உள்ளடக்கத்துக்குச் செல்

திருநாவுக்கரசு (ஒளிப்பதிவாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநாவுக்கரசு
பிறப்புஎச். திருநாவுக்கரசு
2 சூன் 1966 (1966-06-02) (அகவை 58)
சேலம், தமிழ்நாடு, இந்தியா.
மற்ற பெயர்கள்திரு
பணிஒளிப்பதிவாளர், குறும் படங்களுக்கு திரைக்கதை எழுதுதல்
விருதுகள்சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய பிலிம்பேர் விருது (2016)

எசு. திருநாவுக்கரசு (S. Thirunavukarasu) (பிறப்பு: 21 சூலை 1966) திரு என்ற பெயரால் அறியப்படும் ஓர் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 24 (2016) படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். [1] [2]

வேலை

[தொகு]

முக்கியமாக தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் திருவின் திரைப்படங்கள் உள்ளன. இவர் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் கூட்டாளியாக பணியாற்றினார்.

இயக்குனர் மேஜர் ரவியுடன் இணைந்து மலையாள திரைப்படமான மிஷன் 90 நாள் திரைக்கதை எழுதியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கியுள்ளார். இவர் இந்தியாவின் முக்கியமான விளம்பர தயாரிப்பு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள்

[தொகு]
படம் வருடம் மொழி குறிப்பு
மகளிர் மட்டும் 1994 தமிழ்
சகதி 1997 தமிழ்
காதலா! காதலா! 1998 தமிழ்
மஞ்சீரத்வானி 1998 மலையாளம்
ஹே ராம் 2000 தமிழ்

இந்தி
சேம்பியன் 2000 இந்தி
ஆளவந்தான் 2001 தமிழ்/இந்தி தமிழ்-இந்தி இருமொழி படம்
லிட்டில் ஜான் 2002 தமிழ், இந்தி, ஆங்கிலம்
புனர்ஜனி 2002 மலையாளம்
23 மார்ச் 1931: சாகீத் 2001 இந்தி
லேசா லேசா 2003 தமிழ்
முல்லவல்லியம் தென்மவம் 2003 மலையாளம்
கங்காமா 2003 இந்தி
கரம் மசாலா 2005 இந்தி
கியோன் கி 2005 இந்தி
சுப் சுப் கே 2006 இந்தி
கீர்த்தி சக்கரா 2006 மலையாளம்
கிரீடம் 2007 தமிழ்
மிசன் 90 நாட்கள் 2007 மலையாளம் திரைக்கதை எழுதியுள்ளார்.
பூல் பூலையா 2007 இந்தி
காஞ்சிவரம் 2008 தமிழ்
அசாப் பிரேம் கி கசாப் கஹானி 2009 இந்தி
அக்ரோச் 2010 இந்தி
டீச் 2012 இந்தி
கிரிஷ் 3 2013 இந்தி
கீதாஞ்சலி 2013 மலையாளம்
24 2016 தமிழ் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய பிலிம்பேர் விருது [3][4]
ஜனதா கேரேச் 2016 தெலுங்கு
வனமகன் 2017 தமிழ்
மெர்க்குரி 2018 தமிழ்
பாரத் அனே நேனு 2018 தெலுங்கு இந்த படத்தில் ரவி கே. சந்திரன் இணைந்து பணிசெய்திருந்தார்.
பேன் கான் 2018 இந்தி
பேட்ட 2019 தமிழ்
மரக்கர்: அரபிகடலிண்டே சிம்கம் 2020 மலையாளம் தயாரிப்பிற்குப்பின்.
ஆச்சார்யா 2020 தெலுங்கு படபிடிப்பு நடைபெறுகிறது.

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]