வைகறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைகறை மெல்லொளிக்கு முன்னரான காலைப்பொழுது என சிலவேளைகளில் கருதப்படுகின்றது. சிலவேளை சூரியோதத்தைக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகின்றது.

வைகறை (Dawn) அல்லது விடியற் காலை அல்லது அதிகாலை சூரியோதயத்திற்கு முன் ஏற்படும் மெல்லொளிக்கு முன்னான நேரமாகும்.[1][2] இது சூரியன் காலையில் கிழக்குத் திசையில் உதிப்பதற்கும், அதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னர் உள்ள நேரத்திற்கும் இடைப்பட்ட காலப்பொழுதாகும். அதாவது பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் (அதி)காலை மூன்று மணி முதல் காலை ஆறு மணி வரையிலான பொழுதே அதிகாலை எனப்படுகிறது. நம் காதுகளுக்கு இனிமை தரும் கூவலைத் தந்திடும் சேவலின் குரல் கேட்டிடும் பொழுதாகும்.[3]இக்காலம் முன் சூரியோதய சந்தியொளி அல்லது சூரியோதய காலம் எனவும் அழைக்கப்படும்.[2] இது சூரிய ஒளியின் மெல்லிய ஒளியாக, சந்தியொளியின் ஆரம்பமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்வேளையில் சூரியன் அடிவானத்தின் கீழ் இருக்கும்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் வான்வெளியில் அதிக அளவில் காணப்படுகிற ஓசோன் வாயு அதிக அளவில் ஆக்சிசனை வெளியிடுவதால், வீட்டு வாசலில் கோலமிடும் மகளிர் அக்காற்றை சுவாசிப்பதால் நாள் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து புத்துணர்வுடன் திகழ்கின்றனர்.[4] மார்கழி மாத அதிகாலையில் வைணவ அன்பர்கள் நாமசங்கீர்த்தனம் செய்தும், சைவ அன்பர்கள் வீதிகளில் பசனை பாடியும் அதிக அளவில் ஆக்சிசனை சுவாசிக்கின்றனர்.[5] அந்நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.[6] ஆரோக்கியம் மட்டுமன்றி புத்தி கூர்மை உடையவராகவும், திறமையுள்ளவராகவும் திகழ்பவர்கள் அதிகாலை எழுபவர்கள்.[7] அதிகாலை தூக்கத்திலிருந்து எழுபவர்கள் கண்பார்வை அதிக வயது வரை நன்றாக இருக்கும்.[8] சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய அதிகரிக்கும் உடலின் அதிகாலை சர்க்கரை அளவை, அதிகாலை, மிதமான உடற்பயிற்சிகள் மூலம் குறைக்கலாம்.[9]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Random House College Dictionary, "dawn".
  2. 2.0 2.1 A note on sunrise, sunset and twilight times பரணிடப்பட்டது 2013-07-01 at the வந்தவழி இயந்திரம் from HM Nautical Almanac Office, The United Kingdom Hydrographic Office. Quoting: There is no general agreement on a precise definition of "dawn"; it is sometimes even identified with sunrise itself. If, however, it is interpreted as the time of "first light", dawn corresponds to a depression between 18° and 12° but it is not possible to be more precise'.
  3. Reṭṭiyā̄r, Na Cuppu (2001) (in ta). சுராவின் பாவேந்தரின் பாட்டுத்திறன். Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7478-264-9. https://books.google.co.in/books?id=4R8i0yre6dEC&pg=PA17&dq=%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj_ttvUupb8AhWJR2wGHXDqAK0Q6AF6BAgCEAM#v=onepage&q=%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588&f=false. 
  4. Sharma, Tirukoilur K. B. Hariprasad (2021-03-29) (in ta). Maruthuva Jothidam. Pustaka Digital Media. https://books.google.co.in/books?id=YDgpEAAAQBAJ&pg=RA1-PA49-IA1&dq=%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiU5pTYt5b8AhX2cGwGHWSAAfsQ6AF6BAgGEAM#v=onepage&q=%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588&f=false. 
  5. "கெரடி கோவிலில் அதிகாலை மார்கழி நாமசங்கீர்த்தனம் - Dinamalar Tamil News". Dinamalar. 2022-12-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  6. Deivasigamani, Geetha (2022-07-20) (in ta). Silaiyum Neeye Sirpiyum Neeye. Pustaka Digital Media. https://books.google.co.in/books?id=NYkBEAAAQBAJ&pg=PT47&dq=%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiU5pTYt5b8AhX2cGwGHWSAAfsQ6AF6BAgFEAM#v=onepage&q=%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588&f=false. 
  7. லட்சுமணன்.ஜி. "அதிகாலை விழித்தெழுதல் நல்லனவெல்லாம் தரும்... துயிலெழ உதவும் 10 வழிகள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  8. உதயகுமார், ச (in ta). உளம் வாழ்க. Forschung Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-87865-60-0. https://books.google.co.in/books?id=1n8tEAAAQBAJ&pg=PA55&dq=%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiU5pTYt5b8AhX2cGwGHWSAAfsQ6AF6BAgEEAM#v=onepage&q=%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588&f=false. 
  9. "அதிகாலை இரத்த சர்க்கரை அளவு குறைய மருத்துவர் தரும் வீட்டு குறிப்பு! எல்லோருக்குமானது!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sunrises
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகறை&oldid=3852904" இலிருந்து மீள்விக்கப்பட்டது