தமாரா குணநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமாரா குணநாயகம்
Tamara Kunanayakam
செனீவா ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி
பதவியில்
9 ஆகத்து 2011 – 2013
குடியரசுத் தலைவர்மகிந்த ராசபக்ச
முன்னையவர்சேனுக்க செனிவிரத்தின
கியூபாவிற்கான இலங்கைத் தூதர்
பதவியில்
2009–2011
குடியரசுத் தலைவர்மகிந்த ராசபக்ச
திரு ஆட்சிப்பீடத்திற்கான இலங்கைத் தூதர்
பதவியில்
15 திசம்பர் 2011 – 2013
குடியரசுத் தலைவர்மகிந்த ராசபக்ச
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகொழும்பு, இலங்கை
முன்னாள் கல்லூரிகொழும்பு மகளிர் கல்லூரி
வேம்படி மகளிர் கல்லூரி
ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
பன்னாட்டு, மேம்பாட்டு ஆய்வுகளின் பட்டதாரி நிறுவனம்

தமாரா மணிமேகலை குணநாயகம் (Tamara Manimekhalai Kunanayakam) இலங்கை நாட்டின் அரசாங்க வெளியுறவுத்துறை நிபுணராவர். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கான இலங்கையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியாகவும், உரோமையின், ஆட்சிபீடத்திற்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தாமர, லங்கா சமச மாஜக் கட்சி மற்றும் அரசாங்க குருமார் சேவைகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்த, யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியைச் சேர்ந்த ஆங்கிலிக்க இலங்கைத் தமிழரான தந்தைக்கும்[3] பதுளையைச் சேர்ந்த இந்து இந்தியத் தமிழரான தாய்க்கும் இலங்கையில் உள்ள கொழும்பில் பிறந்தவராவார்.[3] தாமரயின் தாய்வழி தாத்தா ஞானபண்டிதன் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் மீதும் அனுதாபம் கொண்டிருந்த பதுளையில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரபல வணிகராவார்.[3]

தாமர, யாழ்ப்பாணத்தில் உள்ள வேம்படி மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்து கொழும்பு மகளிர் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார், 1972 ஆம் ஆண்டில் அவரது பத்தொன்பதாம் வயதிலேயே அவரது சகோதரருடன் இணைந்து, இலங்கையிலிருந்து வெளியேறி,  ஐரோப்பாவிற்கு சென்று குடியேறினார். தொடக்கத்தில் நெதர்லாந்துக்குச் சென்று குடியேற விரும்பினாலும் பல்வேறு காரணங்களால் சுவிட்சர்லாந்தில் சென்று குடியேறினார். அங்குள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளில் இளநிலைப் பட்டம் பெற்று செருமனி சென்று பணியாற்றினார்.[3][4] அதன் பின்னர், ஜெனீவா திரும்பி சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் பட்டதாரி நிறுவனத்தில் 1982 ம் ஆண்டில் சர்வதேச உறவுகள் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கணவரை இழந்த இவரது தாயும் மற்ற சகோதரர்களும் 1983 ம் ஆண்டில் ஜெனீவாவுக்கு இவருடன் குடிபெயர்ந்தனர்.[5]

தாமர, தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரான்சிய, செர்மானிய மற்றும் எசுப்பானிய மொழிகளில் சரளமாக பேசவும் எழுதவும் திறமை கொண்டவர்.[3][4]

தொழில்[தொகு]

1982 இல் தனது பட்டப்படிப்பை முடித்த இவர், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில் (UNDP) சேர்ந்து, 1983ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். 1983 மற்றும் 1984 ஆண்டுகளுக்கு இடையே லூத்தரன் உலக கூட்டமைப்பின் தகவலாளராகவும், கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 1983 ம் ஆண்டின் பிற்பகுதியில், வான்கூவரில் நடைபெற்ற உலக தேவாலயங்களின் மாநாட்டில் கலந்து கொண்ட லூத்தரன் உலகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இலங்கையில் நடைபெற்ற தமிழ்-விரோதக் கலவரங்களைப் பற்றி மதிப்பீடு செய்து, தொலைநகல் ஒன்றை அனுப்பியுள்ளார்,[6]

வல்வெட்டித்துறை நகரம் சூறையாடப்பட்டு மக்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக இப்போதுதான் செய்தி கிடைத்தது. திருகோணமலையில் இலங்கைகடற்படையினர் ஆயிரத்திற்கும் அதிகமானோரை கொன்றுள்ளனர். கொழும்பில் இரண்டு அகதிகள் முகாம்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் உணவுப் பொருட்கள் இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளன. UNDP கொழும்பு, NORAD கொழும்பு மற்றும் தமிழ் தகவல் மையம் லண்டன் ஆகியவை இந்த தகவல்களை அளித்துள்ளன.

இந்த தொலைநகல் ஊடகங்களுக்கும் கசிந்து, குணநாயகம் ஒரு " தமிழீழப் பிரச்சாரகர்" என்று குற்றம் சாட்டப்பட்டார்.[6] அதே போல இலங்கை கலவரங்கள் பற்றிய தகவல்களை உலகப்பார்வை என்ற அமைப்பிற்கும்  அவ்வப்போது வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார், அந்நிறுவனம் இவ்வறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனவிடம் விளக்கங்களை கேட்டது. அதற்காக ஜெயவர்த்தன, பொய்யான தகவல்களை வழங்கியதாக குணநாயகத்தை "பயங்கரவாத முகவர்" என்று முத்திரை குத்தியுள்ளார்.

