உள்ளடக்கத்துக்குச் செல்

நிலவொளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
50 நிமிடங்கள் திறந்த வைப்பு நேரத்தில் நிலவொளியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

நிலவொளி (moonlight) என்பது நிலவிலிருந்து பூமியை வந்தடையும் ஒளியைக் குறிக்கும். இவ்வொளியில் பெருமளவு சூரியவொளியுடன் சிறிதளவு விண்மீனொளி மற்றும் நிலவின் இருண்ட பகுதியின்மீது புவியிலிருந்தும் புவியின் காற்று ஒளிர்விலிருந்தும் எதிரொளிக்கும் பகுதி ஒளியூட்ட வெளிச்சமான புவியொளி ஆகியவற்றையும் நிலவொளி உள்ளடக்கியுள்ளது.[1]

ஒளியூட்டம்

[தொகு]

நிலவொளியின் செறிவு அதன் சுழற்சியைச் சார்ந்து பெருமளவில் வேறுபடுகிறது. ஆனால் முழுநிலவும் கூட குறிப்பாக 0.1 லக்சு அளவிலான ஒளியூட்டத்தையே வழங்குகிறது. வெப்பமண்டலப் பரப்பெல்லையின் மிக்கவுயரத்தில் இருந்து நிலவைப் பார்க்கும் போதும் அதன் ஒளியூட்டம் 0.26 லக்சு அளவிலேயே உள்ளது.[2] பௌர்ணமி நிலவு கூட சூரியனின் ஒளியைவிட 1,000,000 மடங்கு குறைவான பிரகாசத்தையே கொண்டிருக்கிறது.

மிகவும் செயற்கையான ஒளிமூலங்களை ஒப்பிடுகையில், குறிப்பாக முழுநிலவுக்கு அருகில் மனித கண்களுக்கு நிலவொளி நீலநிறமாகத் தெரிகிறது. இவ்வாறு தெரிவதற்கு பர்கின்சி விளைவு காரணமாகும். உண்மையில் நிலவொளியில் நீலநிறச்சாயல் ஏதுமில்லை மற்றும் வெள்ளி போன்ற வெள்ளியின் இயல்பையும் அது கொண்டிருக்கவில்லை எனினும் நிலவொளி வெள்ளியின் நிறத்தில் இருப்பதாக பெரும்பாலும் குறிப்பிடபடுகிறது. நிலவின் சூரியக்கதிர் எதிரொளிப்பு விகிதம் 0.136 ஆகும்.[3] அதாவது நிலவின்மீது விழும் சூரிய ஒளியில் 13.6 சதவீத ஒளியையே அது பிரதிபலிக்கிறது என்பது இதன்பொருளாகும். பொதுவாக நிலவொளி வானியல்சார் பார்வையிடலுக்கு இடர் உண்டாக்கும் என்பதால் வானியலார் வழக்கமாக முழுநிலவுக்கு அருகிலிருந்து உற்றுநோக்குவதை தவிர்த்து விடுவார்கள்.

நாட்டுப்புறவியல்

[தொகு]

நாட்டுப்புறவியலில், நிலவொளி சிலநேரங்களில் பாதகமான செல்வாக்கைக் கொண்டுள்ளது., பௌர்ணமி இரவில் முழுநிலவின் ஒளியில் ஒருவன் படுத்து உறங்கினால் அவன் ஓநாய் மனிதனாக மாறிவிடுவான் என்ற நம்பிக்கை ஒரு உதாரணமாகும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கிறுக்குத்தனங்கள் முழுநிலவொளியில் இன்னும் மோசமாக்கும் என்றும் நிலவொளியில் தூங்குபவர்களின் கண்கள் குருடாகும் என்றும் அவர்களுக்கு பைத்தியம் பிடிக்குமென்றும் நம்பப்படுகிறது. வெப்ப நாடுகளில் நிலவொளியின் கீழ் படுத்து உறங்கினால் உயிர்ச்சத்து ஏ குறைவு காரணமாக உண்டாகும் மாலைக்கண் நோய் உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

கலையில் நிலவொளி

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. G. J. Toomer (December 1964). "Review: Ibn al-Haythams Weg zur Physik by Matthias Schramm". Isis 55 (4): 463–465 [463–4]. doi:10.1086/349914 
  2. Bunning, Erwin; Moser, Ilse (April 1969). "INTERFERENCE OF MOONLIGHT WITH THE PHOTOPERIODIC MEASUREMENT OF TIME BY PLANTS, AND THEIR ADAPTIVE REACTION". Proceedings of the National Academy of Sciences of the United States of America 62 (4): 1018–1022. doi:10.1073/pnas.62.4.1018. பப்மெட்:16591742. பப்மெட் சென்ட்ரல்:223607. Bibcode: 1969PNAS...62.1018B. http://www.pnas.org/cgi/reprint/62/4/1018. பார்த்த நாள்: 2006-11-10. 
  3. Matthews, Grant (2008). "Celestial body irradiance determination from an underfilled satellite radiometer: application to albedo and thermal emission measurements of the Moon using Clouds and the Earth's Radiant Energy System". Applied Optics 47 (27): 4981–93. doi:10.1364/AO.47.004981. பப்மெட்:18806861. Bibcode: 2008ApOpt..47.4981M. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நிலவொளி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவொளி&oldid=3402765" இலிருந்து மீள்விக்கப்பட்டது