டி. எஸ். நந்தகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. எஸ். நந்தகுமார்
T S Nandakumar , Mridangam.jpg
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்டி. எஸ். என், பாம்பே நந்தகுமார்
பிறப்பு17 மார்ச்சு 1958 (1958-03-17) (அகவை 63)
அம்பலப்புழா, கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர், இசையமைப்பாளர், நடத்துனர், ஆசிரியர்
இசைக்கருவி(கள்)மிருதங்கம், கொன்னக்கோல், தவில், கடம் (இசைக்கருவி), கஞ்சிரா, மோர்சிங்
வெளியீட்டு நிறுவனங்கள்ஏவிஎம், கீதா, காஸ்மிக்
இணையதளம்mridangam.info

டி. எஸ். நந்தகுமார் (T. S. Nandakumar) (பிறப்பு 17 மார்ச் 1958) இவர் ஒரு பிரபலமான இந்திய பல்துறை கர்நாடக இசை தாளவாதியாவார். இவர் முதன்மையாக மிருதங்கம் இசைப்பதில் திறமையானவர். [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

டி.சங்கரநாராயணன் நந்தகுமார் (டி.எஸ்.நந்தகுமார்) மார்ச் 17, 1958 அன்று இந்தியாவின் கேரளாவின் அம்பலப்புழாவில் பிறந்தார். இவர் பாலகிருட்டிண பணிக்கருக்கும் சரஸ்வதி என்பவருக்கும் மகனாக பிறந்தார். இவர் நன்கு அறியப்பட்ட நாதசுவர கலைஞரர்களான அம்பலப்புழா சகோதரர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர். குருகுல சம்பிரதாயத்தில் கைதாவன மாதவதாசின் வழிகாட்டுதலின் கீழ் மிருதங்கம் கற்று இலய வித்வானாக புலமை பெற்றார். [2]

இவர் தனக்கு நான்கு வயதாக இருந்தபோது இசையில் வலுவான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். செம்மங்குடி சீனிவாச ஐயர், எம். டி. இராமநாதன், எஸ்.ராமநாதன், ஆர். கே. ஸ்ரீகண்டன், வெ. தட்சிணாமூர்த்தி, பீம்சென் ஜோஷி, பாலமுரளிகிருஷ்ணா, டி. என். கிருஷ்ணன், எல். சுப்பிரமணியம், என். ரமணி, கே. ஜே. யேசுதாஸ், என். இராஜம், டி. கே. கோவிந்த ராவ், நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, டி. வி. கோபாலகிருஷ்ணன், பரஸ்சால பி. பொன்னம்மாள், ஏ. கன்னியாகுமாரி, எம். சந்திரசேகரன் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் வரிசையில் இவரும் இந்திய பண்டைய கலை வடிவத்தை நிலைநாட்ட தனது வாழ்க்கைப் பணியை மேற்கொண்டார். [3] [4]

நந்தகுமார் ஒரு ஆசிரியராகவும், கலைஞராகவும் இந்திய கர்நாடக இசையை ஊக்குவித்து வருகிறார். [5] இவர் நாடு முழுவதும் பல்வேறு இசைத் திருவிழாக்களை நிகழ்த்துகிறார். [6] [7]

மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் கலைஞர்களுடன் அவர்களுடன் நல்லுறவை வளர்ப்பதற்கும் இந்தியாவிலும், வெளிநாடுகளில் லாமரின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகம், இண்டியானா பென்சில்வேனியா பல்கலைக்கழகம் போன்றவற்றில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். [8] [9] [10][11] [12] [13] [14]

நந்தகுமார் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய பாரம்பரிய இசைத்துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக சென்னை சாந்தி அறக்கட்டளையிலிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். கிளீவ்லேண்ட் தியாகராஜர் குழு வழங்கிய விருதினை பாலமுரளிகிருஷ்ணாவும் அமெரிக்காவின் இந்தியத் தூதர் நிருபமா ராவும் இவருக்கு 'சிறந்த ஆசிரியர் விருது' வழங்கினர். [15] கேலிச் சித்திரக் கலைஞர் ஆர்.கே.லட்சுமண் இவரை கௌரவித்தார்.

குறிப்புகள்[தொகு]

 1. "Devoted To Mridangam".
 2. "Bio Of TSN".
 3. "Paper Cutting for Guru of all musical things and Master of Rhythm By Times Of India".
 4. "Paper Cutting for King of Percussion in suburbs".
 5. "Accompaniment - Mridangam T S Nandakumar for Indian Concert with Grammy-nominated musician, Chandrika Tandon".
 6. "T S Nandakumar Performance in New Jersey, United States".
 7. "T S Nandakumar performance in Cleveland Festival Ohio, United States".
 8. "Article of India Journal Article in Dr K J Yesudas Concert LA".
 9. "Accompanist in Dr K J Yesudas Concert IndiaWest Article".
 10. "Concert in Canada with Dr K J Yesudas Concert Flyer".
 11. "Vivek Rajagopalan, Professional -Student Of T S Nandakumar".
 12. "Student of T S Nandakumar".
 13. "Foreign Student Of T S Nandakumar".
 14. "Student Of T S Nandakumar".
 15. Shanmukhananda fine arts sabha (2007-09-16), M S Subbulakshmi Best Teacher Award, 16 September 2007 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._நந்தகுமார்&oldid=3086833" இருந்து மீள்விக்கப்பட்டது