ்வொரு துருவ இரவும், அது பெற்றிருக்கும் மெல்லொளி அமைப்பைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.

துருவ மெல்லொளி[தொகு]

துருவ வட்டங்களின் எல்லைப் பகுதிகளில் துருவ மெல்லொளி உண்டாகிறது. குளிர் சந்தியில் இங்கே சூரியன், நாள் முழுவதும் தொடுவானத்திற்குக் கீழே இருப்பதால் இந்நிகழ்வு ஏற்படுகிறது. சூரியன் உச்ச நிலையிலுள்ள போதே பகல் வெளிச்சம் இங்கே இருப்பதில்லை. அன்றாட வேலைகளைச் செய்வதற்கான மெல்லொளி மட்டுமே இருக்கும். வளி மண்டலத்தின் மேலடுக்குகளில் ஏற்படும் ஒளி விலகல் காரணமாக, தேவையான மெல்லொளி உருவாகிறது.

குடிசார் துருவ இரவு[தொகு]

குடிசார் துருவ இரவுகளின் நடுப்பகல் நேரங்களில், லேசான வெளிச்சம் காணப்படும். சூரியன் தொடுவானத்திலிருந்து 0 முதல் 6° வரையுள்ள கோணத்தில் இருக்கும் போது குடிசார் துருவ இரவு ஏற்படுகிறது. 72° 34' மேலுள்ள அட்ச ரேகைக்கு மேலுள்ள பகுதிகளில் மட்டுமே குடிசார் துருவ இரவு காணப்படுகிறது. நோர்வே நாட்டின் சில பகுதிகளில் நவம்பர் மாதம் 11 ல் தொடங்கி சனவரி 30 வரை குடிசார் துருவ இரவு நீடிக்கிறது. உருசியாவின் டிக்சன் பகுதியில் குடிசார் துருவ இரவு ஒரு மாதம் வரை நீடிக்கிறது. கனடா நாட்டின் சில பகுதிகளிலும் குடிசார் துருவ இரவு ஏற்படுகிறது.

கடல்சார் துருவ இரவு[தொகு]

கடல்சார் துருவ இரவு நாட்களில் நண்பகலைத் தவிர, பிற நேரங்களில் பகல் வெளிச்சமே காணப்படுவதில்லை. இது சூரியன் தொடுவானத்திலிருந்து 6 முதல் 12 டிகிரிக்கு கீழேயிருக்கும் போது நடைபெறுகிறது. 78° 34' அட்ச ரேகைக்கு மேலுள்ள பகுதிகளிலே கடல்சார் துருவ இரவு உணரப்படுகிறது. கனடா நாட்டின் சில பகுதிகளில் நவம்பர் மாதம் தொடங்கி சனவரி மாதம் வரை நீடிக்கிறது. நோர்வே நாட்டின் சில பகுதிகளில் டிசம்பர் மாதத்தில் உணரப்படுகிறது.

வானியல்சார் துருவ இரவு[தொகு]

வானியல் மெல்லொளி ஏற்படாத இடங்களில் தொடர்ந்த இரவுகளால் வானியல்சார் துருவ இரவு ஏற்படுகிறது. சூரியன் தொடுவானத்திலிருந்து 12 முதல் 18 டிகிரிக்கு கீழேயிருக்கும் போது வானியல்சார் துருவ இரவு உண்டாகிறது. 84° 34' அட்ச ரேகைக்கு மேலுள்ள பகுதிகளிலே வானியல்சார் துருவ இரவு உணரப்படுகிறது. இவ்விரவுகள் 11 வாரங்கள் வரை துருவப்பகுதிகளில் நீடிக்கிறது.

வட துருவத்தில் நவம்பர் 14 முதல் சனவரி 29 வரை வானியல்சார் துருவ இரவு நீடிக்கிறது..[2]

துருவ சூரியச் சுற்று[தொகு]

வட துருவம் மற்றும் தென் துருவம் ஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள், நாள் என்பதை சூரியன் உச்சியிலிருக்கும் நேரத்தைக் கொண்டு கணக்கிட்டால் துருவ நாள் என்பது நீண்டதாக இருக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Burn, Chris. The Polar Night (PDF). The Aurora Research Institute. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  2. Rao, Joe (21 September 2010). "The Myth of Arctic Daylight and Darkness Exposed". Live Science. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.
  3. NASA: The Sun and Seasons NASA. (See last paragraph, section 164.) By David Stern. Last updated Sept. 17, 2004. Downloaded Feb. 17, 2017.

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ_இரவு&oldid=3521034" இலிருந்து மீள்விக்கப்பட்டது