தமிழச்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழச்சி
இயக்கம்எஸ். அசோகன்
தயாரிப்புகே. பி. சண்முகசுந்தரம்
கதைஎஸ். அசோகன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. சி. திவாகர்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்கே. பி. எஸ். பிலிம் இன்டர்நேஷனல்
வெளியீடுசூன் 29, 1995 (1995-06-29)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தமிழச்சி 1995 ஆம் ஆண்டு நெப்போலியன் மற்றும் ரஞ்சிதா நடிப்பில், தேவா இசையில், எஸ். அசோகன் இயக்கத்தில், கே. பி. சண்முகசுந்தரம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4].

கதைச்சுருக்கம்[தொகு]

கிராமத்துக் கதைகளை சேகரித்து தொகுப்பதற்காக ஒரு கிராமத்திற்கு வருகிறார் பத்திரிகையாளர் ரேவதி (ரேவதி). அந்தக் கிராமத்தில் உள்ள பெண்ணான தமிழ்செல்வி ஏழு வருடங்களாக வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருப்பதாக சொல்வதைக் கேட்டு, ஆச்சர்யமடைந்து அதன் காரணம் குறித்துத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் தமிழ்செல்வி வீட்டுக்குச் செல்கிறாள். தமிழ்செல்வி தன் சோகக்கதையை ரேவதியிடம் கூறுகிறாள்.

பெரியசாமி கவுண்டரின் (விஜயகுமார்) மகனான ராசய்யா (நெப்போலியன்) முன்கோபக்காரன். அதே கிராமத்தைச் சேர்ந்த உந்தராயர் கவுண்டர் (மோகன் நடராஜன்) பணக்காரராக இருந்தாலும் இரக்கமற்றவர். இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் ராசய்யாவை அந்தக் கிராமத்தினர் தவறாக நினைக்கின்றனர். ராசய்யா அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வியைக் காதலிக்கிறான். மற்றவர்களைப் போல் தமிழ்செல்வியும் ராசய்யாவைத் தவறாக எண்ணுகிறாள். தன் மீது மற்றவர் கூறும் குறைகள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்கும் ராசய்யா தான் ஒழுக்கமானவன் என்று தமிழ்செல்விக்குப் புரியவைக்கிறான். ராசய்யா மீதான சந்தேகம் தீர்ந்ததால் அவனை மனமார நேசிக்கிறாள் தமிழ்செல்வி. இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. ராசய்யாவின் எதிரி உந்த்ராய கவுண்டர் தமிழ்செல்வியிடம் தவறாக நடக்க முயல்கிறான். தமிழ்செல்வி அவனைக் கொன்றுவிடுகிறாள். கொலைப்பழியை ஏற்று சிறைக்குச் சென்று தமிழ்செல்வியின் மானம் காக்கிறான் ராசய்யா. ஆனால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தனக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை ஏற்று ராசய்யா சிறையில் வாடுவதுபோல், தன் வீட்டையே சிறையாக எண்ணி அடைபட்டுக் கிடைப்பதாகக் கூறிமுடிக்கிறாள்.

அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ரேவதி, மரண தண்டனையிலிருந்து ராசய்யாவை சட்டப்படிக் காப்பாற்றுவதாக தமிழ்செல்வியிடம் சத்தியம் செய்கிறார். அவர் கொடுத்த வாக்கின்படி ராசய்யாவைக் காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் வைரமுத்து மற்றும் சுப்பிரமணி[5][6].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 கரகாட்டம் மனோ, சிந்து 6:16
2 கொக்கு பறக்குதடி எஸ். பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா 4:45
3 கூச்சம் மிகுந்த பொண்ணு சிந்து 5:06
4 மாரியம்மா கிருஷ்ணராஜ் 3:07
5 மனுசன் நாக்கு சாகுல் அமீது, மனோ 4:45
6 வாயா உயரமான ஆளு மனோ, எஸ். ஜானகி 4:38

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழச்சி".
  2. "தமிழச்சி". Archived from the original on 2011-01-01. 2019-03-09 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  3. "தமிழச்சி". Archived from the original on 2007-08-15. 2019-03-09 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  4. "தமிழச்சி".
  5. "பாடல்கள்".
  6. "பாடல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழச்சி_(திரைப்படம்)&oldid=3486513" இருந்து மீள்விக்கப்பட்டது