நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி
Nedunuri Krishnamurthy
பின்னணித் தகவல்கள்
பிறப்புஅக்டோபர் 10, 1927 (1927-10-10) (அகவை 96)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை,
தொழில்(கள்)வாய்ப்பாட்டு
இணையதளம்http://www.nedunuri.com

நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி (அக்டோபர் 10, 1927 - டிசம்பர் 8, 2014 ) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பித்தாபுரம் எனும் ஊரில் பிறந்தவர். பெற்றோர்: இராம மூர்த்தி பந்துலு, விஜயலட்சுமி.[2]. தனது தாயிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த கிருஷ்ணமூர்த்தி, 1940ஆம் ஆண்டு விழியநகரம் எனும் ஊரிலுள்ள மகாராஜா இசைக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். அக்கல்லூரியில் துவரம் நரசிங்க ராவ் என்பவரிடமிருந்து வயலினும், வாய்ப்பாட்டும் கற்றார். அதன்பிறகு 1949ஆம் ஆண்டில் ஸ்ரீபாத பினாகினியின் இசையால் கவரப்பட்டு, அவரிடம் மாணவராக சேர்ந்து இசை நுணுக்கங்களைக் கற்றார்.

இசை வாழ்க்கை[தொகு]

இவரின் மாணவர்கள்:

  • மல்லாடி சகோதரர்கள்

சிறப்புகள்[தொகு]

பெற்ற விருதுகளும் பட்டங்களும்[தொகு]

விருது / பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு வழங்கிய அமைப்பு
சங்கீத சூடாமணி 1976 ஸ்ரீ கிருஷ்ண கான சபா
சங்கீத கலாசாகரா 1980 விசாகா மியூசிக் அகாதெமி, விசாகப்பட்டினம்
சுவர விலாஸ் 1981 சுர் சிங்கர் சம்சத், பாம்பே
நாத சுதா நிதி 1981 ஸ்ரீ யக்ணவல்கா கல்ச்சுரல் அசோசியேசன், ஹைதராபாத்
கான கலா நிதி 1982 சங்கீத வித்வத் சபா, காக்கிநாடா
காயக சூடாமணி 1982 ஸ்ரீ துளசிவனம் சங்கீத பரிசத், திருவனந்தபுரம்
சங்கீத நாடக அகாதமி விருது 1986[3] சங்கீத நாடக அகாதெமி, புதுதில்லி
சப்தகிரி சங்கீத வித்வான்மணி 1987 ஸ்ரீ தியாகராஜ சுவாமி டிரஸ்ட், திருப்பதி
சங்கீத வித்வான்மணி 1989 ஸ்ரீ தியாகராஜ கலா சமிதி
சங்கீத வித்யா பாஸ்கரா 1989 ஸ்ரீராம் மியூசிக் அகாதெமி
சங்கீத கலா சாகரா 1989 கலாசாகரம், செகந்திராபாத்
நாத யோகி 1989 சங்கீதா ரசிகா சமக்யா, திருப்பதி
ஸ்ரீ கலா பிரபுர்ணா 1991 எஸ். ஆர். ஐ. பௌண்டேசேன், ஐக்கிய அமெரிக்கா
சங்கீத கலாநிதி 1991 மியூசிக் அகாதெமி, சென்னை
கான கலா பாரதி 1993 பாரதி கான சபா, அமலபுரம்
கலா நீரஜ்ஜனா புரஸ்காரம் 1995 ஆந்திர மாநில அரசு
அன்னமாச்சாரியா வித்வன்மணி 1995 SAPNA, ஐக்கிய அமெரிக்கா
கங்காதேவி உயர் குடிமகன் 1997 ஸ்ரீ சிவானந்தகுரு கல்வி மற்றும் கலாச்சார டிரஸ்ட், பீமுனிபாதம்
மாஸ்டர் எம். என். விருது 1997 வோர்ல்ட் டீச்சர்ஸ் டிரஸ்ட், விசாகப்பட்டினம்
நாத நிதி 1998 தட்டா பீதம், மைசூர்
ஹம்சா விருது 1999 மாநில பண்பாட்டு மன்றம், ஆந்திர அரசு, ஹைதராபாத்
அன்னமாச்சாரியா பாரதி 1999 சங்கீத வித்வத் சபா, காக்கிநாடா
சங்கீத ரத்னமாரா 2000 பைரவி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசிட்டி, ஐக்கிய அமெரிக்கா
அன்னமாச்சாரியா சங்கீர்த்தன கிரீடி 2000 ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னமாச்சார்யா சொசைட்டி ஒப் அமெரிக்கா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தெலுங்கு தள்ளி விருது 2000 உலக தெலுங்கு கூட்டமைப்பு
சங்கீத் சாம்ராட் 2001 பாரதிய வித்யாபவன், கோயம்புத்தூர் நிலையம்
சுவர நிதி 2001 FACTS, ஆஸ்திரேலியா
பதம் அப்பாராவ் நினைவு அறக்கட்டளை விருது 2002 பதம் அப்பாராவ் நினைவு அறக்கட்டளை, பித்தாபுரம்
சங்கீத கலாசிகாமணி விருது 2011 இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

மறைவு[தொகு]

கிருஷ்ணமூர்த்தி, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று விசாகப்பட்டினத்தில் காலமானார்[4][5].

மேற்கோள்கள்[தொகு]

மூலம்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]