குணநாயகம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், ஒஸ்லோ (1984-85) மற்றும் ஆன்டெனா இன்டர்நேஷனல், ஜெனிவா (1985-86) ஆகிய அமைப்புகளில் ஆராய்ச்சியாளராக இருந்தார். மேலும் 1985ம் ஆண்டில் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்திற்கு ஆலோசகராகவும் இருந்தார். 1986 ம் ஆண்டில் மீண்டும் லூத்தரன் உலக கூட்டமைப்பிற்குத் திரும்பி 1988 வரை அங்கு பணியாற்றினார். மார்ச் 1987 இல் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 43 ஆவது அமர்வில் உலக மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய குணநாயகம், அப்போது இலங்கையில் நிலவிய சித்திரவதைகள், காணாமல் போதல்கள், சட்டவிரோத தடுப்புக்காவல்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் பற்றி உலக ஊடகங்களில் தொடர்ந்து பேசிவந்துள்ளார்,[7][8]

குணநாயகம், 1989 முதல் 1990 வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மையத்தின் மனித உரிமை அதிகாரியாக இருந்துள்ளார். 1991 ஆம் ஆண்டில் அவர் ஹைடெல்பெர்க் இன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்டிசிப்ளினரி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார். அதே நேரத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (1991-93) ஆராய்ச்சி அதிகாரியாகவும், ப்ரெட் ஃபார் ஆல், பெர்னில் (1993-94) கொள்கை மேம்பாட்டுத் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். 1994 முதல் 2005 வரை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் முதல் அதிகாரியாக இருந்து, போரின் காரணமாக காணாமல் போனோர் தொடர்பான பிரிவுக்கு தலைமை தாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,

2007 ம் ஆண்டில் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தாமர, 2009 முதல் 2011 வரை கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்தார். 2011 ஆம் ஆண்டில், ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், உரோமையின், ஆட்சிபீடத்திற்கான இலங்கைத் தூதுவராகவும் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டார். மேலும் ஆகஸ்ட் 2011 இல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்குழுவின் தலைவராக மற்றும் அறிக்கையாளராகவும், அதன் 58வது அமர்வில் ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான மாநாட்டில் (UNCTAD) ஆசிய குழு நாடுகளின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[9]

மற்ற நடவடிக்கைகள்[தொகு]

தாமர, ஜெனீவாவில் உள்ள பலதரப்பு அறக்கட்டளையின் நிறுவனராகவும் பாரிஸில் உள்ள உலகமயமாக்கல் கண்காணிப்பு, ஜெனீவாவில் உள்ள தெற்கு குழு மற்றும் ஜெனீவாவின் ஆசிய-பசிபிக் பணிக்குழு ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.[1] சர்வதேச நாணய அமைப்பு, முதலீட்டுக்கான பலதரப்பு ஒப்பந்தம், ஐக்கிய நாடுகளின் சீர்திருத்த செயல்முறை மற்றும் யூகோஸ்லாவியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான தலையீடுகள் உட்பட சர்வதேச உறவுகள் குறித்த பல ஆய்வறிக்கைகளை எழுதி வெளியிட்டுள்ளார். போரினால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகள், அரசாங்கங்களுக்கு எதிரான கண்காணிப்புகள் என பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "New Permanent Representative of Sri lanka Presents Credentials to Director-General of UNOG". ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம். 9 August 2011. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
  2. "Ambassador Tamara Kunanayakam presents credentials to Pope Benedict XVI". The Permanent Mission of Sri Lanka to the United Nations Office at Geneva. 22 December 2011. Archived from the original on 25 February 2012. பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Jeyaraj, D. B. S. (31 March 2012). "Tamara Kunanayakam: Fighting for Lanka in Geneva". Daily Mirror (Sri Lanka): pp. 9–10. http://www.dailymirror.lk/opinion/17727-tamara-kunanayakam-fighting-for-lanka-in-geneva.html. 
  4. 4.0 4.1 "Alumna takes up position as the new Permanent Representative of Sri Lanka to the UN in Geneva". Graduate Institute of International and Development Studies. 24 August 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Jeyaraj, D. B. S. (30 March 2012). "Tamara Kunanayakam: Fighting for Lanka in Geneva". dbsjeyaraj.com. Archived from the original on 8 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. 6.0 6.1 War Or Peace in Sri Lanka. Ramdas Bhatkal. 
  7. Kunanayakam, Tamara (March 1987). "Sri Lanka Has Failed to Remove Strutcural Causes of Violations" (PDF). Tamil Times. Vol. VI, no. 5. pp. 7, 9. ISSN 0266-4488.
  8. "Intervention by Miss Tamara Kunanayakam, World Student Christian Federation". UN COMMISSION ON HUMAN RIGHTS 43RD SESSIONS: FEBRUARY 1987. Tamilnation.org.
  9. "Ambassador Tamara Kunanayakam Elected Vice Chair of UNCTAD'S Trade and Development Board". ஏசியன் டிரிபியூன். 7 October 2011. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமாரா_குணநாயகம்&oldid=3930649" இலிருந்து மீள்விக்கப்பட்டது