கோல்ட் பிங்கர் (திரைப்படம்)
கோல்ட் பிங்கர் | |
---|---|
இயக்கம் | ஹாய் ஹாமில்டன் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | கோல்ட் பிங்கர் படைத்தவர் இயான் பிளெமிங் |
திரைக்கதை |
|
இசை | ஜான் பாரி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டெட் மூர் |
படத்தொகுப்பு | பீட்டர் ஆர் ஹன்ட் |
கலையகம் | இயான் புரொடக்சன்சு |
விநியோகம் | யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் |
வெளியீடு | 17 செப்டம்பர் 1964(லண்டன்) 18 செப்டம்பர் 1964 (ஐக்கிய இராச்சியம்) 22 திசம்பர் 1964 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய இராச்சியம்[1] ஐக்கிய அமெரிக்கா[2] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $3 மில்லியன் |
மொத்த வருவாய் | $125 மில்லியன் |
கோல்ட் பிங்கர் (ஆங்கில மொழி: Goldfinger) என்பது 1964 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் மூன்றாவது படம் ஆகும். இந்த படம் 1959 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயான் பிளெமிங் என்பவரின் நாவலைத் தழுவி இயக்குனர் ஹாய் ஹாமில்டன் என்பவரால் எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தை இயான் புரொடக்சன்சு நிறுவனம் தயாரிக்க சான் கானரி, ஹானர் பிளாக்மேன், ஜெர்ட் ஃப்ரெப் மற்றும் ஷெர்லி ஈடன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கால நீளம் 110 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 3 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.
கதைக் களம்[தொகு]
தங்கக் கடத்தலில் ஈடுபடும் ஒரு சர்வதேசக் கும்பலைத் துப்பறியும் ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் கேனோஸ் கோட்டை வைத்திருக்கும் தங்கச் சேமிப்பை கொள்ளை போகாமல் தடுக்க முயற்சி செய்கிறார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Goldfinger". European Audiovisual Observatory இம் மூலத்தில் இருந்து 24 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190924142046/http://lumiere.obs.coe.int/web/film_info/?id=13607.
- ↑ "AFI|Catalog". https://catalog.afi.com/Catalog/moviedetails/22489.