காஞ்சிவரம்
| காஞ்சிவரம் | |
|---|---|
| இயக்கம் | பிரியதர்சன் |
| தயாரிப்பு | சைலேந்திர சிங் |
| கதை | பிரியதர்சன் |
| இசை | எம். ஜி. ஸ்ரீக்குமார் |
| நடிப்பு | பிரகாஷ் ராஜ் சிரேயா ரெட்டி சம்மு |
| படத்தொகுப்பு | அருண் குமார் |
| வெளியீடு | செப்டம்பர் 12, 2008 |
| ஓட்டம் | 112 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காஞ்சிவரம் 2008 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 60 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு நெசவாளரின் கதையின் மூலமாக வர்க்க விரிசல்கள், தனிமனித ஆசைகள், தலைமைத்துவ உள் முரண்கள் போன்ற கருப்பொருள்களை இப்படம் சித்தரிக்கிறது. பிரியதர்சன் இயக்கி பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி நடித்த இக்கலைப்படம், 2008ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதுகளைப் பெற்றது.
நடிப்பு
[தொகு]- பிரகாஷ் ராஜ் - வேங்கடம்
- சிரேயா ரெட்டி - அன்னம்
- சம்மு - தாமரை
விருதுகள்
[தொகு]விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "நெய்தலும் நெய்தல் நிமித்தமுமாக 'தறி'கெட்டுப் போகும் நெசவாளியின் கதை. 'நெய்பவனுக்குத் துணி சொந்தமில்லை' என்னும் கசப்பான யதார்த்தத்தின் மீது நெய்யப்பட்ட காஞ்சிப் பட்டு!... எந்த சமரசமும் செய்துகொள்ளாமல், ஒரு வரலாற்றை அழகான, இயல்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் நிமிர்ந்து நிற்கிறார் ப்ரியதர்ஷன்!" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Southern films score big at National Awards". தி இந்து. Archived from the original on 2009-09-10. Retrieved 2009-09-07.
- ↑ http://www.frontlineonnet.com/stories/20091009262009200.htm
- ↑ "சினிமா விமர்சனம்: காஞ்சிவரம்". விகடன். 2009-03-25. Retrieved 2025-06-01.