தன்டர்பால்
தன்டர்பால் | |
---|---|
இயக்கம் | டெரன்ஸ் யங் |
தயாரிப்பு | கெவின் மெக்லோரி |
மூலக்கதை | தன்டர்பால் படைத்தவர் இயான் பிளெமிங் |
திரைக்கதை | ரிச்சர்ட் மைபாம் ஜான் ஹாப்கின்ஸ் |
இசை | ஜான் பாரி |
நடிப்பு | சான் கானரி கிளாடின் ஆகர் அடோல்போ செலி லூசியானா பலுஸி ரிக் வான் நட்டர் |
ஒளிப்பதிவு | டெட் மூர் |
படத்தொகுப்பு | பீட்டர் ஹன்ட் எர்னஸ்ட் ஹோஸ்லர் |
கலையகம் | இயான் புரொடக்சன்சு |
விநியோகம் | யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் |
வெளியீடு | திசம்பர் 9, 1965(டோக்கியோ) 29 திசம்பர் 1965 (ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய இராச்சியம்[1] ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $9 மில்லியன் |
மொத்த வருவாய் | $141.2 மில்லியன் |
தன்டர்பால் (ஆங்கில மொழி: Thunderball) என்பது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் நான்காவது படம் ஆகும். இந்த படம் 1961 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயான் பிளெமிங் என்பவரின் நாவலைத் தழுவி இயக்குனர் 'டெரன்ஸ் யங்' என்பவரால் எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தை இயான் புரொடக்சன்சு நிறுவனம் தயாரிக்க, சான் கானரி, கிளாடின் ஆகர், அடோல்போ செலி, லூசியானா பலுஸி மற்றும் ரிக் வான் நட்டர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கால நீளம் 130 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 9 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக பிரான்ஸ், இங்கிலாந்து, பஹாமாஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.
கதைக் களம்[தொகு]
ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்ட்டர் எனும் சர்வதேச கொள்ளையர்களால் திருடப்பட்ட இரண்டு அணு ஆயுதங்களை மீட்பதற்கு பஹாமாஸ் தீவிற்குச் செல்கிறார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Thunderball". Lumiere. European Audiovisual Observatory. 24 July 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 October 2020 அன்று பார்க்கப்பட்டது.