டாக்டர் நோ
டாக்டர் நோ | |
---|---|
இயக்கம் | டெரன்ஸ் யங் |
தயாரிப்பு | ஹாரி சால்ட்ஸ்மேன் ஆல்பர்ட் ஆர் ப்ரோக்கோலி |
மூலக்கதை | டாக்டர் நோ படைத்தவர் இயான் பிளெமிங் |
திரைக்கதை | ரிச்சர்ட் மைபாம் ஜோஹன்னா ஹார்வுட் பெர்க்லி மாதர் |
இசை | மாண்டி நார்மன் |
நடிப்பு | சான் கானரி உர்சுலா ஆண்ட்ரஸ் ஜோசப் வைஸ்மேன் ஜாக் லார்ட் அந்தோணி டாசன் ஜீனா மார்ஷல் ஜான் கிட்ஸ்மில்லர் யூனிஸ் கெய்சன் பெர்னார்ட் லீ |
ஒளிப்பதிவு | டெட் மூர் |
படத்தொகுப்பு | பீட்டர் ஆர் ஹன்ட் |
கலையகம் | இயான் புரொடக்சன்சு |
விநியோகம் | யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் |
வெளியீடு | 5 அக்டோபர் 1962(ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 109 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய இராச்சியம்[1] ஐக்கிய அமெரிக்கா[2] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $1.1 மில்லியன் |
மொத்த வருவாய் | $59.5 மில்லியன் |
டாக்டர் நோ (ஆங்கில மொழி: Dr. No) என்பது 1962 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் முதலாவது படம் ஆகும். இந்த படம் 1958 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயான் பிளெமிங் என்பவரின் நாவலைத் தழுவி இயக்குனர் 'டெரன்ஸ் யங்' என்பவரால் எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தை இயான் புரொடக்சன்சு நிறுவனம் தயாரிக்க, சான் கானரி, உர்சுலா ஆண்ட்ரஸ், ஜோசப் வைஸ்மேன், ஜாக் லார்ட், அந்தோணி டாசன், ஜீனா மார்ஷல், ஜான் கிட்ஸ்மில்லர், யூனிஸ் கெய்சன் மற்றும் பெர்னார்ட் லீ ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கால நீளம் 109 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 1.1 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக லண்டன் மற்றும் ஜமைக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.
கதைக் களம்[தொகு]
ஒரு பிரித்தானிய அரசாங்க ஒற்றன் தன் காணாமல் போன தோழரைத் தேடியும் அமெரிக்கா நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு ஏற்படும் இடையூறு பற்றியும் துப்பு துலக்கும் கதையாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dr. No". Lumiere. European Audiovisual Observatory. 29 September 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "AFI|Catalog".